Header Ads



"பைபிள் வாங்கப் போய், குர்ஆன் வாங்கி வந்தேன்"

ஒரு நாள் இரவு தன் நிலை கொள்ளாமல், அமைதியி‎ன்றித் தவித்தாள் ஜாக்குலி‎ன் ரூத். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவள், சிறுமிப் பருவத்தில் தவறாமல் ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுக்குப் போய்க் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தாள்.

“எப்பொழுதாவது, ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டால், உடனே அருகிலிருந்த சர்ச்சுக்குப் போய், என் அப்பா இளமையில் படித்துத் தந்திருந்த ‘Lord’s Prayer’ எனும் சிறப்புப் பிரார்த்தனையைச் செய்து, ‘தேவனாகிய புனிதத் தந்தையே! எனக்கு நேரிய பாதையைக் காட்டுவீராக!’ என்று அழுது மன்றாடுவதுண்டு. அப்போதெல்லாம், பைபிளை முன் அட்டையிலிருந்து பின் அட்டைவரைப் படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு” என்று நினைவுகூரும் ஜாக்குலின், அந்த இரவுப் பதற்றத்தின்போதும், அதே பிரார்த்தனையை மண்டியிட்டுச் செய்து முடித்தாள்.

அது அவளுடைய அறியாப் பருவமன்று. அப்போது அவள் இரண்டு குழந்தைகளின் தாய்! தான் தனது மதப் பற்றை இழந்து, மனம் போன போக்கிலே நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டதாக உணர்ந்தாள். தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டுத் தான் பிறருக்கு நன்மை செய்பவளாக மாறவேண்டும் என்று கெஞ்சிக் கதறினாள்.

மறு நாள் விடிந்தபோது அவளுக்கு நிலை கொள்ளவில்லை! புத்தகக் கடையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றாள், புதிய பைபிள் பிரதியொன்றை வாங்குவதற்கு.

கடைக்குள் நுழைந்தவள், நேராக ‘Holy Books’ பகுதிக்குள் சென்று பைபிளின் பிரதியொன்றைக் கையிலெடுத்தாள். அடுத்து அவளுடைய பார்வை, அருகிலிருந்த இன்னொரு புத்தகத்தின் மீது விழுந்தது. “The Holy Quran” என்று அதனை வாசித்தபோது, அவளுடைய உடல் சிலிர்த்தது!

‘எடுத்துத்தான் பார்ப்போமே’ என்று எண்ணியவளாகக் கையிலெடுத்துப் பக்கங்களைப் புரட்டினாள். அவளுடைய பார்வையில், Jesus, Abraham, Moses, Noah, Joseph என்ற பெயர்களெல்லாம் பட்டன! ‘இந்தப் பெயர்கள்தாமே பைபிளிலும் உள்ளன!’ வியந்து நின்றவள், இன்னும் சில பக்கங்களைப் புரட்டினாள்.

ஒரு வசனம் அவள் கண்களில் பட்டது! அது -

“இந்தத் தூதர் (முஹம்மது) தன் இறைவனிடமிருந்து தனக்கு அருளப்பட்டதை நம்புகின்றார்.

அவ்வாறே (அவரைப் பின்பற்றிய) நம்பிக்கையாளர்களும். அவர்கள் அனைவரும், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், புனித வேதங்களையும்

இறைத் தூதர்களையும் நம்பிய நிலையில்,

‘நாங்கள் அவர்களுள் எவரையும் வேறுபடுத்த மாட்டோம்;

எனவே, எங்கள் இரட்சகனே! (உன் வாக்கைச்) செவியுற்றோம்;

உனக்குக் கட்டுப்பட்டோம்.

