October 23, 2017

தமிழ் பிரதேசத்தை வடக்குடன் இணைக்க முற்பட்டால், முஸ்லிம்கள் என்ன செய்யப் போகின்றார்கள்

-ULA. GAFUR JINNAH-

கிழக்கு இணைப்பு என்ற விடயம் இன்று மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாகிவிட்டது. முஸ்லிம்கள் இணைப்பிற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. எந்த முஸ்லிம்  கட்சியும் எந்த முஸ்லிம் அமைப்பும் எந்த முஸ்லிம் தலைவர்களும் இணைப்பிற்கு ஆதரவாக இல்லை. கிழக்கில் உள்ள சிங்கள மக்களும் ஆதரவாக இல்லை.

நல்லாட்சி அரசும் அதற்குப் பின்னால் நிற்கின்றது. இந்தியா, அமெரிக்க சக்திகளும் மைத்திரி  ரணில் அரசினை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக இதுபற்றி பேசுவதற்கு தயாராக இல்லை.  இலங்கை   இந்தியா ஒப்பந்தம் மூலம் கடப்பாடு கொண்ட இந்தியாவும் பெருந்தேசியவாதத்திற்கு பயந்து வாயை மூடி மௌனமாக உள்ளது.

கிழக்கில் தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் தமது இருப்பை பாதுகாப்பதற்கு பிக்குமாரிடம் சரணடைவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. இது மிகவும் அபாயகரமான போக்கு. இதுபற்றி தமிழ்த் தேசிய சக்திகள்  இன்னமும் கவனத்தை குவிக்கவில்லை. வட  கிழக்கு இணைப்பு இல்லாமல் இந்த அபாயகரமான போக்கினை ஒரு போதும் தடுக்கமுடியாது.

பெருந்தேசியவாதிகள் கிழக்கினை எப்படியாவது சிங்கள மயமாக்கவே முற்படுகின்றனர். பிக்குமாரின் பின்னால் தற்காலிகமாக சாதகமானது போலத் தோற்றம் தெரிந்தாலும் நீண்டகாலத்தில் மிகப்பெரும் பாதிப்பையே கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை வட  கிழக்கு இணைப்புமூன்று வகையில் அவசியமானது. ஒன்று தமிழ் மக்களின் கூட்டிருப்பை கூட்டுரிமையை, கூட்டடையாளத்தை பேணுவதற்கு இணைப்பு அவசியமானதாகும்.

இவை இல்லாமல் ஒரு தேசிய இனமாக தமிழ் மக்கள் எழுச்சி பெறமுடியாது. இதே அமைப்பு முஸ்லிம்களுக்கும் தேவை. அவை நிறைவாக உள்ளதா என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்த போதிலும் தமிழ் தேசியத்தை சிதைப்பது தேசிய இனமாக இருப்பதை  சிதைப்பதற்கு சமமானது மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் இச் சிதைப்பிலேயே கவனம் செலுத்தின. குறிப்பாக கூட்டிருப்பு சிதைந்தால் கூட்டுரிமையும் கூட்டடையாளமும் தானாகவே சிதைவடைந்துவிடும்.

ஒரு தேசிய இனத்தின் கூட்டிருப்பைச் சிதைப்பதற்கு பிரதான வழி அதன் நிலை ஒருமைப்பாட்டைச் சிதைப்பதுதான். தேசிய இனத்தை ஒடுக்கும் அனைத்து அரசாங்கங்களும் இதனை ஒரு கருவியாக பின்பற்றுகின்றன. பாலஸ்தீனம், வட அயர்லாந்து, கிழக்குத் தீமோர், தென்சூடான் என்பனவற்றிலும் இது பின்பற்றப்பட்டது. இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்கள் சுதந்திரத்திற்கு முன்னரே சிதைப்பிற்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியிருந்தனர்.

ஆரம்பத்தில் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் இச்சிதைப்பு நடவடிக்கை அரங்கேற்றப்பட்டது. மிகவிரைவிலேயே தமது வியூகத்தை மாற்றி தமிழர் தயாகத்தை இணைக்கும் மையப்பகுதியான தாயகத்தின் இதயப்பகுதியான திருகோணமலை மாவட்டத்தில் சிதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்து வகை நிலப்பறிப்பு முயற்சிகளும் திருகோணமலை மாவட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன.திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்கள், சட்டவிரோத விவசாயக் குடியேற்றங்கள், மீளக்குடியேற்றங்கள், வியாபார குடியேற்றங்கள், கைத்தொழில் குடியேற்றங்கள், புனித பிரதேசங்களுக்கான குடியேற்றங்கள், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றங்கள் என இவை தொடர்ந்தன.
திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களுக்காக அல்லைத்திட்டம், கந்தளாய் திட்டம், மகாதிவுல்வௌ திட்டம், பதவியாத் திட்டம் என்பன உருவாக்கப்பட்டன.

