October 13, 2017

ஞானசாரருடன் பேசுவது உண்மையே, மஹிந்தவின் சொறிநாய்கள் அச்சப்படுகின்றன என்கிறார் ஆசாத் சாலி

ஒரு பௌத்த பிக்கு, இந்நாட்டையே பற்றவைக்கலாம் என்ற நிலை இருக்கையில் 10 சதவீதமான முஸ்லிம்கள் வாழும் இலங்கையில் பொதுபல சேனாவுடன் பேசித்தான் பிணக்குகளுக்கு தீர்வுகாண வேண்டியுள்ளதாக நுஆ கட்சியின் தலைவரும், அரசியல் பிரமுகருமான ஆசாத் சாலி jaffna muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று பொதுபல சேனாவுடன் பேசி வருகிறது. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பேச்சின் இறுதியில் இதனை அறிவிப்பதாக இருந்தபோதிலும் முன்னரே இதுபற்றிய சில தவறான தகவல்கள் வெளியாகியமையால் தற்போது இதை பகிரங்கப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளது.

பாயிஸ்  முஸ்தபா உள்ளிட்ட முஸ்லிம் சிவில், சமூக, சமயப் பிரதிநதிகள் இந்தப் பேச்சில் பங்கேற்கின்றனர்.

இலங்கையில் நாங்கள் சிங்களவர்களை பகைத்துக்கொண்டு வாழமுடியாது. வேற்றுமையிலும் நாங்கள் ஒற்றுமை கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதற்காகவே பேசுகிறோம்.

தற்போது நாட்டில் சிறிய சிறிய பௌத்த இனவாத குழுக்கள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் பெரிய பௌத்த குழுவொன்றுடன் பேசி புரிந்துணர்வுடன் செயற்படுவது அவசியமாகிறது. அதனால்தான் நாங்கள் இந்தப் பேச்சில் பங்கேற்றோம்.  மஹிந்தவின் ஆதரவாளர்கள் இதைக் கண்டு அச்சப்படுகிறார்கள். அவை சொறிநாய்கள்.

முஸ்லிம் - சிங்கள சமூகங்கள் ஒன்றுபட்டால் மஹிந்தவுக்கு அரசியல் செய்ய முடியாமல் போய்விடும். அதற்காகவே இவர்கள் இதுகுறித்து அச்சப்படுகிறார்கள்.

இதன் அர்த்தம் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுவது என்பதல்ல. அப்படி யாராவது ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறச்சொன்னால் அவர் முமீனாக இருக்கமுடியாது.

ஞானசாரரின் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கியுள்ளோம். ஞானசாரருக்கு ஹிதாயத் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

எமது இந்தப் பேச்சின் பின்னர்தான் இலங்கையிலுள்ள ரோஹின்ய முஸ்லிம்கள் பற்றி, ஞானசாராவின் பார்வை வித்தியாசமாக இருந்தது. ரோஹின்யர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஞானசாராவோ, பொதுபல சேனாவோ பங்கேற்கவில்லை.

மேலும் ஆசாத் சாலியாகிய நான் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை திட்டினாலும் நாளை சனிக்கிழமை அவருடன் ஹெலிகெப்டரில் ஒன்றாக செல்வேன். இது இரட்டைவேடமல்ல. திட்டிவிட்டு அவருடன் செல்லும் துணிவு எனக்கு இருக்கிறது.

அதுபோன்று நான் நமது சமூகத்திற்காக சாதிக்கிறேன்.

உதாரணமாக அம்பாறையில் சுனாமி வீடமைப்பு திட்டம்,  மௌலவி ஆசிரியர் நியமனம், ஏறாவூரில்  279 நமது சமூக விவசாயிகளுக்கு விமோசனம் என என்னால்முடிந்த சேவைகளை சமூகத்திற்காக செய்கிறேன்.

அத்துடன் ஜனாதிபதியுடன் அல்லது அரசு உயர் தரப்பினருடன் பேச்சுக்கு வருமாறு எனக்கு அழைப்பு வரும்போது நான் மட்டும் போகிவில்லை.

