Header Ads



பேஸ்புக்கில் மாணவியின் புகைப்படம், நீதிகேட்டு வீதிக்குவந்த பெண்கள்


(மெட்றோ)

காத்­தான்­கு­டியில் மாணவி யொரு­வரின் புகைப்­ப­டம் சமூக வலைத்­த­ளங்­களில் பிர­சு­ரிக்­கப்­பட்­ட­மையை கண்­டித்தும் பாதிக்­கப்­பட்ட மாண­விக்கு நீதி­கோ­ரியும் காத்­தான்­கு­டியில் நேற்று திங்­கட்­கி­ழமை மாலை ஆர்ப்­பாட்­ட­மொன்று நடை­பெற்­றது.

பெண்­க­ளுக்­கான வலு­வூட்­ட­லுக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான அமைப்பின் தலை­வியும் காத்­தான்­குடி நகர சபை முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான சல்மா ஹம்­சாவின் ஏற்­பாட்டில் பெண்­க­ளுக்­கான வலு­வூட்­ட­லுக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான அமைப்பின் அலு­வ­ல­கத்­துக்கு முன்னால் இந்த ஆர்ப்­பாட்டம் நடை­பெற்­றது.

மாண­விகள் மற்றும் பெண்­களின் புகைப்­ப­டங்­களை அநா­வ­சி­ய­மாக சமூக வலைத்­த­ளங்கள் மற்றும் முக நூல் பக்­கங்­களில் பிர­சு­ரிப்­பதை கண்­டிப்­ப­தாக இந்த ஆர்ப்­பாட்­டத்தின் போது தெரி­விக்­கப்­பட்­ட­துடன், காத்­தான்­கு­டியில் மாண­வி­யொ­ரு­வரின் புகைப்­ப­டங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் பிர­சு­ரித்­த­மை­யையும் இதன் போது ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டோர் கண்­டித்­தனர்.

சமூக வலைத்­த­ளங்­களில் காத்­தான்­குடி மாண­வி­யொ­ரு­வரின் புகைப்­ப­டங்­களை பிர­சு­ரித்த மாண­வனை கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்­து­மாறும் இதன் போது வலி­யு­றுத்­தினர்.

இந்த ஆர்ப்­பாட்டம் தொடர்பில் கருத்து தெரி­வித்த பெண்­க­ளுக்­கான வலு­வூட்­ட­லுக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான அமைப்பின் தலை­வியும் காத்­தான்­குடி நகர சபை முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான சல்மா ஹம்சா கூறு­கையில், ”காத்­தான்­கு­டியில் கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் மாணவி யொரு­வரை திரு­மணம் செய்­வ­தாகக் கூறி அம் மாண­வியை காத­லித்த காத்­தான்­கு­டியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் குறித்த மாண­வியை புகைப்­படம் எடுத்து சமூக வலைத்­த­ளங்­களில் பிர­சு­ரிக்க செய்து விட்டு தலை­மை­றை­வா­கி­யுள்ளான்.

இதனால் அந்த மாண­வியும் அந்த மாண­வியின் குடும்­பமும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே, இது தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரை சந்­தித்து விட­யங்­களை தெரி­வித்­துள்ளேன்.

இந்த மாண­வியை அவ­மா­னப்­ப­டுத்தி அந்த மாண­வியின் புகைப்­ப­டங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் பிர­சு­ரித்து விட்டு தலை­ம­றை­வா­கி­யுள்ள குறித்த மாண­வனை கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தி சரி­யான தண்­டனை வழங்­கப்­படல் வேண்டும் என்­ப­துடன் இவ்­வா­றான கீழ்த்­த­ர­மான செயல்­களை செய்­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அத்­துடன் இவ்­வா­றான பெண்­களின் புகைப்­ப­டங்­களை எடுத்து சமூக வலைத்­த­ளங்­களில் பிர­சு­ரிப்­பதும் பெண்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றை­யாகும்.

இதன் மூலம் பெண்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­கின்­றார்கள். இவைகள் கண்­டிக்­கப்­ப­டு­வ­துடன் இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.