இத்திட்டங்களுக்கான காணிகளைப் பங்கிடும் போது திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் கூட புறக்கணிக்கப்பட்டனர். சிங்கள மாவட்டங்களிலிருந்து சிங்கள மக்கள் கொண்டுவந்து குடியேற்றப்பட்டனர். ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் சிங்கள மயமாக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பும்  வெற்றிக்குப் பெரிதும் துணைபுரிந்தன.

திருகோணமலை மாவட்டத்தை வில்போல வளைத்து இக்குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. குடியேற்றங்களை அரசியல் ரீதியாக பலப்படுத்துவதற்காக சிங்களக் குடியேற்றங்களை ஒரு வால்போல இணைத்து சேருவல தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. சிங்களப் பிரதேச சபைகளும் குறைந்த வாக்காளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.


30 வருடங்களாக தொடர்ந்த ஆயுதப் போராட்டம் நிலப்பறிப்பு முயற்சிகளை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. 2009 இல் ஆயுதப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நிலப்பறிப்பு மீண்டும் தொடர்கின்றது. நிலப்பறிப்பு விடயத்தில் மகிந்த அரசிற்கும் மைத்திரி  ரணில் கூட்டு அரசிற்குமிடையே வேறுபாடுகள் இருக்கவில்லை. முன்னையவர் பகிரங்கமாக நிலப்பறிப்பை மேற்கொள்ள பின்னையவர்கள் சூட்சுமமாக இதனை மேற்கொள்கின்றனர்.

கிழக்கின் தமிழ் மக்களின் பாதுகாப்பு  என்பது ஒரு தேசிய இனத்தை தாங்குகின்ற தூண்களான நிலம், மொழி, பொருளாதார, கலாசாரம், மக்கள் கூட்டம் என்பனவற்றின் பாதுகாப்பை குறித்து நிற்கின்றது. கிழக்கில் தமிழ் மக்களிடம் அதிகாரம் இல்லை. சிங்கள தரப்பிடமும் முஸ்லிம் தரப்பிடமுமே உள்ளது. இரண்டு தரப்புக்களும் கிழக்கு தமிழ் மக்கள் மீது ஒரு தாக்குதல் யுத்தத்தினை நடத்தத் தொடங்கியுள்ளனர். இதை எதிர்த்து ஒருதரப்பு யுத்தத்தினைக் கூட நடத்த முடியாத நிலையில் கிழக்குத் தமிழ் மக்கள் உள்ளனர்.

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டமே சற்று வலிமையான நிலையில் உள்ளது. இது வலிமையான நிலையில் இருந்தால் தான் அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் எஞ்சியிருக்கின்ற தமிழ் பிரதேசங்களையாவது பாதுகாக்க முடியும். இன்று மட்டக்களப்பு மாவட்டமே தன்னை பாதுகாக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றது.

இயற்கையாக மட்டக்களப்பு வாவி அமைந்துள்ளதால் படுவான்  கரைப் பிரதேசம் நிலப்பரப்பிலிருந்து சற்று தப்பிப்பிழைத்துள்ளது. எழுவான் கரைப்பிரதேசம் நாளுக்கு நாள் நெருக்கடிக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றது. மிக சூட்சுமமான முறையில் காணிகள் பறிக்கப்படுகின்றன.

வடக்கு எப்போதும் சர்வதேச கணிப்புக்குரியது. தமிழ் மக்களும் அதிகளவில் உள்ளனர். அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் ஒரு அரசியல் தளமாக வட மாகாண சபை உள்ளது. எந்த சிறிய நெருக்கடிகளும் உடனடியாகவே அரசியல் அரங்குகளில் பேச்சுப் பொருளாகிவிடும். உள்நாட்டு மட்டத்தில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் பேச்சுப் பொருளாகிவிடும். கிழக்கின் நிலை அவ்வாறானதல்ல. சர்வதேசம் கவனிப்பு அங்கு மிகக் குறைவு. வெளிநாட்டு இராஜதந்திரிகள் கிழக்கிற்கு செல்வதில்லை. அமெரிக்கா இந்தியா  மைத்திரி  ரணில்  சம்பந்தன் கூட்டு இனப்பிரச்சினையை வடக்குடன் மட்டும்  முடக்கிவிட முயற்சிக்கின்றது.

