Header Ads



முஸ்லிம்களுக்கு அநியாயம் நிகழ்ந்துள்ளது - நாமல் ராஜபக்‌ஷ

பொதுபல சேனா அரசாங்கத்தின் ஒரு பங்காளி என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்..

முஸ்லிம்களின் கையிலிருந்த வியாபார முயற்சிகள் இன்று பறியோயுள்ளன.பொருளாதார ரீதியாக வீழ்ச்சி.அடுத்த பக்கம் பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புகள் மேற்கின் நிதியுதவியுடன் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.பொதுபல சேனாவும், ஞானசார தேரரும் மைத்திரி, ரணில், ராஜித்தவின் அரசியல் நாடகத்தின் பகுதியொன்று என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.நீதிமன்ற உத்தரவை ஞானசார தேரர் பலமுறையும் மீறினார்.

ஆனால் இந்த அரசாங்கம் கைதுசெய்யவில்லை. ஆனால், நாமலை கைதுசெய்தனர்.யானையொன்றை வைத்திருந்ததாக தேரரொருவை கைதுசெய்தனர்.எனினும் ஞானசார தேரரை கைதுசெய்யவில்லை. இந்த அரசாங்கம் பொதுபலசேனாவை பாதுகாக்கின்றது என்பதற்கு இதனைத் தவிர வேறு உதாரணங்கள் தேவைப்படாது.

இந்த அரசாங்கம் பொதுபல சேனாவின் பின்னால் இருப்பது தெளிவு. ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் சமயத் தலைவர்களுக்கான கூட்டத்தில் ஞானசார தேரரையும் இணைத்துக்கொண்டிருந்தனர்.அவர் எவ்வாறு அங்கு செல்வார்.அவர் பௌத்த தலைவரொருவர் அல்ல.மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர போன்ற மகாநாயக்க தேரர்களே பௌத்த தலைவர்கள். இந்த அரசு அவரை சமய தலைவராக மதிக்கின்றது.முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து தூரமாக்க உருவாக்கப்பட்டவது.

பொதுபல சேனாவை தாபித்தது நாம் அல்ல. அதனை உருவாக்கியது மேற்கு நாடுகள்.மேற்கின் தலையீடே இன்றுவரை உள்ளது.மேற்கு நாடுகளே நிதியுதவியும் மேற்கொண்டன. அதன் பின்னால் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிரிசேன, அசாத் சாலி போன்றோரும் உள்ளனர். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கோத்தாபய ராஜபக்ஷ கலந்துகொண்டதை வைத்து நாம் ஞானசார தேரரை உருவாக்கியதாக கூறுகின்றனர். அந்நிகழ்வுக்கு அழைப்பு விடுத்ததே ராஜித சேனாரத்ன என்பதை மறந்துவிடாதீர்கள்.  

ஞானசார தேரர் மீதான வழக்குகளை அரசாங்கம் நீக்கிக்கொள்ளப் போகின்றதா? என அவரிடம் கேட்கப்பட்ட போது,

கட்டாயம் இல்லாது செய்துகொள்வார்கள். ஞானசார தேரரை உருவாக்கியவர்களின் அரசாங்கமே பதவியில் உள்ளது. ஞானசார தேரர், மக்கள் விடுதலை முன்னணி,தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றோரும் அரசாங்கத்தின் பங்காளிகள். நாம் மாத்திரமே எதிர்க்கட்சியினர்.கட்டாயம் நீக்கிக்கொள்வார்கள்.

அரசாங்கத்துக்கு தேவையானது சிங்கள,முஸ்லிம், தமிழ் மக்களை கூறுபோட்டு நாட்டை மீண்டுமொரு யுத்தத்திற்கு கொண்டுசெல்வதற்கேயாகும். மக்கள் அதற்கு இடம்கொடுக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றனரா? ஏன் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர்..

அசாத் சாலி போன்றோர் பணத்திற்காக வாய் திறப்பவர்கள். அவர்கள் முஸ்லிம்களுக்காக போராடுபவர்கள் அல்ல. அவர்கள் இவ்வளவு நாள் போராடியும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. முஸ்லிம்களின் வியாபாரம், இளைஞர்களின் கல்வி, ஆசிரியர் பற்றாக்குறை, வேலையற்றோர் பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் தலைவர்கள் கதைப்பதில்லை. முஸ்லிம் தலைவர்களுக்கு அரசியல் என்பது ஒரு வியாபாரம். அவர்களை அதையே மேற்கொள்கின்றனர்.

புதிய தேர்தல் முறை மாற்றத்தால் முஸ்லிம்களுக்கு அநியாயம் நிகழ்ந்துள்ளது. முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்துகொண்டு ஆதரித்து வாக்களித்தனர். கிழக்கில் இதுவரை காலமும் இருந்த முஸ்லிம் தலைமைத்துவத்தை இல்லாதொழிக்கவே முஸ்லிம் தலைவர்கள் வாக்களித்தனர். முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் எமக்கு வேண்டாமென்று வாக்களித்துள்ளனர். 

றிஷாத் பதியுதீன், றவூப் ஹக்கீம் ஆகியோரும் அரசாங்கத்துக்காகவே அன்றி, முஸ்லிம்களுக்காக முன்னிற்பவர்கள் அல்ல. அவர்களின் அமைச்சுப் பதவிகளை பாதுகாத்துக்கொள்ள, எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் ஆதரிக்கின்றனர்.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் முஸ்லிம் கடைகளை தீ வைக்கவும், பள்ளிவாசல்களை தாக்கவும் ஆரம்பித்தனர்.அதற்கு நீதியான விசாரனைகளை நடத்த ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவில்லை.தர்கா நகர் விடயத்துக்கு ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவில்லை. அவ்வாறு அமைக்கப்படின் கைதுசெய்யப்படவேண்டியவர்கள் ராஜித்தவும், சம்பிக்கவும், மங்களவுமே என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.