Header Ads



மியன்மார் அகதிகளை சிறு துரும்பும், அணுகாத வகையில் பாதுகாக்க வேண்டும் - நாமல்

அமைச்சர் ராஜித சேனாரத்ன ரோகிங்ய அகதிகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இகழ்வதாக நினைத்து புகழ்ந்துள்ளார் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு அவரது ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 
மியன்மார் அகதிகள் இலங்கையில் அச்சுறுத்தப்பட்ட விடயமானது பலத்த பேசு பொருளாகவுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் இலங்கைக்கு அதிகள் வந்த போது, இன்று தாக்க வரும் பிக்குகள் அன்று எங்கிருந்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனூடாக இவர், இதன் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளார் எனும் விடயத்தை கூற வருகிறார். நாம் இனவாதிகள் என்றால், ஏன் நாம் அன்று மியன்மார் அகதிகளை சிறு துரும்பும் அணுகாத வகையில் பாதுகாக்க வேண்டும்.நாம் மியன்மார் அகதிகள் பாதுகாத்தது கூட தவறானது, இவ்வாட்சியின் நடைபெற்றதை போன்று அவர்களை தாக்கி இருக்க வேண்டுமென கூற வருகிறார்களா? பல விடயங்களில் சர்வதேசங்களை நெஞ்சை நிமிர்த்தி எதிர்த்த எங்களுக்கு இவர்களை எதிர்க்க முடிவு செய்திருந்தால், அது ஒரு பெரிய விடயமுமல்ல. 

இவ்வாட்சியில் மியன்மார் அகதிகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் அது அவர்களது ஆட்சியின் குறைபாடு. அதற்கு எம்மை கூறி தப்பிக்க வர வேண்டாம். அன்று நாம் பாதுகாத்த ஒன்றுக்கு இன்று இவ்வரசுக்கு பாதுகாப்பு வழங்க முடியாமல் திணறுவதானது இவ்வாட்சியில் இனவாதத்தின் வேரூண்றகை எந்தளது ஆழமானது என்பதை அறிந்துகொள்ளலாம். அவர்கள் இந்த நாட்டில் பல வருடங்கள் இருந்துள்ளார்கள் என்ற செய்தி கூட பலருக்கு அமைச்சர் ராஜித சேனாரத்தன கூறியே தெரிந்திருக்கும்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல முன்னாள் ஜனாதிபதியின் அருமையை இப்போது தான் மக்கள் உணர்வார்கள். அமைச்சர் ராஜித போன்றார்கள் முன்னாள் ஜனாதிபதியை இகழ்வதாக நினைத்து அவரது வாயாலேயே அவரது பெருமைகளை கூறிக்கொண்டிருக்கின்றார். உண்மை ஒரு போது அழிந்துவிடாது. முதலில் இப்படி தன்னை அறியாமல் முன்னாள் ஜனாதிபதியை புகழும் அமைச்சர் ராஜிதவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.