இப்பிரச்சினையுடன் கிழக்கையும் இணைத்தாலே வட  கிழக்கு இணைப்பை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும். எனவே தான் வட  கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என பிரசாரம் செய்ய பௌத்த பிக்குகள் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இது கிழக்கை சிங்கள மயமாக்குவதற்காகவே இருக்கும். இந்த செயல்திட்டத்தை வளரவிடாமல் நிறுத்துவதற்கும் வட  கிழக்கு இணைப்பு அவசியம்.

இதை முஸ்லிம்கள் எதிர்ப்பதும் அவர்களிடம் இணைந்தால் என்ன தீர்வு என்பதும் பிரிந்தால் என்ன தீர்வு என்பதும் முஸ்லிம் அரசியல் வாதிகளிடமோ அன்றி புத்திஜீவி முஸ்லிம்களிடமோ, மக்களிடமோ, புலம்பெயர் முஸ்லிம்களிடமோ இல்லாத நிலையில் எதற்கெடுத்தாலும் எதுவும் தெரியாதவர்களாக முஸ்லிம்கள் இருந்து கொண்டு எதிர்ப்பது என்பது தான் அவர்களிடம் உள்ள காரியமாக இருக்கின்ற விடயமாகும்.

எனவே வட  கிழக்கு இணைப்பு என்பது அரசியல் தீர்வின் அடிப்படை. இது எந்தவித பேரம் பேசலுக்கும் அப்பாற்பட்டது. கிழக்கை அகற்றிவிட்டு தமிழ்த் தேசியம் ஒருபோதும் நின்று பிடிக்கமுடியாது. விடுதலைப் போராட்டத்திற்காக கிழக்கு மாபெரும் அர்ப்பணிப்புக்களை செய்த நிலையில் இது அரசியல் அறமாகவும் இருக்கமுடியாது.

இங்கு தான் முஸ்லிம் விவகாரம் முக்கியமாகிறது. வட  கிழக்கு முஸ்லிம்களினதும் தாயகம் என்பதில் இங்கு மாற்றுக்கருத்து இல்லை. இணைந்த வட  கிழக்கு அதிகார அலகினை முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்வார்களேயானால் அதில் முஸ்லிம்களுக்குரிய இடம் யாது  என்பதை அவர்களுடன் பேசித் தீர்க்கவேண்டும் இது விடயத்தில் மிகுந்த நெகிழ்ச்சியுடன் நடந்துகொள்ள தமிழ்ச் சமூகம் தயாராகவே இருக்கவேண்டும். ஆனால் கிழக்கின் யதார்த்த நிலை வேறாகவே உள்ளது.

வட கிழக்கிற்கென தமிழ் மக்களினால் நகர்த்தப்பட்ட அரசியலோடு முஸ்லிம்கள் இணையவில்லை. அவர்கள் அதற்கு வெளியே தான் நின்றனர். நபர்களாக ஒரு சிலர் பங்கேற்றார்களே தவிர முஸ்லிம் சமூகம் வெளியேதான் நின்றது. உண்மையில் முஸ்லிம்களும் இணைந்திருந்தால் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

இறக்காமம் மாயக்கல்லி புத்தர் சிலை  விவகாரத்தை முஸ்லிம்கள் தனித்து முகம்கொடுக்க முடியாது. முஸ்லிம் தேசியவாதம் தமிழ்த் தேசியவாதத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்டதே தவிர சிங்கள பௌத்த பெரும் தேசியவாதத்திற்கு எதிராக கட்டமைக்கப்படவில்லை.  ஒருகட்டத்தில் தமிழ்த் தேசியப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஒரு கருவியாகவும் முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இதுவிடயத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமது தனித்துவத்தை இழக்காது உருவாக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்திற்குள் வருவதற்கு முஸ்லிம்கள் தயாராக இருக்கவில்லை. அவர்கள் தமிழ் மக்களோடு எந்தவகையிலும் தொடர்பற்ற மத அடிப்படையிலான தனியான இனமாகவே தங்களை அடையாளப்படுத்தினர். அவ்வாறு அடையாளப்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாடு வட  கிழக்கில் படுதோல்வியடைந்தது. அது தமிழ் மக்களுக்கு பொறுப்பையும் முஸ்லிம்களுக்கு பொறுப்பின்மையையும் விதித்து அது முஸ்லிம் அரசியலை கொச்சைப்படுத்தியதோடு தமிழ் மக்களுக்கு கைவிலங்காகியது. தமிழ்த் தலைமைகள் தமிழ்  முஸ்லிம் முரண்பாட்டை கையாளத் தெரியாமல் நில விரிப்புக்குள் தள்ளியபோது முரண்பாடு கையாள முடியாத நிலைக்குச் சென்றது.

