October 18, 2017

முஸ்லிம் சமூகத்தை நல்லாட்சி, எட்டி உதைக்க நினைக்கிறது - கண்டுபிடித்தார் றிசாத்


இந்தியாவில் தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்து அங்கு 26 சதவீதமான வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இரண்டு சதவீத்துக்கு குறைவாக மாற்றியமைத்தது போல இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைப்பதற்கான திட்டமிட்ட சதி இடம்பெறுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டினார்.

மக்கள் காங்கிரசின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பும் கட்சிக் கினை புனரமைப்புக் கூட்டமும் கண்டியில் இன்று காலை (18) இடம்பெற்ற போது உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி மைத்திரியையும் பிரதமர் ரணிலையும்; ஆட்சிக்கு கொண்டு வருவதில் முன்னின்று உழைத்த முஸ்லிம் சமூகத்தை இந்த நல்லாட்சி ஏறெடுத்தும் பார்க்காமல் எட்டி உதைய நினைக்கின்றது. அதே போல தமது வாழ்நாள்முழுவதும் ஆட்சியிலிருந்து தாம் விரும்பியதையெல்லாம் மேற்கொள்ள முடியுமென்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருந்த கடந்த ஆட்சியின் தலைவரை வீட்டுக்கு அனுப்பிய முஸ்லிம் சமூகத்தை அந்தத் தலைவரே இப்போது அரவணைத்து, அன்பு காட்டி, உபசரிக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதுதான் கால மாற்றத்தின் ஓட்டம். 

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்து விட்டோம் என்ற மமதையிலும் அதிகார வெறியிலும் முஸ்லிம்களை அலட்சியப்படுத்திய முன்னாள் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப எமது சமூகம் நிர்ப்பந்திக்ப்படட்டது. 

அபிவிருத்திப் புரட்சிகளையும் பொருளாதார மேம்பாட்டையும் யுத்தங்களையும் வென்ற ஜப்பான், மலேசியா, துருக்கி போன்ற நாடுகளின் தலைவர்கள் ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பது போல மஹிந்தவும் இருப்பாரென சிங்கள சகோதரர்கள் அனைவரும் நம்பி இருந்தனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிங்களக் கிராமங்களின் வீடுகளிலே முன்னாள் ஜனாதிபதியின் படங்களை கொளுவிக் கடவுள் போல அவரை பூசிக்கப்பட்ட வரலாறு இருந்தது. 

முஸ்லிம் சமூகத்தையும், இஸ்லாத்தையும் புனித குர்ஆனையும் தூஷித்த,  பொது பல சேன இயக்கத்தினரின் காட்டுமிராண்டித் தனங்களை அடக்காமல் அமைதியாக இருந்து பாரத்துக்கொண்டிருந்த அந்த ஆட்சியை நாங்கள் வீட்டுக்கு அனுப்பினோம்.

முஸ்லிம் சமூகத்தின் மீது அநியாயங்கள் இழைக்கப்பட்ட போது அரசிலிருந்த நாங்கள் தட்டிக்கேட்காமல் கைகளைக்கட்டிக்கொண்டு பெட்டிப்பாம்பாக, பேசாமடைந்தைகளாக இருந்ததாக நீங்கள் நினைத்திருக்கலாம்.

நாங்கள் மஹிந்தவிடம்; சென்று அவற்றைத் தட்டிக்கேட்ட போது எம்மீது சீறிப்பாய்ந்த பல சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. வாக்கு வாதம் முற்றி, வெகுண்டெழுந்து அந்தத் தலைவர் அறையைவிட்டு வெளியேறிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. 

தற்போதைய அரசாங்கம் இந்த இரண்டரை வருட காலத்தில் எமது சமூகத்துக்காக எதையும் செய்ததென்று எவரும் மார்தட்டிச் முடியாது.

கடந்த அரசில் எங்களுடன் ஒரே அமைச்சரவையிலிருந்த மைத்திரியையும் இனிமேல் பிரமராக வருவோமா என நினைத்தம் பார்க்காத? ரணிலையும் ஆட்சிக்குக் கொண்டுவந்து அலங்கரித்ததன் பிரதிபலன்களை இன்று படிப்படியாக அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். எந்தவொரு காலத்திலும் சேர்ந்துகொள்ள முடியாத இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளை ஒரே தளத்துக்கு கொண்டு வந்து ஆட்சியமைக்க வழிசமைத்த நமது முஸ்லிம் சமூகத்தை செல்லாக் காசாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வந்து நமது சமூகத்தை கருவறுக்கும் முயற்சிகள் இடம்பெறும் அதேவேளை புதிய அரிசியலமைப்பை அவசர அவசரமாகக் கொண்டு வந்து இன்னுமொரு சமூகத்தை திருப்திப்படுத்துவதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர். 

எமது சமூகத்துக்கான அபிலாஷைகளையும் பங்குகளையும் தட்டிக்கேட்டால் துரோகிகளாக, இனவாதிகளாக முத்திரை குத்தப்படுகின்றோம். 

