October 07, 2017

மார்க்கம் ஊக்குவித்த கல்வியும், மார்க்கம் தடைவிதித்த கல்வியும்..!!

ஒரு மாணவன் பாலர் பாடசாலையிலிருந்து முதலாம் வகுப்புக்குச் சென்று அ,ஆ படித்து இரண்டாம் மூன்றாம் வகுப்பு சித்தியடைந்து ஐந்தாம் ஆறாம் வகுப்பு என சென்று க.பொ.த சா.த பரீட்சையில் தோற்றி அதிலும் சித்தியடைந்து அதன் பின் தனக்கு பொருத்தமான ஒரு துறையை தெரிவு செய்து அதில் க.பொ.உ.த பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்று அங்கு 4 வருடங்கள் கல்வி கற்று குறித்த ஒரு துறையில் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு வெளியாகி தனது துறையில் தொடர்ந்து பணியாற்றுகிறார்.

உதாரணமாக மருத்துவரை எடுத்துக் கொள்வோம்.அவர் மேற்சொன்ன முறைப்படிக் கற்று தகுந்த பயிற்சிகளையும் பெற்று பின் தமது கடமைகளை தொடர்கிறார்.

இதுவே மேற்சொல்லப்பட்ட முறை தவறி மருத்துவம் செய்வது எவ்வாறு? இலகு வழியில் மருத்துவம்,மருத்துவத்தின் அடிப்படைகள், நீங்களும் டாக்டராகலாம் போன்ற புத்தகங்களையும் சஞ்சிகைகளில் வரும் ஆக்கங்களையும் வைத்து மருத்துவம் செய்வதும் அதனைப் பிறருக்கு,கற்று கொடுப்பதும் ஷரீஅத் மற்றும் சட்ட ரீதியான மிகப்பெரும் தவறாகும்.

இது போன்று ஒவ்வொரு துறையையும் முறை தவறி படிக்கும் போதும் பிரயோகிக்கும் போது மார்க்கம் தடை செய்த தவறை செய்கிறோம் என்பதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில் அல்லாஹூதஆலா திருமறையில்

"நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்" சூறா அந்நஹ்ல்-43

இங்கு அல்லாஹ் ஒரு விடயம் பற்றிய அறிவில்லாதவர்கள் அதனை முறையாக அறிந்த அறிஞர்களிடம் சென்று முறையாக கற்பதனையே கட்டளையாக விடுக்கிறான்.

இந்தப் பின்னணியோடு இஸ்லாமிய மார்க்கத்தை முறையாகக் கற்றல் என்ற விடயத்தை நோக்கும் போது இஸ்லாமிய மார்க்கத்தைப் படிப்பதற்கும் போதிப்பதற்குமான வழிமுறையும் ஒழுங்கு முறையும் உள்ளன என்பதனை நபிகளாரின் காலம் தொட்டு இன்றுவரையுள்ள காலம் வரை அறிஞர்கள் மிகத்தெளிவாக விளக்கியள்ளனர்.

ஒருவர் முஸ்லிமாகப் பிறந்ததினால் மாத்திரம் அவர் இஸ்லாத்தைப் பற்றிய முறையான அறிவைப் பெற்றவர் என்றாகிவிடாது, என்பது போல அவர் அதனை முழுமையாகக் கற்று இஸ்லாத்தை விளங்க வேண்டும் என்பது மட்டுமல்லாது அதற்கான முறையான வழிகாட்டலும் அவருக்கு அவசியம் எனபதனையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஷரீஆவைப் படிக்க விரும்புபவர் அதை எங்கிருந்து துவங்க வேண்டும், எங்கு ஒன்றை முடிக்க வேண்டும் என்ற சிறு அறிவு கூட இல்லாது 4 ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பை வாசித்து விட்டு பத்வா கொடுக்கின்ற அவல நிலையை அறிவார்ந்த நிலையாக எந்த புத்திசாலியும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

அ,ஆ என்று ஆரம்பிக்கின்ற கல்வி போன்று அலிப் பா என்று ஆரம்பித்து பத்ஹா, கஸ்ரா, ழம்மா, சுகூன், மத்து என்று நீண்டு முதலாம் ஜூஸ்உ ஓதல் என்று ஆரம்பமாகி ஓதத் தெரிந்த மாணவராகவும் ஓரளவு மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களைப் புரிந்தவராகவும் ஷரீஆவை முறையாக கற்பதற்கு அரபு மத்ரசாக்குள் நுழைகின்ற ஒருவர் அல்குர்ஆனின் மொழியாகிய அரபு மொழியை படிப்பதற்கு கலமுன், கிதாபுன், ஹாதா, ஹாதிஹி என்ற சொற்களைப் படித்து அரபு சொல் இலக்கணமாகிய ஸர்ப் கலையைக் கற்று அரபு மொழி இலக்கணமாகிய நஹ்வு கலையைக் கற்று அரபு மொழி இலக்கியமாகிய அதப் கலையைக் கற்று அரபு சொற்கோர்ப்புக் கலை பலாகா, பதீஃ, மஆனி போன்ற கலைகளைக் கற்று அரபு மொழியை ஓரளவு முழுமையாகக் கற்று மார்க்க சட்டத்தை முழுமையாகப் படிப்பதற்கு