இன்றைய நிலையில் முஸ்லிம்கள் வட  கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொள்வதற்கு பல தடைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று வட   கிழக்கிற்கென தனியான அரசியல் முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டமையாகும். முழு இலங்கைக்குமான முஸ்லிம் அரசியலே கட்டியெழுப்பப்பட்டது. இதனால் வட  கிழக்கு இணைப்பு தென் இலங்கை முஸ்லிம்களையும் பாதிக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

நிலத்தொடர்பற்ற ஒழுங்குமுறை உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் இதற்கு நல்ல உதாரணம்  அங்கு பாண்டிச்சேரியும் காரைக்காலும் மட்டும் தமிழ் நாட்டில் உள்ளன. ஏனாம் என்கின்ற பிரதேசம் ஆந்திராவில் உள்ளது. மாஹி என்ற பிரதேசம் கேரளாவில் உள்ளது.

ஒப்பீட்டு  ரீதியில் பார்போமாயின் வட  கிழக்கு தமிழ் பிரதேசங்கள் இவ்வளவிற்கு செம்மையாக இல்லை. எனவே தமிழ்த் தேசிய சக்திகள் உடனடியாக இதுவிடயத்தில் கவனம் செலுத்தவேண்டுமாக இருந்தால் கிழக்கைப் பிரிக்க முஸ்லிம்களும் கவனம் செலுத்த முற்பட்டால் தமிழர்கள் கிழக்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்படவேண்டிவரும். தமிழர்கள் கிழக்கில் உள்ள தமிழ் பிரதேசத்தை வடக்குடன் இணைக்க முற்பட்டால் முஸ்லிம்கள் என்ன செய்யப் போகின்றார்கள்?

14 கருத்துரைகள்:

இந்த கட்டுரை 100% உண்மை.

புதிய தேர்தல் முறையின் முஸ்லிம் CM ஒருவர் கிழக்குக்கு வருவது கடினம்.

அதை விட மிக முக்கியமாக, விரைவில் அம்பாரை, திருகோணமலை இருண்டும் சிங்கள குடியேற்றங்களால் நிரப்பி முஸலிம்கள்-தமிழ்ர்கள் இருவரும் சிறுபான்மையாகி விடுவார்கள்.

இதற்கு ஓரே வழி, முஸ்லிம்கள் தமிழ்ர் தரப்புடன் பேசி, தமது சந்தேகங்கள், பயங்களை போக்கி, இணைவது தான் நல்லது.

புலிகள் ஒழிக்கபட்டுவிட்டதால், சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் எனிமேல் தேவை இல்லை. தற்போதய உலக அரசியல் போக்குகளின் படி சிங்கள அரசுகள் உங்களிடமிருந்து விலகி இருக்கவே விரும்புவர்கள்.

This comment has been removed by the author.

Yes ajan entha kaddurai 100% unmmai tamil+islam tamil joosikka
Veendija neeram TNA+SLMC ethu oru puram erukkaddum makkal jooseikka veendija neeram ethu ????..

இணைவதனால் மட்டும் சிங்கள குடியேற்றம் தடைபடும் என்று எப்படி கூறுவீர்கள்?

இங்கு சிங்கள குடியேற்றத்தை தடுக்க வேண்டுமே தவிர இணைப்பது அல்ல அதற்கான பதில்.

முஸ்லிம்களிடம் இருந்து அபரிக்கப்பட்ட காணிகளை தமிழ் சமூகம் மீண்டும் முஸ்லீம் சமூகத்திடம் ஒப்படைக்கும் வரை தமிழ் சமூகத்தை முஸ்லீம் சமூகம் ஒரு போதும் நம்ப மாட்டாது .முஸ்லீம் சமூகத்தின் காணிகளை அபகரிக்கும் விடயத்தில் தமிழ் சமூகமும் சிங்கள சமூகமும் ஒரே விதமாகவே நடந்து கொள்கின்றன .