நாங்கள் உன்னிடமே மீண்டும் வரவேண்டியவர்களாயிருப்பதால்,

நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம்’ என்று கூறுகின்றனர்.” (அல்குர்ஆன் 2:285)

ஜாக்குலினின் கண்கள் வியப்பால் விரிந்தன! ‘இதுவன்றோ உண்மை வேதம்! இதன் போதனையன்றோ நேர்வழி!’ என்று வியந்தவளாக, முன்பு கையிலெடுத்த பைபிளைக் கீழே வைத்துவிட்டு, குர்ஆனை மட்டும் எடுத்துக்கொண்டு, கேஷியரிடம் காசைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

சென்ற இரவு தான் மானசீகமாகக் கெஞ்சிக் கேட்ட நேர்வழி, தற்போது தன் கையிலிருப்பதாக உணர்ந்தாள் ஜாக்குலின். ஆர்வம் பொங்கப் பொங்க, அருள்மறை அல்குர்ஆன் அறிவுச் செல்வத்தை அள்ளியள்ளிக் கொடுத்ததை உணர்ந்தாள்.

“திண்ணமாக இந்தக் குர்ஆன் மிக நேரான வழியை (மனிதர்களுக்கு) அறிவிக்கின்றது. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்வோருக்கு மாபெரும் கூலியுண்டு என்று நல்வாழ்த்தும் கூறுகின்றது.” (அல்குர்ஆன் 17:9)

இத்தகைய நேர்வழி நிறைவானதா? நிலையானதா? இதற்குப் பிறகும் இனியொரு மார்க்கம் உண்டா? என்றெல்லாம் சிந்தித்த ஜாக்குலினுக்கு, இன்னொரு வசனம் சரியான விடையை அளித்தது!

“இன்று நான் உங்களுக்கு உங்களுக்குரிய மார்க்கத்தை நிறைவாக்கி வைத்துவிட்டேன். ‘இஸ்லாம்’ எனும் நேர்வழியை மார்க்கமாக உங்களுக்காகத் தேர்ந்தெடுத்துப் பொருந்திக்கொண்டேன்.” (அல்குர்ஆன் 5:3)

அல்குர்ஆனின் அருள்வாக்குகள் மனித இனம் முழுமைக்கும் பொதுவானவை; அதன் வழிகாட்டல்தான், தான் தேடிக்கொண்டிருந்த நேர்வழியாகும் என்பது, இப்போது ஜாக்குலினுக்கு நன்றாகப் புரிந்தது.

இந்த ஞானோதயம் பிறந்தபோது, ஜாக்குலின் லண்டன் நகரத்துக் காவல் துறையில் சிறப்புக் காவலராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அதற்கு முன் பொதுப்பணித் துறையிலும், தொலைபேசி இணைப்பாளராகவும் பணி புரிந்துள்ளார்.

கிருஸ்தவர்கள் நம்பியிருந்த அதே இறைத் தூதர்கள் மீது முஸ்லிம்களும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றறிந்தபோது, ஜாக்குலின் வியந்து நின்றார்!

குர்ஆனைப் புரட்டிப் புரட்டிப் படித்து ஆராய்ந்தபோது, ‘இஸ்லாம்’ மார்க்கம் மனித குலம் முழுமைக்கும் பொதுவானது என்பதை உணர்ந்தார். மறு நிமிடமே அவரது கால்கள் லண்டனின் ‘ரீஜென்ட் பார்க்’ பள்ளிவாசலை நோக்கி நடந்தன. ஆங்கு நூற்றுக் கணக்கானோர் முன்னிலையில் ‘ஷஹாதா’ மொழிந்து முஸ்லிமாகி, ‘ஆயிஷா’ எனும் அருமைப் பெயரைப் பெற்றார்!

தற்போது ‘ஹஸன்’ என்பவரைத் தன் இல்லறத் துணைவராகப் பெற்ற ‘ஆயிஷா ஹஸன்’, தனது முழு நேரப் பணியாக இஸ்லாமிய ‘தஅவா’வைத் தேர்ந்தெடுத்து, இஸ்லாத்தை இங்கிலாந்து மக்களுக்குப் போதிக்கும் ‘தாஇயா’வாக லண்டன் ‘ரீஜென்ட் பார்க்’ மஸ்ஜிதில் பணியாற்றி வருகின்றார்!

