Header Ads



பஷிலை விட்டுக்கொக்க மறுக்கும் ராஜித்த

பஷில் ராஜ­பக் ஷ கூறிய விட­யங்­களை அன்று செவி­ம­டுத்­தி­ருந்தால் மஹிந்த ராஜ­பக் ஷ இன்றும் ஆட்­சியில் இருந்­தி­ருப்பார். ஆனால் மஹிந்த, கோத்­த­பாய கூறி­ய­வற்றை கேட்­டதன் கார­ண­மா­கவே இன்­றைய  நிலை ஏற்­பட்­டது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். சர்­வ­தே­சத்­திற்­குள்­ளேயே இலங்கை இருக்­கின்­றது.

 என்­பதை புரிந்து பசில் ராஜ­பக்ச செயற்­பட்டார். அதனைப் புரிந்­து­கொள்ளக் கூடிய ஒரே ராஜ­பக்­ச­வாக பசில் காணப்­பட்டார். ஆனால் அவர் கூறி­ய­வற்றை மகிந்த கேட்­க­வில்லை. மகிந்த கோத்தா கூறி­ய­வற்­றையே கேட்­டுக்­கொண்­டி­ருந்தார். அத­னால்தான் இந்த நிலை ஏற்­பட்­டது   என்றும்  அமைச்சர் ராஜித்த சுட்­டிக்­காட்­டினார். 

அர­சாங்க  தகவல் திணைக்­க­ளத்தில்  நேற்று  நடை­பெற்ற  வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில்  கலந்­து­கொண்ட   அமைச்சர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய  கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே    மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் 

கேள்வி: வடக்கில் காணி­களைக் கோரி மக்கள் போராடி வரு­கின்­றனர். எனினும் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அண்­மையில் வடக்­கிற்கு சென்­றி­ருந்த பசில் ராஜ­பக்ச காணி விடு­விப்­புக்கு நாங்கள் எதிர்ப்பு இல்­லை­யென தெரி­வித்­தி­ருந்தார். இது தொடர்பில்?

பதில்: காணி விடு­விப்­புக்கு மகிந்த அணியில் பசில் ராஜ­பக்ச எதிர்ப்பு இல்லை என்று தெரி­வித்­தமை வர­வேற்­கத்­தக்­கது. இது ஒரு நல்ல கூற்று இதன் பின்னர் வடக்கு மக்­களின் காணி­களை எந்தப் பிரச்­சி­னையும் இல்­லாமல் விடு­விக்­கலாம் எனக் கரு­து­கின்றோம். 

காணி விடு­விப்­புக்கு மகிந்த அணி­யி­னரே தடை­யாக இருந்து வந்­தனர். தற்­போது பசில் ராஜ­பக்ச கூறி­யுள்ள விடயம் எமக்கு உற்­சா­கத்தை தரு­கி­றது.  பசில் ராஜ­பக்ச கூறிய விட­யங்­களை அன்று கேட்­டி­ருந்தால் மகிந்த ராஜ­பக்ச இன்றும் ஆட்­சியில் இருந்­தி­ருப்பார். ஆனால் மகிந்த கோத்­த­பாய கூறி­ய­வற்றை கேட்­டதன் கார­ண­மா­கவே இந்த நிலை ஏற்­பட்­டது. 

சர்­வ­தே­சத்­திற்­குள்­ளேயே இலங்கை இருக்­கின்­றது என்­பதை புரிந்து பசில் ராஜ­பக்ச செயற்­பட்டார். அதனைப் புரிந்­து­கொள்ளக் கூடிய ஒரே ராஜ­பக்­ச­வாக பசில் காணப்­பட்டார். ஆனால் அவர் கூறி­ய­வற்றை மகிந்த கேட்­க­வில்லை. மகிந்த கோத்தா கூறி­ய­வற்­றையே கேட்­டுக்­கொண்­டி­ருந்தார். அத­னால்தான் இந்த நிலை ஏற்­பட்­டது. பசில் கூறி­யதை கேட்­டி­ருந்தால் இன்றும் மகிந்த ஆட்­சியில் இருந்­தி­ருப்பார்.

கேள்வி: காணாமல் போனோர் தொடர்ந்து போராட்­டங்­களை நடத்­து­கின்­றனர். இதற்குத் தீர்வு இல்­லையா?

பதில்: நானும் இந்தப் போராட்டம் நடத்தும் காணா­மல்­போ­னோரின் உறவினர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினேன். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. தமது உறவினர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்பதையே அவர்கள் தெரிவிக்கின்றனர். அவை கண்டறியப்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டிலேயே நானும் இருக்கின்றேன். 

பஷிலும், ராஜித்தவும் சிறந்த நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.