Header Ads



ரோஹின்யா முஸ்லிம்கள், இலங்கையில் கல்வி கற்றனரா..?

வௌிநாட்டு அகதிகளின் பிள்ளைகள், இந்நாட்டின் அரச பாடசாலைகளில் இணைந்து கொண்டனரென, சில கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை, கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கல்கிஸை பகுதியில், றோகிஞ்சா முஸ்லிம் அகதிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே, கட்சிகள் சில, இந்த அகதிகள், இந்நாட்டிலுள்ள பாடசாலைகளில் தமது பிள்ளைகளை இணைத்துக் கொண்டனரெனக் குற்றஞ்சுமத்தியுள்ளன.

“எமக்குக் கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், அவ்வாறு அரச பாடசாலைகளில் அவ்வாறான பிள்ளைகளை இணைத்துக் கொள்ளவில்லை. எமது நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், எம் நாட்டவர்கள் பலர் வௌிநாடுகளுக்கு படையெடுத்தனர். அந்நாட்டிலுள்ளோர், அதற்கு எதிர்ப்பு வௌியிடவில்லை” என்றார்.

எது எவ்வாறாயினும், “றோகிஞ்சா அகதிகளின் பிள்ளைகள், பிரபல சர்வதேசப் பாடசாலையொன்றில் கல்வி பயின்று வருகின்றனரென, சிங்கள ராவய அமைப்பு, அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.