Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான, அளுத்கம கலவரம் மிகப்பாரதூரமானது - ஐ.நா. பிரதிநிதி கண்டனம்


-AAM. Anzir-

உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் இன்று (18) புதன்கிழமை தர்க்கா டவுனுக்கு சென்று அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கலவரத்தின் போது பௌத்த இன வன்முறையாளர்களினால் சஹீதாக்கப்பட்ட சஹ்ரானின் மனைவி தமக்கு நிகழ்ந்த அலத்தை கண்ணீருடன் ஐ.நா. அறிக்கையாளிடம் முறையிட்டுள்ளார்.

அத்துடன் இந்த கலவரத்தில் கால்களை இழந்த சகோதரர்கள், காயமடைந்தவர்கள் தமக்கு நேர்ந்த துயரத்தை எடுத்து விளக்கியுள்ளனர்.

குறிப்பாக இதுவரை அரசிடமிருந்து முறையான நட்டஈடு  கிடைக்காததை எடுத்துச் சொல்லியுள்ளனர்.

இவற்றை கவனமாகவும், கவலையுடனும் செவிமடுத்துள்ள ஐ.நா. அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், 

முஸ்லிம்களுக்கு எதிரான இக்கலவரம் பாரதூரமானது. தற்போதுதான் இதுபற்றி முழுமையாக அறிகிறேன். குறித்த சம்பவத்திற்காக கவலைப்படுகிறேன். உரிய தரப்பினருக்கு இதுபற்றி அறிவிப்பேன். மேலிடத்தில் முறையிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்றரை மணித்தியாலம் நீடித்த இச்சந்திப்கை மூத்த முஸ்லிம் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஏற்படுத்திக் கொடுத்திருந்ததை குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. May Allah Bless out brother seeras for his full involvement in most of the current issues of Sri Lankan Muslims.

    ReplyDelete
  2. ஒப்பீட்ளவில் மைத்திரி & ரணிலைவிட மகிந்த எவ்வளவோ மேல்.

    மகிந்த பதவிக்காக மயங்கியபோது - கோதபாயவினால் கெட்டவனாக ஆக்கப்பட்டான்.

    ஆனால் இவனுவ ரென்டுபேரும் - முஸ்லீம்களின் துரோகிகள். இந்த துரோகிகள் பதவிக்குவர - யார் மிகமுக்கிய காரணமாக இருந்தோமோ அவர்களையே மிதிக்க நினைக்கிற துரோகிகள்.

    இந்த நாய்களை விரட்ட - கோதபாய அற்ற மகிந்தவுடன் இணைவதே இப்போதைக்கு நமக்குப் பொருத்தம்.

    ReplyDelete

Powered by Blogger.