அப்பாவித் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத்தூண்டி, இந்த நாட்டை குட்டிச்சுவராக்கியமை பேரினவாதத் தலைவர்களினது அதிகார வெறியும் அகம்பாவங்களுமே என்பதை இந்த அரசு மீண்டும் ஞாபகத்தில் இருத்த வேண்டும்.

நம்மைப் பொருத்தளவில் இறைவனின் துணையும் நமது பிரார்த்தனைகளும் இருக்கும் வரை நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற தூய எண்ணத்தில் எதிர்காலத்தில் நமது வாக்குரிமைகளை சரியாக பயன்படுத்துவோம். இதுவே நமக்கு விமோசனம் கிடைக்க வழியேற்படுத்தும். என்றும் அமைச்சர் கூறினார்.

-சுஐப் எம்.காசிம்-

12 கருத்துரைகள்:

Appo enda parlimentla thookkinaai ?

இறைவன்மீது இருக்கின்ற நம்பிக்கை உண்மையானதாக இருக்குமானால் -

எட்டி உதைக்கின்ற மைத்திரியையும் ரணிலையும் தட்டிக்கேட்போம் ஒண்றிணைந்து -

தேவைப்பட்டால் மகிந்தவையும் இணைத்துக்கொன்டு நிபந்தனையுடன் -

வாருங்கள் வெளியே அவர்களை நீங்கள் எட்டி உதைத்துவிட்டு.......

விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம் என்ற மமதையில் முஸ்லிம்களை எட்டி உதைத்தார்கள்.
ஆகவே புலிகள் இருக்கும்வரைதான் வாழ்க்கை ஓடும் என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.
இப்போதுதான் எட்டு உதைக்க ஆரம்பித்துள்ளனர் இன்னும் இருக்கு போகப்போக!!!

Unponrorhalin ivvarana vakkira mana nilaeinaalthan v pulihalai iraivan adiyodu alitthuviddan.
Athe ponruthan matravahalayum adakkiyala ninaikinravarhalai adakkiyalum innoru sakthiyana iraivan enroruvan irukiran enpathai eppothum maranthu vidathei.

We are not greedy people like you.your people need north and east.but we need paradise after death.we dont care north east.we are already governce 2/3 entire world

இனவாதம் idiot

புது வரவு vijay , எமது உள்வீட்டுப் பிரச்சினையை நாம் எவ்வாறும் பேசி தீர்த்துக்கொள்வோம். அது மட்டுமல்ல செய்தியின் கருத்தை சரியாக புரிந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்க முடியாத நீர் எல்லாம் திறந்த வீட்டில் நுழையும் நாய் போன்ற அ...தோனி, ச...போஷ், கு....ரன் ஆகியோரின் பட்டியலில் இணைந்து கொண்டீர் போலும்.

கடைசியாக என்ன சொல்ல வருகிறீர்கள்.. அநியாயம் நடக்கிறது என்று தெரிந்தும் இன்னும் இந்த நல்லாட்சி எனும் இனவாத ஆட்சியில் ஒட்டிக்கொண்டு இருப்பதற்கு என்ன காரணம் சொல்ல போகிறீர்கள்? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல எல்லாவற்றையும் செய்து விட்டு பின்னர் நிர்ப்பந்திக்கப்பட்டோம் காட்டிக் கொடுத்தார்கள் என்று கோழைத்தனமாக பேசும் உங்களைப் போன்ற அரசியல் தலைவர்களால் இந்த சமூகத்திற்கு என்ன பிரயோஜனம்... முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என காங்கிரஸ் கூட்டங்களை இன்னும் இந்த சமூகம் நம்புவது இந்த சமூகத்திற்கு எப்பொழுதும் சாபக்கேடு...

@Lafir, இந்த இணையத்தின் பெயர் Jaffna-Muslim, ஆனால், இங்கு comments எழுதும் பலர் வெளி மாவட்ட முஸ்லிம்கள்.

அப்போ, இங்குள்ள அதிகமான முஸலிம்களும் (நீங்கள் உட்பட) "திறந்த வீட்டிற்குள் புகுந்த நாய்கள்" தானே.

அந்தோனி கறுப்பாடுகளுக்கு தன்னிலைக் களங்கம் புரியாதப்பா!
தளவாடியின் பக்கம் தன் மூஞ்சியைத் திருப்பி உன் விம்பத்துடன் பேசு மனச்சாட்சி உம்மைக் கோணலாக காட்டும். அப்போது புரியும் வீடு நாய் கதை.
இதற்குப் பின்னரும் நீர் இத்தளத்தில் தொடர்ந்தால் நான் குறிப்பிட்ட கறுப்பாடு நாய் என்பவை உம்மையே சாரும்.

Ajan and vijay நாங்க நாயாகவோ பேயாகவோ இருந்துட்டு போகிறோம்,அது எங்கலுக்குள்ள, நீங்க பொன்னப்பயல் மாதரி தலய போட வேண்டாம்

Vijay இனவாதம் idiot

Post a Comment