October 31, 2017

கல்முனையை பிரிப்பதில், முஸ்லிம்களிடையே வேறுபாடு


இலங்கையின் கிழக்கே கல்முனை மாநகர சபை அதிகாரத்திற்குரிய பகுதியை பிரித்து புதிய உள்ளுராட்சி சபைகளை ஏற்படுத்துவது தொடர்பாக முஸ்லிம்களுக்கிடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.

கல்முனை மாநகர சபை பகுதியிலிருந்து தமது பிரதேசத்தை பிரித்து தனியானஉள்ளூராட்சி சபையாக உருவாக்க வேண்டும் என சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம்கள் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்கிழமை 2வது நாளாக அந்தப் பிரதேசத்தில் கடையடைப்பு அனுசரிக்கப்படுகிறது.
இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கல்முனை மற்றும் கல்முனைக்குடி பிரதேச முஸ்லிம்கள், இன்று செவ்வாய்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரிய பள்ளிவாயல் முன்பாக ஒன்றுகூடிய பெரும் எண்ணிக்கையிலான அந்த பிரதேச முஸ்லிம்கள், பிரதேச செயலகம் வரை பேரணியொன்றையும் நடத்தி பிரதேச செயலாளரிடம் கோரிக்கை மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.

இரண்டாவது நாளாகவும தொடரும் சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம்களின் போராட்டம்
கல்முனை மாநகர சபை அதிகாரத்திற்குரிய பகுதியை இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டாம். அவ்வாறு பிரிக்கப்பட்டால் நான்கு உள்ளுராட்சி சபைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் அதிகாரத்திற்குரிய பகுதி கல்முனை தமிழ் , கல்முனை முஸ்லிம் மற்றும் சாய்ந்தமருது என மூன்று சிவில் நிர்வாக ரீதியான பிரிவுகளை கொண்டுள்ளது. 65 - 70 சதவீதம் வரை தமிழ் வாக்காளர்களை கொண்டுள்ளது.

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரதேசம் தனியாக பிரிக்கப்பட்டால் கல்முனை மாநகர சபையின் அதிகாரத்தை முஸ்லிம்கள் இழந்துவிடுவர் என கல்முனை மற்றும் கல்முனைக்குடி முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

இதே கருத்தை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் கூட்டமைப்பு விடுத்திருந்தது.

இதேவேளை தமது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி அதிகாரம் கோரி சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம்களின் போராட்டம் காரணமாக இரண்டாவது நாளாக அந்தப் பிரதேசத்தின் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் சாலை மறியல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதால் கல்முனையிலிருந்து இந்த வழியாக செல்லும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் தொடர்ந்து தடைப்பட்டுள்ளன. BBC

4 கருத்துரைகள்:

வடகிழக்கு இணைப்பின் மூலம் முஸ்லிம்களுக்கு எட்டப்படும் ஆபத்துக்கு ஒப்பானதுதான் கல்முனை மாநகர சபையில் இருந்து சாய்ந்தமருதை மாத்திரம் பிரித்தெடுப்பது. இந்த விடயம் இந்தளவிட்கு பெரிதாக பூதாகாரம் ஆவதற்கு காரணம் எமது அரசியல் தலைமைகளின் சித்த விளையாட்டுக்களே.

In my opinion. Crating more division likes in Nuwaraeliya district. Not a good move because it wil brings more politicaly divided units and different different political factions. This lead to a chaose in that district in long term. In Nuwaraeliya used to be more stronger with passed minister Arumugam Thondaman. Now it is divided in to further more.
I don't know much about western province. Look in all possibility carefully and decide. One thing we all know politicians are there for there own benefits not for the people. Most of them.

Appo ninthavoril erunth karaithivu pirinthathal enna muslimgal angootamilargalodu valavillaya abdul avargalee????????

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ் ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ் வபரக்காத்துஹூ
இது சாய்ந்தமருதின் உரிமை. அவர்களே அவர்களை நிருவாகம் செய்வது எங்குமே குற்றம் இல்லையே. அவர்களின் வரிப்பணத்தில் இயங்கக்கூடிய ஒரு பிரதேச சபையால் எவ்வளவோ மக்கள் தேவைகள் பூர்த்தியாக்கப்படும் என்பது உங்களுக்கு புரையவில்லையா? அவர்கள் என்ன கண்ணுக்கு தெரியாத தென்கிழக்கு அலகையையோ அல்லது சூதான கரையோர மாவட்டத்தையோ கேட்கவில்லையே. வெறும் ஒரு பிரதேசசபைதானே.
கல்முனை மக்களே, உண்மையான முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளே தலைவர் அஷ்ரப் இருந்திருந்தால் சிலவேளை சாய்ந்தமருது ஒரு நகரசபையாகக்கூட ஆக்கப்பட்டிருக்கலாம். வேண்டாம் உங்கள் பிற்போக்கான அரசியல்.

Post a Comment