Header Ads



ஈரானுடன் முறுகலுக்கு தயாராகும் ட்ரம்ப்


அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட அணு திட்டத்தினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் கைவிடுவார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த உடன்படிக்கையை அவர் உறுதிப்படுத்த தவறும் பட்சத்தில், ஈரானுக்கு எதிரான பொருளாதார தடையினை மீளவும் அமுல் செய்வதா என்பது குறித்து அமெரிக்க காங்கிரஸ் தீர்மானிக்கும்.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான உடன்படிக்கையை ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒருமுறை ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும்.

ஏற்கனவே ஜனாதிபதி இரண்டு முறை இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தில் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மற்றிஸ் போன்ற உயர்மட்ட ஆலோசகர்கள் இந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையினை கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1 comment:

  1. Now try to turn the world from North Korita to Iran.

    ReplyDelete

Powered by Blogger.