வட அயர்லாந்தின் இரண்டு பிரதம மந்திரிகள் மற்றும் கூட்டுறவுவாதம்(கட்டாய கூட்டணி ஆட்ச்சி) வடகிழக்கு இணைப்புக்கு நல்ல யோசனைதான்.

ஒரு கூட்டுறவு ஆட்ச்சி (கட்டாய கூட்டணி)என்றால் என்ன?
முன்னதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அமைச்சரவைகளுடன் அமைச்சரவைக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் பங்கு(தேர்தலில் பெற்ற ஆசனங்களின் வீதத்தில்).
வடக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை இரண்டு முதல் அமைச்சர்களை தனித்தனியாக தேர்வு செய்யும். வடகிழக்கு யூனியன் கவுன்சில்லில்(இணைந்த உறுப்பினர்கள்) பெரும்பான்மை நிரரூபிக்கும் நபர் தலைமை முதல் அமைச்சர் மற்றைய நபர் துணை முதல் அமைச்சராக அறியப்படுவார்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

The two chief ministers system of Northern Ireland and consociationalism is good idea for northeast merger.

What is a consociationalism?
Participation of all parties to cabinet with pre allocated ministries.
The Northern Provincial Council and Eastern Provincial Council will separately select two chief ministers. Person who have majority in the North-East Union Council is the Chief Minister and the other person will known as the deputy Cheif Minister.


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

Consociationalism

A stable democratic system in deeply divided societies that is based on power sharing between elites from different social groups.

ஒரு கட்டாய கூட்டாட்ச்சி

வலுவான பிளவுற்ற சமூகங்களில் ஒரு நிலையான ஜனநாயக அமைப்பு, பல்வேறு சமூக குழுக்களில் இருந்து உயரடுக்கினருக்கு இடையில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதே அடிப்படையாகும்.

இக்கட்டுரை முஸ்லிம் பெயர்குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ள தமிழரின் தப்பிப்பிறந்த குழந்தை போன்றதாகும். இதுவும் ஒரு மீடியாப் பயங்கரவாதம்தான்.

கிழக்கில் சிங்கள பெரும்பான்மை மக்களை குடியேற்றுவதை தமிழ் மக்களாலையோ அல்லது முஸ்லிம் மக்களாலையோ தடுக்க முடியாது.நியாபகமூட்டல் ஒன்றிற்காக யுத்ததினால் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான முஸ்லிம்களின் நிலம் அபகரிப்பு ஏன்??? உங்களுக்கு பகிரங்கமாக தெரியும் இது முஸ்லிம்களின் நிலம் என்டு அவ்வாறு இருக்க அதை முஸ்லிம்களுக்கு மீண்டும் கொடுக்கவும் அந்த நிலம்களில் முஸ்லிம்களை மீள் குடியேற்றம் செய்யவும் முடியாமை ஏன் ???அதை தமிழ் சகோதரர்கள் புறக்கனித்து ஆர்ப்பாட்டம் செய்வது ஏன் ??? இது மட்டும் அன்றி கிழக்கில் எத்தனையோ சம்பவங்கள்...முஸ்லிம்கள் நிலம்,உடமை,சொத்து என்று நன்றாக தெரிந்தும் ஏன் இவ்வாறு செய்வது???மீராவோடை நிலப்பிரச்சினையை பார்த்தால் அங்கு தமிழ் சகோதரர்கள் காவி உடையுடன் சேர்ந்து முஸ்லிம் மக்களை எதிர்த்தனர்.....அதே காவி மனிதர்தான் ஓர் சந்தர்பத்தில் உங்களை எதிர்த்தவர் என்பதை மறந்துபோநீர்களே காரணம் என்ன??? உங்களுக்கு ஓர் பிரச்சினை வரும் பொது சந்தர்பத்துக்கு ஏற்றாப்போல் மாறுகிண்றீர்களே..இவ்வாறு இருக்க வடகிழக்கு இணைந்தால் எவ்வாறு சாத்தியமாகும் நீங்கள் சொல்வது.வடக்கு தமிழ் மக்களும் கிழக்கு முஸ்லிம் மக்களும் என்று காலகாலம் கூறும் மக்களும் சரி,அரசியல் வார்த்தைகளும் சரி...அது அவ்வாறே இணையாமல் இருப்பது நல்லதே......