மூன்று குழந்தைகளின் தாயாக முழுமை பெற்றுள்ள ஆயிஷா, தனக்கு இளமைப் போதில் ஏற்பட்ட மத வெறுப்பை இப்போதும் நினைவுகூர்கின்றார்:

“சிறுமிப் பருவத்தின்போது சர்ச்சுகளில் நான் கண்ட புனிதத்துவத்தை எனது வாலிபத்தில் காண முடியவில்லை! உடல் முழுதும் மறைத்துத் தலையையும் மறைத்துப் புனித உடையுடுத்திய ‘கன்னியாஸ்த்ரீகள்’ என்ற மத போதகப் பெண்கள் திரை மறைவில் நடத்திய கள்ளக் காதல் நாடகங்கள், ஓரினச் சேர்க்கை முதலான ‘செக்ஸ்’ கதைகள் என் கண்களையும் காதுகளையும் தாக்கின! மதத்தின் பெயரில் இப்படி ஒரு மாறுபாடா? என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை!”

நாளடைவில், தனது திருச்சபைத் தொடர்பின் மூலம் தானும் அது போன்ற தீமைகளில் வீழ நேரிடலாம் என்ற நிலை வந்தபோதுதான், இஸ்லாம் அவருக்கு நேர்வழியாகிக் கை கொடுத்தது என நன்றியுடன் நினைவு கூர்கின்றார் ஆயிஷா ஹஸன்.

மாமறை குர்ஆன் மறக்க முடியாத முத்திரையைத் தன் மீது பதித்துவிட்டதாகப் பெருமையுடன் கூறுகின்றார், இப்பேறு பெற்ற பெண்மணி.

தனது ஆழ்ந்த ஆய்வின் மூலம் கண்டுபிடித்த உண்மையை ஒளிவுமறைவின்றி, நம் கருத்துக்கு விருந்தாக்குகின்றார் ஆயிஷா ஹஸன் ஜாக்குலின் ரூத்:

“இயேசு மகான் இறந்து போய் அறுபத்து மூன்று ஆண்டுகள் சென்ற பின்னரே ‘பைபிள்’ எழுதப்பட்டது! அதே பைபிள் பலரால், பல முறைகள் திருத்தி எழுதப்பட்டது! இப்போது அது அதன் அசல் தன்மையை இழந்துவிட்டது! இதனை நாம் அனைவரும் அறியவேண்டும் என்று வல்ல இறைவன் அல்லாஹ் விரும்புகின்றான். இந்த உண்மையைத் தனது அருள் மறையாம் அல்குர்ஆனில் பல இடங்களில் விவரிக்கின்றான்.”

யூதர்களும் கிருஸ்தவர்களும் இறைவனால் தமக்கு அனுப்பப் பெற்ற தூதர்களை முழுமையாக மதித்து வாழாமல், அவர்களிடம் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டுத் தமது மார்க்கத்திலும் பொது வாழ்விலும் தீமையை விலைக்கு வாங்கிக்கொண்டார்கள். அதனால், இறைவனின் மன்னிப்பையும் கருணையையும் இழந்தார்கள்! எனவே, இறை வேதத்தையும் இறைத் தூதரையும் பிசகாமல் பின்பற்றுவது எத்துணை இன்றியமையாதது என்பதை விளக்க, சகோதரி ஆயிஷா ஹஸன் இறுதியாக நபிமொழி ஒன்றை நமக்கு மேற்கோள் காட்டுகின்றார்:

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: “உங்களுக்கு நான் தடுத்ததைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்! நான் செய்யும்படிக் கட்டளையிட்டவற்றில், உங்களால் முடிந்த அளவு செய்யுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தினர் அழிவைச் சந்தித்ததற்கான காரணம், அவர்கள் தம்முடைய தூதரிடம் அளவுக்கு மேற்பட்ட கேள்விகளைக் கேட்டதுவும், அவர்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாததும்தான்!” (ஆதாரம்: ‘நவவீயின் நாற்பது நபிமொழிகள்’ ).

நூல் பாகம் : இரண்டு வெளியீடு : IFT - Chennai ] -அதிரை அஹமது

10 comments:

  1. அ....தோனி மற்றும் ச.....போஸ் ஆகியோருக்கு சமர்ப்பணம்.

