Header Ads



தமிழ் கைதி­களை விடு­வித்தால், கைதான இரா­ணுவத்தினரையும் விடு­விக்­க­ வேண்டும் - டிலான்

வடக்கில் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்­க­வேண்­டு­மென்றால் தெற்கில் கைது செய்­யப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை விடு­விக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  இல்­லா­விடின் வடக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படின் தெற்­கிலும் அதேபோக்கு  பின்­பற்­றப்­ப­ட­வேண்டும் என்று  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும்  இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான  டிலான்  பெரேரா தெரி­வித்தார். 

யுத்­த­கா­லத்தில்  குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக  அல்­லது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு  தெற்கில் பல இரா­ணுவ வீரர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். வடக்கில்  புலி­க­ளுடன் தொடர்பு பட்­டுள்­ள­தாக பலர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இரண்டு தரப்­பிற்கும் நியாயம் கிடைக்­க­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

வடக்கில்  அர­சியல் கைதி­களை  விடு­தலை செய்­யு­மாறு கோரி  நேற்­றைய தினம் பூரண ஹர்த்தால்  அனுஷ்­டிக்­கப்­பட்­டமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.  

இது தொடர்பில் டிலான் பெரேரா   மேலும்  குறிப்­பி­டு­கையில்:-

  தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு வலி­யு­றுத்தி  வடக்கில் முழு­மை­யான ஹர்த்தால்  அனுஷ்­டிக்­கப்­பட்­ட­தாக அறி­கின்றோம். இங்கு  ஒரு முக்­கி­ய­மான விட­யத்தை குறிப்­பிட்­டா­க­வேண்டும். 

அதா­வது  இரா­ணுவ வீரர்­களை கைது செய்து அவர்­களை பழி­வாங்­கு­வ­தாக  தெற்கில் இன­வா­திகள்  கூக்­கு­ர­லி­டு­கின்­றனர்.  அதே­போன்று  வடக்கில்   இளை­ஞர்­களை  தமிழ் அர­சியல் கைதிகள் என்ற  பெயரில் தடுத்­து­வைத்­துள்­ள­தாக   போராட்டம் நடத்­தப்­ப­டு­கின்­றது. 

இந்த இரண்டு நிலை­மை­க­ளையும் நாங்கள்  புரிந்­து­கொள்­ள­வேண்டும். தமிழ் பேசும் மக்­க­ளுக்கு அர­சியல் அதி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்ற விட­யத்தை வலி­யு­றுத்தும் தெற்கில் அர­சி­யல்­வா­தி­யான நான்  இந்த விவ­கா­ரத்­திற்கு தீர்­வாக ஒரு யோச­னையை  முன்­வைக்­கின்றேன். அதா­வது  தமிழ் அர­சியல் கைதிகள் அநீ­தி­யான முறையில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கருது அவர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்­க­ளானால்  பர­வா­யில்லை அதனை ஏற்­றுக்­கொள்வோம். 

ஆனால் அதே­நேரம்  தெற்­கிலும்  யுத்­த­கா­லத்தில்  பல்­வேறு குற்­றச்­செ­யல்­களில்  ஈடு­பட்­டுள்­ளார்கள் என்ற குற்­றச்­சாட்டு பல இரா­ணுவ வீரர்கள் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர்.  எனவே அவர்­க­ளையும்   இதே அனு­கு­மு­றையைக் கொண்டு  விடு­விக்­க­வேண்­டு­மென   கோரிக்கை விடுக்­கின்றோம்.  காரணம்  வடக்கில் அர­சியல் கைதி­களை விடு­வித்து விட்டு தெற்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை விடு­விக்­கா­விடின் பாரிய பிரச்­சினை ஏற்­பட்­டு­விடும்.  

அதே­போன்று தெற்கில் உள்­ள­வர்­களை விடு­வித்­து­விட்டு வடக்கு,  அர­சியல் கைதி­களை விடு­விக்­கா­வி­டினும்  பாரிய பிரச்­சினை ஏற்­பட்­டு­விடும் எனவே  இந்த அனைத்து  விட­யங்­க­ளையும்  உள்­வாங்கி செயற்­ப­ட­வேண்டும்.  

அந்­த­வ­கையில் வடக்கு அரசியல் கைதிகள் மீது   சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டால் தெற்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள    இராணுவ வீரர்களையும் விடுவிக்கவேண்டும். இல்லாவிட்டால் இரண்டு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.  வடக்கில் கைதிகளை விடுவித்துவிட்டு தெற்கில் விடுவிக்காவிடின் அது பிரச்சினைகளைத் தோற்றுவித்துவிடும்.

2 comments:

  1. தமிழ் கைதிகள் என்பதே தவறு முன்னாள் தமிழ் தீவிரவாதிகள் என்பதே சரி. இவர்களை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு பெருத்த அச்சுறுத்தலாக அமையும்

    ReplyDelete
  2. @Gtx, இலங்கையில் வேகமாக வளந்து வரும் ISIS முஸ்லிம் தீவிரவாதிகளை என்ன செய்வது என்ற ஆலோசனையும் தாருங்களேன்.

    ReplyDelete

Powered by Blogger.