Header Ads



ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைகிறது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பின் வார இறுதி ஊடகமொன்றுக்கு சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில், ஜாதிக ஹெல உறுமய கட்சி போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரி முறையில் தேர்தல் நடத்தப்படுவதனால் எந்தவொரு கட்சியினாலும் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது. எனவே கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே ஆட்சியை கைப்பற்ற முடியும்.

இந்த புதிய தேர்தல் முறைமையை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஓரளவு வெற்றியீட்டினாலும் ஒப்பீட்டளவில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அமையாது.

இதேவேளை, மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் இந்த முறைமையை அமுல்படுத்த முயற்சிக்கப்பட்ட போதிலும் அது நடைமுறைச் சாத்தியமா என்பது கவனிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.