Header Ads



இலங்கையில் வாழும் மூவின மக்களுக்குமான, சவூதி அரசாங்கத்தின் அன்பளிப்பு


கொழும்பு தேசிய மருத்துவமனையின் புதிய நோயாளிகள் அறை தொகுதியொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைக்கவுள்ளார்.

எட்டு மாடிகளைக் கொண்ட இந்த புதிய கட்டடத்தில், இலங்கையிலேயே முதன் முறையாக MRI-PET CT Scanner, SPECT, DCA, நவீனரக சத்திர சிகிச்சைகூடம் அடங்கலாக கிட்டத்தட்ட 80 கட்டில்களும் உள்ளன.

சவூதி அரேபியா அரசாங்கம் இதன் நிர்மாணப் பணிகளுக்காக 3963 மில்லியன் ரூபா நிதியுதவியை முற்றிலும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

குறித்த கட்டடத் தொகுதியின் திறப்பு விழாவின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இலங்கைக்கான சவூதி தூதுவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று மாலை திறந்து வைக்கப்படவுள்ள குறித்த கட்டடத் தொகுதி இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கையில் வாழும் மூவின மக்களுக்குமான சவூதி அரசாங்கத்தின் அன்பளிப்பாகும் என்று அந்நாட்டு அரசாங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. சவூதி தரும் நன்கொடைகளை எடுங்கோ, மூவின மக்களுக்கும் என சந்தர்ப்பததிற்கு பேசிங்கோ, பின்னால போய் முஸ்லிம்கள் எல்லாம் சவூதிக்குப் போக சொல்லி மக்களைத் தூண்டிவிடுங்கோ.

    ReplyDelete
  2. பெரும்பாலான அரபு நாடுகள் நண்கொடையளிப்பது ரகசியமாகவே. இவ்வாறு யாராவது பகிரங்க படுத்தினாலே தவிர. இவ்வாறான உதவிகளை வாங்கிக்கொண்டு முஸ்லிம்களுக்கும் அரபு நாடுகளுக்கும் ஏசுகின்ர சிங்களவர்களை போல நன்றி கெட்டவர்களை மனிதர்கள் என்று சொல்வதா அல்லது மிருகம் என்று சொல்வதா ? எப்படியோ சிங்களவர்கள் நன்றி கெட்டவர்கள், மனிதாபிமானம் அற்றவர்கள் என்பதை அண்மைக்காலமாக நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. Correct. Get all the funding from an Islamic country & destroy mosques in SL. Support the ethnic, racial groups.

    ReplyDelete
  4. அதில் சவுதிகார்ர்கள் வஹாபிகள் என்று சொல்பவர்களையும் சேர்த்தல் நன்று.
    அவர்களும் வசை பாடுவார்கள் ஆனால் சவுதி வழங்கும் பிச்சைகளை வாய்விரித்து எடுத்துக்கொள்வார்கள்.

    ReplyDelete
  5. Its better collecting and publishing details of funds that are given by muslim countries to srilankan people

    ReplyDelete

Powered by Blogger.