Header Ads



மிகவும் மோசமான நிலையில், அரசியல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது - அமீர் அலி

கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் தமிழரோ அல்லது முஸ்லிமோ முதலமைச்சராக வரலாம், ஆனால் தற்போது இருந்த முதலமைச்சர் இனி வரக்கூடாது என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாஞ்சோலை மற்றும் செம்மண்னோடை கிராமத்தில் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசியலில் இருக்கும் வரை அதிகாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அழகாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நாங்கள் படித்துக்கொண்ட அரசியல், பத்து வருடத்திற்கு என்னை அசைக்க முடியாது என முன்னாள் கிழக்கு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

என்னுடைய இருபது வருட அரசியல் வாழ்க்கையில் கட்டடங்களை திறந்து வைப்பதாயின் முற்றுமுழுதாக கட்டுமானம் முடிந்த பின்னர் தான் திறந்து வைப்பேன், ஆனால் முன்னாள் கிழக்கு முதலமைச்சர் கட்டடம் கட்டி முடிப்பதற்கு முன்னரே திறந்து வைத்துவிட்டுச் செல்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமான நிலையில் அரசியல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கிழக்கு முதலமைச்சர் வந்ததும் கிழக்கு மாகாணத்தில் இருந்த யாரையும் வெளிநாட்டுக்குப் பணிப்பெண்னாக அனுப்ப மாட்டேன் என சூழூரைத்தார்.

ஆனால் கிழக்கு மாகாணத்திற்கு முதலமைச்சராக வந்ததன் பின்னர்தான் வெளிநாட்டுக்கு பணிப்பெண்கள் செல்வது அதிகரித்துள்ளது.

4,117 பட்டதாரிகளுக்கு பட்டதாரி நியமனம் கொடுத்து விட்டுதான் கிழக்கு மாகாண சபைக்குச் செல்வேன் என்று கூறினார், ஆனால் மாகாண சபை கலைந்து விட்டது, இன்னும் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவில்லை.

அரசியலில் பக்குவப்பட்டு இருந்தார் மாத்திரம்தான் நல்ல அரசியல் தலைவர்களாக பெயர் சொல்ல முடியும், முன்னாள் முதலமைச்சரின் தவறான வழிகாட்டலினால் அதன் உறுப்பினர்கள் பதவி ஆசைக்காக 13ஆவது திருத்தத்தில் கேட்கின்ற அதிகாரத்தைக் விட்டுக்கொடுப்பதற்கு தயாராக இருந்தனர் என தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. You are a best politician, sometime i firmly believe that only Mr Ameerali can be a good leader of muslim community after Ashraf

    ReplyDelete
  2. அந்நிய சமூகத்தின் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய நன்மதிப்பை இல்லாமல் செய்ததில் தற்போதையை முஸ்லிம்காங்கிரஸ் பெரும் காரணமாக அமைந்துள்ளது .ஒரு கட்சியின் தலைமை தவறு செய்யும்போது அதை விட தவறுகளை அதன் உறுப்பினர்கள் செய்வார்கள் .இந்த கட்சியின் தலைமை தேர்தலில் வெற்றியடைவதட்காக பின்பற்றப்படும் வழிமுறைகள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் மிகவும் பிழையானவை .எனவே இந்த கட்சியின் எதிர்காலம் ஒரு சிறந்த நீதியான தலைமை மாற்றத்திலேயே தங்கியுள்ளது .

    ReplyDelete

Powered by Blogger.