Header Ads



ஏனைய மதத்தவருக்கு இடையூறாக, நாம் நடந்துகொள்ளக் கூடாது - அஸ்கிரிய பீடாதிபதி

ஏனைய மதத்தவருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாம் நடந்துகொள்ளக் கூடாது. அவ்வாறு நடந்துகொண்டால் அது, தமது மதத்துக்கு அகௌரவத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

மன்னார், திருக்கேதீஸ்வரம் வீதியில் அமைந்துள்ள மாதொட்ட ரஜமகா விகாரையில் நேற்று (30) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்,

"வழிபாட்டுத் தலங்கள், தனி மனிதனுக்கு உரித்தானவை அல்ல. இவை சகலருக்கும் பொதுவானவையாகவே கருதப்படல் வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்கள் என்ற வகையில் தூய்மையான எண்ணத்துடன் அன்பை வெளிப்படுத்தி நடந்துகொள்ள வேண்டும்.

ஏனைய மதத்தவருக்கும் இனத்தவருக்கும் யாராவது தீங்கு, இடையூறுகளை ஏற்படுத்துவார்களேயானால், அது தமது மதத்தையும் இனத்தையும் அகௌரவப்படுத்துவது போலாகும். புத்தரின் போதனைகளுக்கு ஏற்ப தர்மத்தின் வழி நடப்பதுதான் நமது கடமை. அதனைச் சரியாகச் செய்யும் பட்சத்திலேயே ஆத்ம திருப்தி எமக்குக் கிடைக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.