Header Ads



இலங்கையில் இப்படியும், பிரச்சினை நடக்குது

விஷப் பாம்பு ஒன்றை போத்­த­லுக்குள் அடைத்து அதை தனது எதி­ரி­யான நபர் ஒரு­வரின் வீட்­டுக்குள் எறிந்து விட்டுச் சென்ற சம்­பவம் ஒன்று நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ள­தாக அளவ்வ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

அளவ்வ பிர­தே­சத்தைச் சேர்ந்த இரு கிரா­மத்­த­வர்கள் மத்­தியில் நீண்ட கால­மாக மோதல்கள் இடம்­பெற்று வந்­துள்­ளன. இதன் கார­ண­மாக பல்­வேறு மோதல்கள் நிலவி வந்­த­போதும் இம்­மோ­தல்­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. இரு கிரா­மத்­த­வர்­களும் பழி­வாங்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வந்­துள்­ளனர்.

பிரச்­சி­னைக்­குள்­ளான இரு குடும்­பங்­களில் ஒரு குடும்பத் தலைவர் மற்ற குடும்­பத்­த­வரை பழி­வாங்­கு­வ­தற்கு விஷப் பாம்பு ஒன்றை பிடித்­துள்ளார். பின்னர் அதனை போத்­தலில் அடைத்து எதி­ரியின் வீட்­டுக்குள் எறிந்து விட்டுச் சென்­றுள்ளார். அதிர்ஷ்­ட­வ­ச­மாக போத்தல் உடை­ய­வில்லை.

அந்த வீட்டுக் குடும்பத் தலைவர் பாம்­பி­ருந்த போத்­த­லுடன் அளவ்வ பொலிஸ் நிலையம் சென்று முறைப்­பாடு செய்­துள்ளார்.

விஷப் பாம்பை தெஹி­வளை மிரு­கக்­காட்­சி­சா­லைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.