Header Ads



பெண்களால் தேர்தலை நிறுத்த வேண்டியேற்படும் - பாராளுமன்றத்தில் ஹக்கீம் எச்சரிக்கை

உள்ளூராட்சி சபைகளில் பெண் வேட்பாளர்களின் 25 சதவீத பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தாவிட்டால் அவர்கள் சிலவேளைகளில் நீதிமன்றம் சென்றால் தேர்தலை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எச்சரித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை மாநகர, நகர, பிரதேச திருத்தச்சட்ட மூலங்கள் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாநகர, பிரதேச, நகர திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பாக பெண்களின் பிரதிநிதித்துவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் அமைச்சரிடத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்.

உள்ளூராட்சி சபைகளுக்கான சட்டத்தில் பெண் வேட்பாளர்களுக்கான  இட ஒதுக்கீடானது நிச்சயமாக 25 சதவீம் என்ற ஏற்பாடு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. 

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவும் அதிக கவனம் செலத்த வேண்டும்.  மேலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் பெண்கள் குழுவொன்று நீதிமன்றத்தினை நாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அவ்வாறு நாடும் பட்சத்தில் மீண்டும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைமைகள் அல்லது பரிசீலிக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளன. 


இதனால் தேர்தல் தொடர்ந்தும் காலதாமதப்படுவதற்கான நிலைமையே உருவாகும். ஆகவே பெண்களுக்கான 25 சதவீதமான ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் ஏற்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டு அது உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது என்றார்.

No comments

Powered by Blogger.