Header Ads



மஹிந்தவின் ஆட்சியில் ஏற்பட்ட, தவறுகளுக்கு பொறுப்பேற்கிறேன் - பஸில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளுக்கு தாம் பொறுப்பேற்பதாக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மஹிந்த எடுத்த சகல தீர்மானங்களின் பின்னாலும் நாமும் உள்ளோம். ஆகவே அவரது காலப்பிரிவில் இடம்பெற்ற தவறுகளுக்கு நான் பொறுப்பேற்கின்றேன்.

மஹிந்த ராஜபக்ஸ எம்மைவிட அரசியலில் மிகுந்த அனுபவம் உள்ளவர். எனவே அவருக்கு எனது உபதேசம் அவசியமாக இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. பழிவாங்கும் படலத்தையே இந்த அரசாங்கம் அரங்கேற்றி வருகிறது.

மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கவலையடைய வேண்டியுள்ளது.

நாம் மீண்டும் பதவிக்கு வருகின்றபோது, இந்த அரசாங்கத்தைப் போன்று வைராக்கிய உணர்வுடன் செயற்படப்போவதில்லை.

மேலும், எதிர்காலத்தில் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருகின்ற போது இந்த ஆட்சியில் இடம்பெறும் பிழைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது, ஏனெனில் அவ்வாறான மோசடிகளை தற்போதே இந்த அரசு வெளிப்பட்டு வருகின்றது.” என்றார்.

1 comment:

  1. ​சென்ற தேர்தல் முடிவுகள் வௌிவருமுன்பே சமுர்த்தி அமைச்சின் வங்கிக் கணக்கில் இருந்து சுரண்டிக் கொண்டு உமது தாய்நாடான அமெரிக்காவுக்குச் சென்ற ரூபா 1500 கோடி மக்களின் பணத்தைத்திருப்பி திறைசேரிக்கு ஒப்படைத்தால் உமது பேச்சை நாம் ஓரளவுக்கு நம்புவது சாத்தியமாகலாம்.

    ReplyDelete

Powered by Blogger.