Header Ads



சீன- சிறிலங்கா உறவு குறித்துப் பேச, அமெரிக்காவுக்கு உரிமையில்லை – பேராசிரியர் திஸ்ஸ

சிறிலங்காவுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் சிறிலங்கா கடற்படை நடத்திய காலி கலந்துரையாடலில் பங்கேற்ற அமெரிக்க கடற்படையின் அதிரடிப்படை 73 மற்றும் மேற்கு பசுபிக் விநியோக குழுவின் தளபதி றியர் அட்மிரல் டொன் கப்ரியேல்சன், சீனாவுடன் உறவுகளை வைத்துள்ள நாடுகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதன் நோக்கங்களில் வெளிப்படைத்தன்மை கிடையாது என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து கொழும்பில் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண,

‘சிறிலங்காவுக்கு உத்தரவிடும் பாணியில் அமெரிக்கா கருத்துக்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்துள்ளது.

அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரியான றியர் அட்மிரல் டொன் கப்ரியேல்சன் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து கண்டனத்துக்குரியது.

சிறிலங்காவுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையிலான உறவு தொடர்பாக,  இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு, அமெரிக்க இராணுவத்துக்கு எந்த உரிமையும் கிடையாது” என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.