Header Ads



மகிந்த ராஜபக்சவை, தூக்கில் போடுவதே ஒரே வழி - கஜேந்திரன்

ராஜபக்ச மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என விரும்புவார்களாக இருந்தால் அவரை தூக்கில் போடுவதே ஒரே வழி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழர்களினுடைய வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களையே மிரட்டுகிறார். அத்துடன் புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பதும், வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு இல்லை என்பதும் உட்பட பல விடயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அப்போது தான் ராஜபக்ச மீது சர்வதேச விசாரணையை நடத்த முடியும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் எவரையும் தண்டிக்க விடாமாட்டேன் என கூறுவது யார்? இந்த அரசாங்கம் தான்.

எனவே ராஜபக்சவை முழுமையாக பாதுகாப்பது இந்த அரசாங்கம். தமிழ் மக்கள் மீது இன அழிப்பு செய்த ராஜபக்ச எனும் பேயை பாதுத்துக் கொண்டு தான் இல்லாவிட்டால் பேய் ஆட்சிக்கு வந்து விடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதிக்கு கறுப்பு கொடி காட்டினால் மஹிந்த மீண்டும் ஆட்சி யை பிடிப்பார். பேய்கள் சக்தி பெறும் என கூறும் கதைகள் தமிழ் மக்களை மடையர்களாக்க கூறப்படும் பேய் கதைகள் மட்டுமே.

உண்மையில் ராஜபக்ச மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என விரும்புவார்களாக இருந்தால் அவரை தூக்கில் போடுவதே ஒரே வழி .

சிவாஜிலிங்கம் ஒரு பொய்யன். மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஒரு பக்கம் அரசியல் கைதிகளுக்கு சார்பாக கறுப்பு கொடி போராட்டம் நடத்துவதாக காட்டிவிட்டு மறுபக்கத்தால் அரசியல் கைதிகளின் உறவினர்களையும் அழைத்து கொண்டுபோய் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார்.

நாங்கள் கேட்கிறோம் எதற்காக இந்த பித்தலாட்டம்? அதனை விட நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர்களுடைய பெயர்களை தவிர்த்து எங்களால் அரசியல் செய்ய இயலுமா? என கேட்டுள்ளார்.

நாங்கள் பேசும் சம்பந்தன், சுமந்திரன் யார்? இன்றைக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்து ஊதி கொண்டிருக்கும் ஆட்கள். அவர்களை பேசினால் சிவாஜிலிங்கத்திற்கு கொந்தளிப்பு வருகிறதென்றால் எதற்காக? என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.