Header Ads



மோடியின் துரோகம் தொடருகிறது - முக்கிய இடங்களில் தொழுவதற்கு தடை

இந்தியாவில்  ஆக்ராவின் யமுனை நதியோரம் அமைந்துள்ள தாஜ்மஹால் வளாகத்திற்குள் ஒரு பள்ளிவாசல் உள்ளது.

உள்ளூர் முஸ்லிம்களுக்கு அப்பள்ளிவாசலில் தொழ தொல்லியல் துறையால் அனுமதி மறுக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் தொழ அனுமதிக்கப்படுகிறது.

அந்த பள்ளியில் தம் இளமை காலம் முதல் இன்றுவரை இமாமாக பணிப்புரியும் வயதான பெரியவர் ஒருவர் இருக்கிறார்.

அவருக்கு மாத ஊதியமாக ரூ 150 மட்டுமே மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. சம்பள உயர்வுக்கு பலமுறை முறையிட்டும் தொல்லியல்துறை கண்டுகொள்ளவில்லை.

சம்பள உயர்வு இல்லாத காரணத்தால் இமாம் தம்முடைய வேலையை நிறுத்தினால் தொல்லியல்துறை புதிய இமாமை பணியமர்த்தாமல் பள்ளிக்குள் தொழுகை நடத்துவதையே நிறுத்த பார்க்கிறது தொல்லியல்துறை.

உள்ளூர் முஸ்லிம்களுக்கு தொல்லியல் துறையின் சூழ்ச்சி புரிந்ததால் பள்ளிவாசலில் தொழ அனுமதி இல்லாத நிலையிலும் அந்த இமாமுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருகிறார்கள்.

இந்தியாவுக்கு தாஜ்மஹாலால் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் இருந்தும் தாஜ்மஹால் பள்ளிவாசலின் இமாமுக்கு சரியான சம்பளம் கொடுக்காத காவி மயமானது தொல்லியல்துறை.

தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள டெல்லி செங்கோட்டையில் உள்ள பள்ளிவாசலிலும் தொழுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை, தாஜ்மஹால் மட்டுமல்ல பாபர் மஸ்ஜித் விசயத்திலும் தொல்லியல் துறை நிறைய துரோகங்கள் செய்துள்ளது.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பது ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர அரசாங்க ரீதியாக இல்லவே இல்லை.

2 comments:

  1. Why does the UN disregard to arrest the Indian prime minister & notorious criminal Modi??
    He committed crimes against humanity in Gujarat & Kashmir.

    ReplyDelete

Powered by Blogger.