Header Ads



பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை நீக்கவேண்டிய தேவை, சிறுபான்மையினர் எவருக்கும் கிடையாது

அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக சமஷ்டி முறைக்கு செல்ல இருக்கும் தடையை நீக்குவதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று -10- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் ஒற்றையாட்சி என்ற வார்த்தையை பயன்படுத்தி ஏனைய அனைத்து பணிகளையும் நிறைவேற்றி வருகிறது. மக்களுக்கு உண்மையான யாதார்த்தத்தை மறைக்க முயற்சித்து வருகிறது.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை நீக்க வேண்டிய தேவை சிறுபான்மையினர் எவருக்கும் கிடையாது. சிறிய தரப்பினரான அடிப்படைவாதிகளுக்கே அந்த தேவை இருக்கின்றது.

அதேவேளை அரசியலமைப்புச் சட்டத்தில் வார்த்தை முக்கியமல்ல, உள்ளார்ந்த அர்த்தமே முக்கியமானது என மக்கள் விடுதலை முன்னணி அண்மையில் கூறியது குறித்து வெட்கப்பட வேண்டும்.

வார்த்தைகள் மூலமே அரசியலமைப்பின் பந்திகள் உருவாக்கப்படுகிறது. இதனால், அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து வார்த்தைகளுக்கும் அர்த்தங்கள் உள்ளன.

தற்போது அரசியலமைப்புச் சட்டத்திருத்தமே முக்கியமான முதன்மையான போராட்டமாக மாறியுள்ளது. பிரிவினைவாதிகளின் தேவைகளை நிறைவேற்றும் நிலைமை படிப்படியாக நடந்து வருகிறது.

அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை தோற்கடிக்க உயிர் தியாகத்துடன் எதை செய்யவும் தேசிய சுதந்திர முன்னணி தயாராக இருக்கின்றது.

இந்த விடயத்தில் கூட்டு எதிர்க்கட்சி போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை எனில் அதில் தேசிய சுதந்திர முன்னணி தலையிடும். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆபத்தான விடயங்கள் குறித்து ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் மொஹமட் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.