    ReplyDelete
  2. நம்முடைய வழியில் செல்ல முயறசிக்கினறார்ளே அவர்கள் - நிச்சயமாக நாம் அவர்களை நம்முடைய நேரான வழியில் செலுத்துவோம் . மேலும் அல்லாஹ் நன்மை செய்வோருடன் இருக்கின்றான். அல்குர்ஆன் (29:69)

    ReplyDelete
  3. Yes Lafir,
    I already got some offers from the arab agents to convert to islam for one mlion liquid cash as we as the little monthly amount. I didn't like the offer, so i have refused it. If you guys can give better offer, plz ket me know
    But think only one, some muslims in srilanka are selling Nabihal....& All......
    Islam is a business,
    Muslims culture will allow to sell and buy thier own sisters and wifes in the future

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் அங்கீகரிக்கப்பட்டவற்றை மட்டுமே உண்போம். வியாபாரம் செய்வோம். ஆனால் உமது கலாசாரமே பெண்களை காட்சிப் பொருளாக்கி போகப்பொருளாக வியாபாரத்தில் பயன்படுத்தும். எனவே உமது பெண்களை கண்காணித்துகொள்.

      Delete
    2. உங்கள் ஈனத்தரமான கருத்தை பார்த்தபின் இதை பதிவிடுகிறேன்.

      உங்களுக்கு ஆபர்தந்த அறபு ஏஜென்டை நீங்கள் இங்கு ஏன் தோலுரிக்கவில்லை?
      அது உங்கள் கற்பனை ஆபரோ என்னமோ! சரி எதிர்காலத்திற்கு போகமுன் இன்றய நிலையில் மனைவி,தாய், பிள்ளை, சகோதரி என குடும்பத்தையே சினிமா, கலை என விற்பவர்கள் இஸ்லாமிய பெண்மயைப்பற்றி பேசுவது விந்தை. மனைவி,தாய், பிள்ளை, சகோதரி என உலகின்முன்னால் ஆடவிட்டு பணம் சம்பாதிப்போருக்கு இந்த ஆபர் சிறியதே, கூத்தாடி அதிகம்சம்பாதிக்க இயலும்போது இந்த ஆபர் அந்த தரத்திற்கு வராதுதான். மேடையில், சினிமாவில்; முடிந்தவரை முக்கால் நிர்வாணமாய் ஆடவிட்டு, நடிக்கவிட்டு மற்ற ஆண்களுக்கு காமவிருந்துமூலம் காசுவசூலிக்கும் கலாச்சாரத்தால் சொந்த மகள், சகோதரி, மனைவி என எல்லோரயும் விற்பவர்கள்; பெண்களின் குரலோ, விரலோ அந்நிய வருக்கு புலப்படாதவாறு வாழ வழிவகுத்த இஸ்லாத்தை பழிப்பது காழ்ப்புணர்விண்றி வேறென்ன??????????????????

      Delete





    3. இஸ்லாத்தில் இணைய விரும்புவோருக்கு பணம் அல்ல, அடிப்படயாக ஒரேயொரு விடயம் தானாக வரணும். One batroom போய்முடிந்ததும் சொட்டும் நிலையில் முடிக்காமல் சரியாக சுத்தம்செய்ய தெரிந்திருத்தல்வேண்டும்...

      Delete
    4. Dear Imran& Lafir,

      I am a srilankan based not from India, but still i am against the cinema culture.

      Delete
    5. Mr.Anusath Chandrabal உங்களுடய விருப்பம் சினிமா, கலையை ஆதரிப்பதும் விடுவதும; இன்னொரு மார்கத்தை மிக்கேவலமாக தாக்கிப்பேசுவது உங்களுக்குப்பிடித்த வளியா? ஆபரை தட்டிவிட்டது உங்களுடய உரிமை, அதற்காக எம் உறவுகளை விற்போமென எதிர்வுகூற உங்களுக்கென்ன உரிமை உள்ளது, நான் நடப்பதை சுட்டிக்காட்டினேன். நீங்கள் உங்கள் கற்பனையையே இங்கு பதிந்துள்ளீர்கள். ஒரு பெண் இஸ்லாத்தை அறிந்து ஏற்றதை உம்மனது ஜீரணிக்கவில்லை என ஒப்புக்கொள்ளுங்கள்

      Delete

Powered by Blogger.