Header Ads



அமெரிக்க விமானந்தாங்கி போர்க் கப்பலில், இலங்கை அமைச்சர்கள்


அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கு சிறிலங்கா அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க கடற்படையின் 11 ஆவது விமானந்தாங்கி தாக்குதல் குழுவைச் சேர்ந்த, யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கி கப்பல் தலைமையில், அதிவேகப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிரின்சிரோன், நாசகாரிக் கப்பல்களான,  யுஎஸ்எஸ் ஹவார்ட், யுஎஸ்எஸ் சூப், யுஎஸ்எஸ் பின்க்னி, யுஎஸ்எஸ் கிட் ஆகியன இன்று கொழும்பு வரவுள்ளன.

இவை கொழும்பு நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், சிறிலங்கா அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கு அமெரிக்க கடற்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய, அமெரிக்க கடற்படையின் சீ ஹோக் உலங்குவானூர்தி மூலம், அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப், அமைச்சர் மகிந்த சமரசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம், கூட்டுப்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளும், சில ஊடகவியலாளர்களும், நேற்று யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நேற்று யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கி போர்க்கப்பலில், விமானங்கள், உலங்குவானுர்திகள் தரையிறக்கப்படுவது, அதன் நாளாந்த பணிகள், செயற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து இவர்களுக்கு அமெரிக்க அதிகாரிகளால் விபரித்துக் கூறப்பட்டது.


No comments

Powered by Blogger.