Header Ads



முஸ்லிம் பகுதியில் எந்தவொரு தமிழருக்கும், அசம்பாவிதங்கள் இட்மபெறவில்லை - ஜம்மியத்துல் உலமா

ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை முஸ்லிம் பகுதியில் எந்தவொரு தமிழ் மக்களுக்கும் அசம்பாவிதங்கள் இட்மபெறவில்லை என கல்குடா ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி ஏ.எல்.இஸ்மையில் தெரிவித்தார்.

முஸ்லிம் பகுதியிலும் தமிழர்களுக்கு தாக்குதல் இடம்பெறுவதாக வலைத்தளங்களில் பொய்யான கருத்துக்கள் வெளிவந்துள்ளமை தொடர்பாக கருத்து வழங்குகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

வழமை போன்று முஸ்லிம் பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு வரும் தமிழ் மக்கள் எந்தவித இடையூகளும் இன்றி தங்களுடைய வியாபாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு தமிழ் மக்கள் வருகை தந்து பொருட்களையும் வாங்கிக் கொண்டு செல்கின்றார்கள்.

ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை முஸ்லிம் பகுதியில் வரும் தமிழ் மக்கள் தாக்கப்படுவதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். இது மிகவும் வேதனைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் சகோதரத்துடன் வாழ்ந்து வருகின்ற வேலையில் ஒரு சிலர் வெளியிடுகின்ற தகவல்கள் பிழையான முறையில் குரோதத்தை ஏற்படுத்தி வருகின்றது என்றார்.
  
நாங்கள் வழமை போன்று வியாபாரத்திற்கு வருகின்றோம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஓட்டமாவடி பிரதேசத்தில் வியாபாரம் செய்யும் தமிழ் சகோதரர்கள் கருத்து தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் பஸ் தரிப்பிடம் அமைப்பதில் ஆரம்பிக்கப்பட்ட இனமுறுகல் தற்போது தொடர்த வண்ணம் காணப்பட்டு வருகின்றது. இப்பிரச்சனை தீர்ப்பதற்கு சமூக தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் என மக்கள் எதிர்பாக்கின்றனர்.

1 comment:

  1. ஏறாவூர் முஸ்லிம் சகோதரர்கள் கிரான் வாராந்த சந்தையில் 40, 45 பேர் வரை ஒருவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2000/= வீதம் வருமானமாகவும் ஒரு கிழமையில் மூன்று நாட்களும்
    (45*2000)*3 = 270,000/= ,

    தமிழ் சகோதரர்கள் ஏறாவூர் முஸ்லிம் பிரதேசங்களில் 200 பேர் தொடக்கம் 250 பேர் வரை மேசன், தமது நாளாந்த தொழிலுக்காக ஒருவர் 2500/= சராசரியாக கிழமையில் 6 நாட்கள் (250*2500)*6 = 37,50,000/= வருமானமாக எடுத்துக் கொண்டு செல்லுகிறார்கள்.
    பிறர் 270,000 தப்பான எண்ணத்தில் பார்த்தால் இங்கே அதை விட கூடுதலாக உழைப்பதையும் தடை செய்தால்!
    இவ்வாறு கணக்கு பார்ப்பது இழி குணம். அதை நாளாந்தம் ஓடி உழைப்பவர்களின் வயிற்றில் அடியாதே.
    இது அரசியல் வாதிகளின் இலாப நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள நடக்கும் பிரச்சனை. இதை தொழிலாளர்கள் கையிலே எடுத்தால் பாதிக்கப்பட்ட இரு சாராரும் ஒத்துக் கொண்டு அரசியல் வால்களை ஓட ஓட விரட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
    இது ஓருவரின் முகப் பதிவிலிருந்து பெறப்பட்டது.

    ReplyDelete

Powered by Blogger.