Header Ads



ஆப்பிளை வாங்குகிறது கூகுள் என்ற, போலி செய்தியால் பரபரப்பு

"$9 பில்லியனுக்கு ஆப்பிளை வாங்குகிறது கூகுள்" என்ற தலைப்புச்செய்தி டவ் ஜோன்ஸின் நிதிநிலை செய்திப்பிரிவின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமையன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனால், அக்கட்டுரையானது ஆப்பிளின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் உயிலில் இருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டதன் மூலம் அது போலியானது என்பது தெரியவந்தது.

இச்செய்தி பதிப்பிக்கப்பட்ட இரண்டு நிமிடங்களில் நீக்கப்பட்டாலும், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு ஏற்றமே கண்டது.

"தொழில்நுட்ப பிரச்சனையின்" காரணமாக இந்த செய்தி வந்ததாகவும், அதை புறக்கணித்துவிடுமாறும் டவ் ஜோன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

எதிர்பாராத விதமாக பதிப்பிக்கப்பட்ட இப்போலிச் செய்தியில், இந்த கையகப்படுத்தலானது "உயிரோடு இருக்கும் அனைவருக்கும் ஆச்சர்யம்" என்றும், இம்முடிவுக்கு கூகுள் ஊழியர்கள் "அபாரம்" என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

"ஆப்பிளின் ஆடம்பரமான தலைமையகத்துக்கு" கூகுள் நிறுவனம் இடம்பெயருமென்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நியூஸ் கார்ப் (News Corp) என்னும் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும், அமெரிக்க செய்தி மற்றும் பதிப்புத்துறை நிறுவனமான டவ் ஜோன்ஸ், இந்த தலைப்புச் செய்திகள் நியூயார்க் நேரப்படி 09:34 மற்றும் 09:36 இடையில், தொழில்நுட்ப கோளாறின் காரணமாக பதிப்பிக்கப்பட்டதாக தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"தற்போது அவ்வனைத்து தலைப்புச் செய்திகளும் நீக்கப்பட்டுவிட்டன."

"கோளாறுக்கு வருந்துகிறோம்."

ஒரு தொழில்நுட்ப பரிசோதனையின்போது இப்பிரச்சனை நிகழ்ந்தது என டவ் ஜோன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான வில்லியம் லீவிஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.