Header Ads



சிங்கப்பூரில் இலங்கை, முஸ்லிம்களின் விவகாரம்


'இலங்கையில் முஸ்லிம் சமுகம் வரலாறு நெடுகிலும் ஏனைய இனத்தவர்களுடன் ஒற்றுமையாக, வாழ்ந்திருக்கின்றார்கள். தேசத்திற்கும், மானுடர்களுக்கும் நன்மை செய்கின்ற பங்காளிகளாக வரலாறு இவர்களை பதிவு செய்திருக்கின்றது. அந்நியர்களினால் இந்த நாடு கைப்பற்றப்பட்ட போது போத்துக்கேயர், ஒல்லாந்து காலப் பிரிவுகளிலும் அதன் பின்னர் ஆங்கிலேயர் காலப் பிரிவிலும் முஸ்லிம்கள் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் இந்த நாட்டின் முன்னேற்றங்களில் இவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்புக்கள் என்றுமே இல்லாதிருக்கவில்லை' என்று கலாநிதி அஷ;nஷய்க் அலவி ஷரீப்தீன் தெரிவித்தார். 

இஸ்லாமியக் கல்வி, விஞ்ஞானக் கலாச்சார சர்வதேச நிறுவனமும், சிங்கப்பூர் இஸ்லாமிய சங்கமும் சேர்ந்து கடந்த 2017 ஒக்டோபர் 13 – 14 ஆகிய தினங்களில் சிங்கப்பூரில் 'சமாதானக் கலாச்சாரத்தை உருவாக்குவதில் முஸ்லிம்களின் பங்கு' எனும் கருப்பொருளில் சர்வதேச மகாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தன. இம் மகாநாட்டில் உலகில் பல நாடுகளிலிருந்தும் துறைசார் அறிஞர்கள் கலந்து கொண்டு தம் கருத்துக்களை சமர்ப்பித்தனர். இம் மகாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலைபற்றி பேசும்படி கலாநிதி அலவி ஷரீப்;தீன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.

பல நாடுகளின் இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் பல்கலைக் கழகங்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள் கலந்து கொண்ட இச்சர்வதேச மகாநாட்டில் முஸ்லிம் உலகும், முஸ்லிம்களும்  எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அவற்றுக்கான ஆய்வுகளும், கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. 

கலாநிதி அலவி ஷரீப்தீன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் 'காலனித்துவ ஆட்சியின் கடைசிக் காலப் பகுதியில் 1915ம் ஆண்டு முஸ்லிம்கள் மீது, நடாத்தப்பட்ட தாக்குதலே முஸ்லிம் சமுகம் பாரியளவில் முதன் முதலில் எதிர்கொண்ட தாக்குதலாகும். இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது வடகிழக்கில் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் 1985முதல் 2009ம் ஆண்டு தமிழ் பயங்கரவாதக் குழுக்கள் அழித்தொழிக்கப்;படும்வரை தொடர்ந்தன. இக்காலப் பிரிவில்  ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களும், கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த முஸ்லிம்களின் உயிர்களும் அழித்தொழிக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இன்றுவரை அகதி முகாம்களில் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்றனர். இவர்களது பிரச்சினைகளுக்கு இன்னமும் ஆக்கபூர்வமான தீர்வுகள் வழங்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து, நாடு புனர்நிர்மாணத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் 2014 முதல் சில இனவாதிகளால் முஸ்லிம்கள்; மீதும் தாக்குதல்கள் கட்டவிழ்த்துள்ளன. இத்தாக்குதல்களினால் இன்று முஸ்லிம் சமுகத்தின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. வன்செயல்களுக்கெதிரான சமத்துவம் சாந்தி, சமாதானம் விரும்பும் முஸ்லிம், முஸ்லிம் அல்லாத தனிமனிதர்களுடனும் அமைப்புக்களுடன் சேர்ந்து ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். இஸ்லாமிய அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் அரசியல்வாதிகள் எல்லாம் சில்லறைப் பிரச்சினைகளினை அடிப்படையாக வைத்து முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பிளவுகளையும், பிரச்சினைகளையும் உருவாக்க வழியமைக்கக் கூடாது. இதனால் முஸ்லிம் சமுகம் அதிகமாகப் பாதி;க்கப்படுகின்றது. பௌத்த மதத்தின் சமாதானத் தூதினைத் திரிபடையச் செய்து வன்செயல்களைத் தூண்டி விடுபவர்களை இனங்கண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதும், மேலும் இவ்வாறான சிந்தனைகள் பரவாமல் தடுப்பதுவும் காலத்தின் அவசியத் தேவை எனத் தெரிவித்தார். 

சமூகங்களுக்கிடையில் சமாதானம், சகிப்புத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை, புரிந்துணர்வு என்பவைகளை ஊக்குவிப்பதற்காக, அரசாங்கம், சர்வதேச, சுதேச, உள்ளூர் நிறுவனங்கள் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. பல சமய சமூக நிறுவனங்கள் இதில் முன்னின்று உழைக்கின்றன. இதில் முஸ்லிம்களும் பெரும் பங்கெடுத்து உழைக்கின்றனர். அனர்த்தங்களின் போது முஸ்லிமல்லாதோருக்கு உதவுவது, அவர்களுக்கு குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பது, புரிந்துணர்வு கலந்தரையாடல்களில் ஈடுபடுவது போன்றவைகளை முஸ்லிம் தனியாட்களும், நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் சக சமூகங்களுக்கிடையே சாந்தி, சமாதானம், புரிந்துணர்வுகள் கட்டியெழுப்பப்படுகின்றன. இம்முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். 

இம் மகாநாடு உலகிலுள்ள இஸ்லாமிய நிறுவனங்களி;ன் சகவாழ்வு, சகிப்புத்தன்மை, சமாதானம் ஆகியவைகளை ஊக்குவிக்க வேண்டுமென்றும், பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்களை பல சமுகங்கள் மத்தியில் ஊக்குவி;த்து பொதுவான புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதில் முன்னணி வகிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தது.

இம்மகாநாட்டில் கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்களுடன் காத்தான்குடி அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி கல்விப் பணிப்பாளர் அஷ;nஷய்க் அக்ரம் அபூபக்கர் (நழீமி) அவர்களும் பார்வையாளராகக் கலந்து கொண்டார். 

No comments

Powered by Blogger.