பிக்ஹ் கலையில் ஆரம்ப நூற்களான ஸபீனதுந் நஜா, பத்ஹுல் கரீப், உமத்துஸ் ஸாலிக், பத்ஹுல் முஈன், அல்பிக்ஹுல் மன்ஹஜி, பிக்ஹுஸ் ஸுன்னா, மஹல்லி, மஜ்மூஃ ஷர்ஹுல் முஹத்தப், அல் உம்மு...

ஹதீஸ் கலையில் அல் அர்பஊனந் நவவிய்யா, புலூகுல் மராம், ஸுபுலுஸ் ஸலாம், மிஷ்காதுல் மஸாபீஹ், முவத்தா, அஹ்மத், புஹாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவுத், நஸாஈ, இப்னு மாஜா.

தர்ஜமதுல் குர்ஆனை முழுமையாகப் படித்து விட்டு தப்ஸீர்களான ஜலாலைன், இப்னு கஸீர், தபரி, பைழாவி, குர்துபி.. என்றும் வரலாறு என்று வரும்போது கிஸஸுந் நபிய்யீன், ரஹீகுல் மஹ்தூம், துரூஸுத் தாரீஹ் அல் இஸ்லாமி, ஸீரா இப்னு ஹிஷாம் அல்பிதாயா வந்நிஹாயா, தாரீஹ் தபரி...

பிக்ஹ், ஹதீஸ், தப்ஸீர், தாரீஹ், உஸூலுல் பிக்ஹ், உலூமுல் ஹதீஸ், உஸூலுத் தஹ்ரீஜ், உஸூலுத் தப்ஸீர், தஸவ்வுப், அகீதா, மன்திக், அத்யான், அல் அப்லாக், போன்ற துறைகளையும் அவற்றின் உற்பிரிவுகள் அடங்கலாக முப்பதுக்கும் மேற்பட்ட கலைகளையும் குறைந்தது ஏழு,எட்டு வருடங்கள் தொடராகக் கற்று வருடா வருடம் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து ஏழு, எட்டு வருடங்களில் ஒருவர் ஆலிமாகப் பட்டம் பெற்று வெளியேறுகிறார்.

பட்டம் பெற்று வெளியேறுபவர்கள் எல்லோரும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும் எல்லோரும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்ப்பு வழங்க வேண்டும் ஒரே கருத்தில் ஒரே சிந்தனையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்பது மார்க்க அடிப்படையில் மட்டுமின்றி இயற்கையின் நியதிக்கே முரணானதாகும்.

இப்படியான ஓர் ஒழுங்கு முறையாக மார்க்கத்தைக் கற்று அதனடிப்படையில் பேசுவதை விடுத்து முறையற்று கண்ட கண்ட நூற்களை வாசிப்பதும், எதனை முதலில் படிக்க வேண்டும், கடைசியில் படிக்க வேண்டும், எப்போது எதனை படிக்க வேண்டும், என்ற தெளிவின்றி கண்டகண்ட நூற்களைப் படித்து விட்டு சம்பந்தமே இல்லாமல் பேசுவதனை அறிவாகவும் அவரது வாசிப்புக்கும் அவர் சார்ந்த சிந்தனைக்கு ஒத்துவராதவர்களை பிற்போக்கு வாதியென்றும் சொல்வது முறையற்ற வாசிப்பால் ஏற்பட்ட, அறியாமையில் அகந்தை கொள்ளும் அபாயகரமான நிலையாகும்.

இந்த மார்க்கம் பாதுகாக்கப்பட்டதின் அடிப்படைகளுள் ஒன்றே ஆசான், மாணவர் தொடர்பும் முறையான வழிகாட்டலும் அறுந்து விடாத அறிவிப்ளர் வரிசையுமாகும் என்பதனை ஸலபுகள் மிகத் தெளிவாகப் பேசியுள்ளனர்.

ஆனால் பல துறைகளில் ஒழுங்கு முறையாக செயற்படும் நமது சமூகம் ஷரீஆத் துறை என்று வருகின்ற போது மாத்திரம் இரண்டு நாட்களிலும் ஐந்து நாட்களிலும் மார்க்கத்தை படித்து விட்டு மார்க்கப் பேச்சாளர் ஆகுவதும், அலிப், பா தெரியாதவர்களெல்லாம் பத்வா கொடுப்பதும் முன்னோர்களைத் திட்டித் தீர்ப்பதும் முறையற்ற குதர்க்கம் புரிவதும் உலமாக்களின் மாமிசத்தை சுவைத்து சாப்பிட்டு விட்டு அதனையே பெருமையாகப் பேசி ஏப்பமும் விட்டு விட்டு அதிலே பேரானந்தம் கொள்கின்ற அவல நிலையும் அரங்கேறிவருகின்றது.

