Header Ads



இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் குறித்தும் ஞானசாரர் இனிமேல் பேசமாட்டார்

-AAM Anzir-

பொதுபல சேனாக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான 3 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று  புதன்கிமை, 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றுள்ளது.

உலமா சபை பிரதிநிதிகள், முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் மற்றும் பாயிஸ் முஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்ற இப்பேச்சுவார்த்தையில் முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன.

இஸ்லாத்தை மோசமாகவும், முஸ்லிம்களை கேவலமாகவும் விமர்சித்துவந்த ஞானசாரர் அந்நிலையிலிருந்து தற்போது பின்வாங்கியுள்ளதை அவரது பேச்சுக்கள் மற்றும் செயற்பாட்டின் மூலம் உணரக்கிடைத்ததாக இச்சந்திப்பில் பங்கேற்றவர்கள் jaffna muslim இணையத்திடம் சுட்டிக்காட்டினர்.

மேலும் தமது தரப்பிலிருந்து, சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் முஸ்லிம்களும் பொதுபல சேனாக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டுமென ஞானசாரர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்களின் பக்கமுள்ள  நியாயத்தை புரிந்துகொள்வதற்காக றிசாத் பதியிதீனுடனும் அதுதொடர்பிலான துறைசார் நிபணர்களுடனும் பேச்சநடத்த தாம் தயாரெனவும் அதற்கான ஏற்பாட்டை செய்துதரும்படியும் பொதுபல சேனா இதன்போது முஸ்லிம் தரப்பிடம் கோரியுள்ளது.

அத்துடன் தொடர்ந்து இருதரப்பும் பேசுவதெனவும் சந்தேகங்ளை களையும் நோக்குடள் பரஸ்பரம் இருதரப்பும் வேற்றுமையிலும் ஒற்றுமைப்பட்டு செயற்படுவதெனம் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

14 comments:

  1. الحمدلالله இருந்த நிலமைக்கு எவ்வளவோ பரவாயில்லை, வேறுசிலருக்கு புகைவருவதாகவும் தகவல்???

    ReplyDelete
  2. Good signs are on the horizon and let us be vigilant too.

    ReplyDelete
  3. இதில் கழந்துகொள்ளும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நீங்கள் பேசிக்கொள்ளும் விடயங்கள் அனைத்து இலங்கை மக்களுக்கும் சென்றடையவேண்டும் குறிப்பாக பொதுபலசேனாவுன்,ஏனைய இனவாத சாமி அமைகளுடன் உடன்படும் மக்களுக்கு இந்த தெளிவுகள் சென்றடையவேண்டும் மேலும் இந்த பேச்சுவார்தையால் ஞானசாரவுக்கு ஏற்பட்ட விளக்கத்தையும்,நல்லபிராயத்தையும் அவர் தனவாயால் சிந்தனையால் பகிரங்கமாக இனவாதிகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்,அவர்மீதுள்ள வழக்குகளை எந்தக்காரணத்தாலும் வாபஸாகிவிடவேண்டாம் கோட் அவருக்கு தீர்பு சொல்லி அவர் அதில் பகிரங்கமாக மன்னிப்பு தேடும்வரை,

    ReplyDelete
  4. விதைத்த விதை தளிர்விடத்தொங்கி விட்டது அந்த தளிர் சாகடிக்கப்படனும் அதக்காக சிராஸ் நூர்டீனுக்கு துனை நிக்கவும்
    இந்தியாவில் இதே நிலை சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்தது இப்பது முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பதில்லை மற்றும் விரோதிகள் போன்று பார்க்கும் நிலை உள்ளது ஆக அல்லாஹ்வையும்,குர்ஆனையும்,ரசூல் ஸல் அவர்களையும் அவமதித்து பேசியதினால் முஸ்லிம்களின் உள்ளத்தை நோவினை செய்தவர்கள் சட்டப்படி குற்றம் நிருபிக்கப்பட்டு அல்லது பகிரங்க மன்னிப்பு கேட்டால் தான் இனி வரக்கூடிய காலங்களில் இது போன்றவர்கள் உருவாகாதிருப்பார்கள்

    ReplyDelete
  5. முதலில் இவர் அப்பாவி சகோதர இனத்தவரின் மனதில் ஏற்படுத்தியுள்ள இனவாதத்தை இவர் மூலம் எடுத்து களைய சொல்லவும். பகிரங்கமாக சொல்ல சொல்லவும்.

    ReplyDelete
  6. Good .hudayibiya agreement well example for entire mankind

    ReplyDelete
  7. ஞான மட்டும் பேசமாட்டார் தூண்டி விடுவான் கடைகள் பற்று எரியும்!மேவஸ்தானங்கள் உடைத்து நொருக்கப்படும்

    ReplyDelete
  8. இவனை நம்ப முடியாது... இது எல்லாம் தண்டனையில் இருந்து தப்புவதற்காக நடைபெறும் நாடகம்... இறுதியில் இவனது கோரிக்கை வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே...

    ReplyDelete
  9. மடச்சமூகம்! நீதிமன்றத்தில் எழுத்துமூலம் இவர் தரும்வரை நம்பக்கூடாது, இதிலிருந்து தப்பும்வரைதான் இந்த நாடகம். நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தயவு செய்து நம்பாதீர்கள்

    ReplyDelete
  10. எல்லாப் புகழும் எறைவனுக்கே

    ReplyDelete
  11. தேரரை வைத்து அரசியல் நடத்தபவர்களுக்க இது ஒரு கசப்பான விடையமாகத்தான் இருக்கும்

    ReplyDelete
  12. தேரரை வைத்து அரசியல் நடத்துபவர்களுக்கு இச்செய்தி கஸ்டமாக அமைந்திருக்கும்.

    ReplyDelete
  13. வரலாறு இத்தகைய சமரசங்களுக்கூடாகத்தான் முன்னநகர வேண்டியுள்ளது. இத்தகைய தற்காலிகமாக மூச்சுவிடக் கிடைத்த அவகாசங்களை நிரந்தர அமைதியாக்கும் காய்நகர்த்தல்தான் வெற்றிகரமான சிறுபாண்மையினரின் ராஜதந்திரம்.

    ReplyDelete

Powered by Blogger.