Header Ads



வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு, வரலாற்று ரீதியானது - ஜனாதிபதி

பாடசாலையில் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றது. ஆனால் வீடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா என்பது கேள்விக்குறியான விடயமே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

சிறுவர் தினத்தில் சிறுவர்களுக்காக ஆன்மீக ரீதியான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

அத்துடன், வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்த நாட்டின் முக்கியமான தீர்ப்பாகும். வரலாற்று ரீதியான தீர்ப்பு. மதிக்கத்தக்க வேண்டிய தீர்ப்பு. என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. தண்டனை வழங்குவதல்ல ,நிறைவேற்றவேண்டும்..

    ReplyDelete
  2. No need of your talk hang them to death, Without mercy for other culprit/all to learn a lesson... Hung..

    ReplyDelete

Powered by Blogger.