Header Ads



சவூதி அரேபியாவில், ஜயவர்த்தனாவுக்கு நடந்த அநீதி

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் இலங்கையர் ஒருவர் இரு முறை தண்டனை பெற்றுள்ள சம்பவம் பதிவாகி உள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் தண்டனை அனுபவித்த இலங்கையர், நாடு திரும்பியுள்ளார். சில மாதங்கள் கழித்து அவர் மீண்டும் சவூதிக்கு சென்ற போது அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹொங்கொங் நாட்டில் தலைமையகம் அமைந்துள்ள ஆசிய மனித உரிமை ஆணைக்குழு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக பதுளை மாவட்டத்தின் மனிப்பே பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தனவுக்கு இரண்டு வார சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் பல மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா சென்றிருந்தார். வாய் பேச முடியாத மகனுக்கு சிகிச்சை வழங்குவதற்கு போதுமான வருமானம் இல்லாத காரணத்தினாலேயே அவர் சவூதிக்கு சென்றுள்ளார்.

வாகன விபத்து இடம்பெற்ற போது குற்றம் மற்றைய சாரதியின் மீது இருந்த போதிலும், அந்த வாகனத்தில் பயணித்த பயணிகள் தாக்குதல் மேற்கொண்டதனால் ஜயவர்தனவின் காலில் கடுமையான காயம் எற்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சிறைத் தண்டனை அனுபவித்தவர் மீண்டும் இலங்கை வரும் போது அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் உட்பட வழங்கப்படவில்லை.

இலங்கை வந்த சில மாதங்களின் பின்னர் சவூதியில் ஆரம்பத்தில் வேலை வழங்கியவரிடம் இருந்து தொலைபேசி கிடைத்துள்ள நிலையில் மீண்டும் வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

வழங்கப்பட வேண்டிய அனைத்து சம்பளத்தையும் மீள வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

அந்த அழைப்பிற்கமைய 2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் மீண்டும் சவூதிக்கு சென்ற போது பழைய குற்றச்சாட்டு தொடர்பில் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு 5 லட்சம் ரூபாய் தண்டப்பணம் செல்லுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செலுத்தவில்லை என்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வளவு பெரிய தொகை பணத்தை செலுத்த முடியாத ஜயவர்தன ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாகவும், இரண்டு வழக்கு விசாரணையின் போதும் இலங்கை தூதரகம் அல்லது அதிகாரிகள் அவருக்காக ஆஜராகவில்லை என மனித உரிமை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரபு மொழி அல்லது ஆங்கிலம் மொழி அறிவில்லாத அவருக்கு நீதிமன்றத்தில் என்ன நடந்ததென்பது உட்பட தெளிவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

4 comments:

  1. As usual, No action by Sri Lanka high commission and Foreign Employment Bureau.

    ReplyDelete
  2. Japan embassy and other embassies are like this.totally worst

    ReplyDelete
  3. It is the duty of the Sri Lankan mission in Saudi Arabia to look into this matter and failing which Sri Lanka Bureau of Foreign Employment is duty bound to look into this and defend his position and take any legal action against his judgment. He appears to be innocent according to the news, yet we do not know actually what happened. Minister of Foreign Affairs and the Hon.Minister Mrs.Athukorala who is in charge for Bureau takes immediate steps to defend him.

    ReplyDelete
  4. Sri lankan embassy in riyadh is worst. They don't serve us. I have experience I went there to apply for my son birth certificate, I requested to give photo copy of my bc. They didn't help me. They told me to take out and come back.

    This is our embassy!!!

    ReplyDelete

Powered by Blogger.