Header Ads



பிரதமர் ரணில், உடனடியாக பதவி விலக வேண்டும் - கூட்டு எதிர்க்கட்சி

சர்ச்சைக்குரிய பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கலுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஏற்றுக்கொண்டுள்ளதால், பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பாக தேவையான தகவல்கள் வெளியாகியுள்ளதால், ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை உடனடியாக நிறுத்தி விட்டு அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி கொழும்பு பொரள்ளையில் உள்ள என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் இன்று -04- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மகிந்தானந்த அளுத்கமகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரணில் விக்ரமசிங்க தொடர்பான சாட்சியம் வெளியாகும் முன்னர் இந்த விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்க நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தகவல் வெளியிட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Yes that good he´s service enough us better completly retaire from politics.Gud bai...........

    ReplyDelete
  2. Better Send him home. He do not keep his word. We trusted him & now very fad up with him!

    ReplyDelete

Powered by Blogger.