Header Ads



மனோவின் போராட்டம், நம்மவருக்கு படிப்பினை - தேர்தலை நடத்த விடமாட்டோமென சூளுரை

-Siddeque Kariyapper-

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களுடன் இன்று (22) காலையில், சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். அதன்போது நுவரெலியா மாவட்டத்தில் மேலும் நான்கு உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அவரது பங்களிப்பைப் பாராட்டினேன்.

இதன் போது அவர் என்னிடம் தெரிவித்த இன்னொரு தகவல் என்னைத் தூக்கிவாரிப் போட்டது,

“ இவைகள் மட்டும் எங்களுக்குப் போதாது, ஹங்குராங்கெத்த, கொத்மலை, வலப்பனை பிரதேசங்களிலும் மேலும் மூன்று பிரதேச சபைகள் (தமிழ் மக்களுக்காக) உருவாக்கப்பட வேண்டும். இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை உரிய மட்டத்துடன் பேசவுள்ளேன்.இந்த உள்ளூராட்சி சபைகளும் கிடைத்த பினன்ரே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுவரை தேர்தலை நடத்த விடமாட்டோம்” என்றார்.

1 comment:

  1. இதுதான் அரசியல். இப்படித்தான் அரசியல் தலைவர்கள் இருக்க வேண்டும்.

    புதிதாக உள்ளூராட்சி சபைகளை உருவாக்குதல், தொழினுட்பக்கல்லூரிகளை உருவாக்குதல், புதிய‌ பிராந்திய காரியாலயத்தை உருவாக்குதல், பல்கலைக்கழகம் உருவாக்கல், இரு உள்ளூராட்சி சபைகளுக்கிடையிலான நில ரீதியான பிணக்குக்கு தீர்வு காணல், ஆயிரக்கணக்கில் தொழில் வாய்ப்புக்களை வழங்கல். இவைதான் சாதனை அரசியல்.

    மாறாக‌,

    பாடசாலைக்கட்டடம் கட்டுவது, றோட்டுப்போடுவது, 4 அல்லது 5 பேருக்கு தொழில் கொடுப்பது போன்ற அபிவிருத்தி (அரசியல்) மட்டும் செய்வது ஜுஜுபி அரசியல் வாதிகள்.

    நக்குண்டார் நாவிளந்தார் என்பார்கள். அரசியலில் கோடி கோடியாக பேரம் பேசி பணத்தினைப் பெற்றால் உரிமைகளைப் பெற முடியாது.

    மனோ கணேசன் அவர்களது சிறிநீர் பருக்கப்படவேண்டிய சில கட்சித்தலைவர்களும் நமது நாட்டில் உள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.