Header Ads



பௌத்த வன்முறையால் பாதிக்கப்பட்ட, ரோஹின்ய இந்து சகோதரியின் வாக்குமூலம்


 அந்தி மாலை நேரம். வங்கதேசம்-மியான்மர் எல்லையிலுள்ள ரோஹிஞ்சா மக்கள் உணவுப் பாத்திரங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


குழந்தைகளின் முகங்களில் ஆர்வம் தென்படுகிறது. ஏனென்றால் உணவு முதலில் அவர்களுக்குதான் கொடுக்கப்படும். அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து தண்ணீரை நிரப்ப, மக்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த அறையில் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி அமர்ந்திருக்கும் இளம் கர்பிணிப் பெண் அமைதியாக சோகத்துடன் காணப்படுகிறார்.

15 வயது அனிதா தர், இந்த இளம் வயதிலேயே தனது முழு வாழ்க்கையையும் முடிந்துபோய்விட்டது போல் காணப்படுகிறார். அவர் பேசும்போது, அவரது ஆழமான வலி வெளிப்படுகிறது.

"கருப்பு முகமூடி அணிந்தவர்கள் என் கணவனை அடித்து அழைத்துச் சென்றார்கள். மறுநாள் அருகிலுள்ள காட்டில் அவர் உடல் கிடைத்தது. தலை வேறு முண்டம் வேறாக துண்டிக்கப்பட்டிருந்தது.

அவரின் கைகள் எங்கு என்றே தெரியவில்லை. வயிற்றில் கருவை சுமந்திருக்கும் நினைப்புக்கூட இல்லாமல் அங்கிருந்து ஓடிவந்தேன். மூன்று நாட்கள் வரை வயிற்றில் குழந்தையுடனும், பசியுடனும் இங்கு நடந்து வந்தேன்" என அனிதா அழு குரலில் கூறுகிறார்,

அனிதாவின் கணவர் சவரத் தொழிலாளி. இவர்களுக்கு 2016இல் திருமணம் நடைபெற்றது.

அனிதாவைப் போன்றே 160 ரோஹிஞ்சா இந்து குடும்பங்கள் மியான்மரில் இருந்து வெளியேறி அண்மையில் வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள குதுப்லோங் பகுதியை சென்றடைந்தார்கள்.

மியான்மரின் ரகைன் பிராந்தியத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்துக்களும் வசிக்கின்றனர்.

ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஏறக்குறைய நான்கரை லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்களைப் போன்றே, இந்துக்களும் மியான்மரை விட்டு வெளியேறியிருக்கின்றனர். இதுபோல் நடப்பது இதுவே முதல்முறையாகும்.

ரகைன் பிராந்தியத்தில் வசிக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்களைப் போன்றே, சிறுபான்மை இந்துக்களுக்கும் குடியுரிமை கிடையாது.

மத ரீதியிலான வன்முறையால் பாதிக்கப்பட்டு வங்கதேசத்திற்கு அடைக்கலம் புகுந்திருப்பதாக மியான்மரில் இருந்து வெளியேறிய 550 இந்துக்களில் பெரும்பான்மையானோர் கூறுகின்றனர். அந்த அகதிகளில் ஒருவரான ஷோபா ருத்ரா எப்படி நிம்மதியாக இருக்கிறார்? அவரும், அவருடைய குடும்பத்தினரும் உயிரோடு தப்பித்து வர முடிந்தது என்பதே!

"பெரிய குடும்பம் எங்களுடையது. உறவினர்கள் அனைவரும் அருகிலேயே வசித்துவந்தோம். அன்று மாலை என் சித்தப்பாவின் வீட்டை தாக்கியவர்கள், அவரை துப்பாக்கியால் சுட்டார்கள். சித்தாப்பாவின் மகளை பாலியல் வன்புணர்வு செய்த பிறகு சுட்டுக் கொன்றார்கள்.

அங்கிருந்து ஓடிவருவதைத் தவிர எங்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. நாங்கள் அனுபவித்த வலியும் வேதனையும் மிகவும் கொடுமையானது, இனி ஒருபோதும் அங்கு திரும்பிப் போகமாட்டோம், இங்கே அமைதியாக இருக்கிறோம், யாரும் எங்களை தாக்கமாட்டார்கள்." என்கிறார் ஷோபா ருத்ரா.

இந்த எல்லையோர கிராமத்தில் 25 இந்து குடும்பங்கள் வாழ்கின்றனர், இவர்கள் நாட்டிற்கு வரும் இந்த அகதிகளுக்கு தஞ்சமளித்துள்ளனர்.

உள்ளூர் சிறுபான்மை இந்துக்களை பார்க்கமுடியவில்லை என்றாலும், பிற அமைப்புகளின் உதவியுடன் கிராமத்தில் இருக்கும் ஒரு கோழிப் பண்ணையில் ஒரு பெரிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

காலையும் மாலையிலும் இங்கு உணவு சமைக்கப்படுகிறது. முகாமின் நான்கு புறங்களிலும் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களும் குழந்தைகளும் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கிராமத்தில் பிறந்த பாபுலின் குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள். இருந்தபோதிலும் அவர்கள் தங்களுடைய வீட்டில் ஐந்து அகதிகளுக்கு இடம் கொடுத்தார்கள்.

"வீடற்ற இவர்களுக்கு உதவி தேவைப்படுவதை பார்த்தோம். அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க என்னிடம் இடம் இல்லை. எனவே என்னுடைய வீட்டிலேயே அவர்களை இருக்கச் சொல்லிவிட்டேன்" என்கிறார் பாபுல்.

மியான்மரில் இருந்து வெளியேறி இங்கு வந்து சேர அகதிகளுக்கு சில நாட்கள் ஆயின. தங்கள் சொந்த நாட்டில் இருப்பிடத்தை விட்டு பிரிந்த இவர்கள், உறவினர்களையும், இருப்பிடங்களையும் இழந்தார்கள். ஆனால், இப்போது தங்களுக்கு சொந்தமில்லாத நாட்டில் அன்னிய மனிதர்களின் ஆதரவு இவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

No comments

Powered by Blogger.