நவீன கால இஸ்லாமிய சிந்தனையாளர் ஷெய்க் அல் கஸ்ஸாலி சொல்வது போல "இன்று உலக சுக போகங்களில் குதூகலிக்கிறான், மனம் திருந்தி நாளை மார்க்கம் படிக்கப் போகிறான், நாளை மறுதினம் இமாம்களை தூற்ற ஆரம்பிக்கிறான், அதன்பின் தன் மனோ இச்சைப் பிரகாரம் பத்வா வழங்குகிறான்"

இதுதான் இன்றைய எமது சமூகத்தின் மிகப்பெரும் துரதிஷ்டவச நிலையாகும்.

பயனுள்ள கல்வியோ பர்ளு கிபாயாவான துறைகளோ ஷரீஆத் துறையோ எதுவாயினும் முறையான வழிகாட்டல், அறிஞர்களின் ஆலோசனை, தரம் வாய்ந்த நூற்கள் அரசாங்கத்திடமோ சமூகத்திடமோ அங்கிகரிக்கப்பட்ட கலாசாலைகள் மூலம் கற்று அதனடிப்படையில் ஒவ்வொருவரும் அவரவரது துறையில் பணியாற்றி சமூகத்துக்கு தொண்டாற்றுவதே போற்றத்தக்க, பயனுள்ள தஃவாவும் முதன்மையான, மிக முக்கியமான கடமையுமாகும்.

குறிப்பு - அரபுக்கலாசாலைகளின் பழங்கால பாடப்புத்தகங்கள், அதி கூடுதலான அரபுக்கலாசாலைகள் பற்றிய மீள் பரிசீலனை அவசியம் என்பதனையும் தாண்டி முறையான கல்வி முறை பற்றிய எனது கருத்தை மாத்திரமே இங்கு பதிந்துள்ளேன்.

By - Shk TM Mufaris Rashadi.

5 கருத்துரைகள்:

My dear brother in Islam ... Every sect in Islam (SHIA.. Tareeka. Tablet.. Jamat Islamic.. Sltj.. Ihwanee and many other groups) They have their schools learning step by step as you have mentioned. Their Ulema teach their students this way. They learn Arabic.. Quran.. Hades Fiqhi.. Seera. All but each one follow different books from their desiers scholars or selected books. Some time same books from one muhaddith but with different interpretations.. Yet they differ from each other... Tell me whom a lay man can trust and follow? Since all of them have ulema spent time to get knowledge in the same way you have mentioned.

As of my knowledge..We should follow Only the Ulema thoes who stick to the QURAN and SUNNAH in the same way as it was understood and PRACTICED by SALAFUS.SALIHEENS ( sahabaa.. tabieen and tabah tabieens). Religion is not to compromise with groups who hold on to subuhaat and sahawaat ( shirk and Bida) . So not only learning but it should be in accordance with the way of SALADS. MAY ALLAH GUIDE US IN THE PATH OF SALAFUS SALIHEENS.

What you mean by way of SALADS ? 😃.
Even salafi Aalims like Sheikh Usaimaeen, Sheikh Bin Baaz, Sheikh Albani etc... have different opinions in many Fatwas. I have a kitab in which a Saudi Aalim say they have difference of opinion in more than 500 Fiqh issues.

Dear brother.. for learned Muslim Aqeeda is the main.. All those scholars you have named are in one Aqeeda.. that was followed by Salfus Saliheens.. And not the Aqeeda of SHIA ,HWARIJ, MUTAZILA,JAHMIYA,SOOFIYYA OR OTHER DEVIATED Today's groups who are the breeds of above groups. I m telling to follow the path of salafs.. sahabaa.. But for you it is a fun.. MAY ALLAH GUIDE you me and others in the path of Salafus Saliheens.
Please get to know who are Salafus Saliheens before opposing them. Only SHIA and HAWARIJ OPPOSED THEM IN THE PAST. But today too some of their inheritance exist.

Read my comments carefully. I didn't criticise them. I said even they have different opinions in Fiqh issues. That's all.
I know who is salafus Saliheen. And I know today's modern salafis too.
MashaAllah.
Many friends of mine studied Fiqh under the guidance of Sheikh Salih Fawzan (hafilahullah) in Madina. They don't brand anyone kafir because of ihthilaf.
I agree with you in Aqeedha matter. We should oppose bathil Aqeedha.
Hope you got my point.
No Misunderstanding please.

I typed this Laughing 😃 icon because you have typed SALADS for SALAFS in your first comment.

I didn't make fun of those respected ulamas.
May Allah swt forgive all of us.

நீங்கள் இங்கே குறிப்பிட்ட இமாம் கஸ்ஸாலி ஒரு சூபித்துவ வாதியா?

Post a Comment