ஏனைய எமது சமூகப் பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டே போகிறேன். இதற்கு றிசாத்தையும், ஹக்கீமையும் அண்மையில் ஜனாதிபதியுடன் நான் பேச்சுநடத்த அழைத்துச்சென்றமை உதாரணம் எனவும் ஆசாத் சாலி மேலும் தெரிவித்தார்.

8 கருத்துரைகள்:

May allah guide our Ummah by right path

Islam is for everyone, forget about politics.
Allah made Umar (Rali) the Great Caliph, The Great History
According to this article and the explanation from the ACJU it seems as an appropriate and timely approach. Allah Knows best and HIS plans are different from ours

Appreciate you and small request you mind your word even if it's your enemy then they might be a became a friend of your. May Allah bless you.

Appreciate you and small request you mind your word even if it's your enemy then they might be a became a friend of your. May Allah bless you.

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் பிரச்சனைகளை முடிந்தளவு பேசிதீர்ப்பதுதான் சிறந்தவழி.இந்த பிரச்னையை கையாளும் முறை மித சிறந்தது.உங்கள் பயணத்தை தொடருங்கள். மேலும் உங்களது துணிச்சல் எல்லா அரசியல் தலைவருக்கும் வராது. ஏனனில் அரசியல் தலைவர்களை கடுமையானமுறைல் விமர்சிப்போடு மறுநாள் அவர்களுடன் சேர்த்துக்கொள்ளுவது அது ஒரு இலகுவான காரிமில்லை. ஆகவே உங்கள் பணியை தொடருங்கள் இந்தநாட்டில் நாங்கள் நிம்மதியாக வாழ பாடுபடுபவர்களுக்கு அல்லாஹ்வின் மிகப்பெரிய கூழிகிடைக்கட்டும்.

மேலும் சஹோதர்களே! எதையும் அறியாமல் புரியாமல் அவசரப்பட்டு எடுத்த எடுப்பில் ஜம்மியத்துல் உலமாவை விமர்சிக்க வேண்டாம். எல்லாப்பிரச்னைகளுக்கும் அவர்களால் பதில் சொல்லமுடியாது அவர்கள் அரசியல் வாதிகளல்ல.உங்களது தனிப்பட்ட கோபம்க்கள், பிரச்சனைகளைக் கொண்டுவந்து ஜம்மியத்துல் உலமாவை விமர்சிக்க வேண்டாம். அவர்கள் அல்லாஹுக்காக நமது சமூகத்துக்கு செய்யும் மிக பெரிய தொண்டு. அதை யாரும் இழிவு படுத்தவேண்டாம்

இது மஹிந்தவின் எழும்பு புரக்கிகள் ஒரு சில சமுக விரோதிகளின் சுயநலதுக்கு இப்படியான வீன் பலிகளை போட்டு மஹிந்தவுக்கு முஸ்லிம் மக்களின் ஊடாக நல்ல பெயர்களை ஏற்படுதுவதுக்கு முயற்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை சமுகம் இப்படியானவர்களை ஏப்போதே அடையாலம் கண்டு விட்டது ஆசாத் சாலி அவர்களை போனறவர்கள் இந்த நாடில் முஸ்லி
ம் சமுகத்தின் காவலர்கள் அல்லாஹ் இவர்களுக்கு மேன்மேலும் உதவிகளை வழங்குவானாக ஆமீன்

பொதுவாக உள்ள மீடியாவில் கருத்து பரிமாற்றம் கொஞ்சம் நாகரிகம் பேணிக்கொள்வது நல்லது சொறிநாய்கள் என்ற பதம் ஒரு மனிதனேயம் உள்ள நாகரிகம் உள்ள அரசியல் வாதிக்கு அழகானது அல்ல

சொறி நாய்களை சொறி நாய்கள் என்றுதான் சொல்ல வேண்டும் மான் குட்டி என்று சொல்ல இயலாது பிறதர் இந்த சமுக துரோகிகளுக்கு இத விட குடுதலாக சொல்ல வேண்டும்

Post a Comment