வடக்கில் ஒரு அங்குலமேனும் முஸ்லீம்களின் காணிதமிழரிடமில்லை.அவை முஸ்லீம்களிடமே உள்ளது சனத்தொகை அதிகரிப்பென கூறி சட்விரோதமாக காணிகள் அரசியல் வாதிகளால் பிடிக்க முயற்சித்தமையே தடுக்கப்பட்டது.மீராவொடை பாடசாலை காணி என்பது உறுதிபடுத்தபட்ட பபின்னரும் பொய் சொல்ல வேண்டாம்.

Dear Unknown,
(1) வடக்கில் சிங்கள குடியேற்றங்களை NPC யால் தடுக்க முடியுமானால், ஏன் கிழக்கில் தடுக்க முடியாது. வடக்கில் யுத்தத்தினால் வெளியேறிய சிங்களவர்கள் கூட இன்னும் அரசால் குடியேற்றபட முடியவில்லை.

(2) திருப்பி கொடுக்கபடாத முஸ்லிம்களின் காணிகளை லிஸ்ட் பண்ணுங்கள் பார்க்கலாம்.
இது எல்லாம் பொய்.
அப்படித்தான் இருந்தாலும் காணி உறுதிகளை எடுத்து பொலிஸில் வழ்க்கு பதிவு செய்வது தானே. இது கட்டுக்கதைகள் என்பதால் உங்களால் சட்டபடி டீல் பண்ண முடியவில்லை.

(3) மீராவோடை பாடசாலை காணியை கொள்ளையடிக்க முயன்றது கள்ளர் கூட்டத்தை தட்டிக்கேடபது மக்களின் கடமை.

(4) கள்ளர் கூட்டத்தினரால் பாடசாலை மாணவர்கள் படும் கஷ்டத்தை பார்த்த புத்த பிக்கு நியாயத்திற்கு குரல் கொடுத்தார். இது மனிதாபிமானம். பராட்டபட வேண்டியது.

(5) பணம், பதவிகள், சிறு சலுகைகளுக்காக மாறுவது யார், எதையும் செய்வது யார் என்பது இன்னுமா உங்களுக்கு புரியவில்லை.

இந்த கட்டுரை எழுதுன மொக்கன் முஸ்லிமா என்று சந்தேகம். சிங்களவர்களை நம்பினாலும் தமிழர்களை நம்ப முடியாது. எமக்கு சிங்களமும் தேவையில்லை தமிழரும் தேவையில்லை. கிழக்கு மாகானம் முஸ்லிம்களின் அரசியல் அடையாளம் அதை சிதைக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்

வடக்கில் முஸ்லிம்களின் காணிகளை யாரும் பிடிக்க இல்லை ..அதே நேரம் சமாதான காலத்தில் முஸ்லிம்கள் வந்து தங்கள் காணிகள் காசுக்கு விற்றுவிட்டு சென்றவர்கள் ..விடுதலை புலிகள் சமாதான காலத்தில் முஸ்லிம்கள் திரும்ப வரலாம் எண்டுதான் சொன்னார்கள் ..அனாலும் இப்பொழுது கூடுதலான முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டு உள்ளார்கள் ..அவர்கள் காணியையும் காசுக்கு விற்று இபொழுது தமிழர்களின் இடங்களில் உள்ள காடுகளையும் அழித்து குடியேறுகிறார்கள் ..முதல் இருந்ததை விட அதிகமாகவே ...விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை கொன்றதாகவும் முஸ்லிம்களை துரத்தியதாகவும் ஓலமிடும் முஸ்லிம்கள் யாரும் முஸ்லிம்களால் தமிழர்கள் அதிகமாகவே கொல்லபட்டதையும் அம்பாறையில் உள்ள தமிழர்கள் துரத்தபட்டு முஸ்லின்களால் தமிழர்களது பூர்வீக இடங்கள் பறிக்கப்பட்டதையும் கதைபதில்லை

Ms.r Gtx கிழக்கு மாகாணம் யாரிடமும் முழுசாக இல்லை சிங்களவர் 24% தமிழ் 39.55% இஸ்லாம் தமிழ் 36.45% இதிலும் இப்பொழுது 50/50 தொகுதி விகித சாரம் தேர்தல் வந்தால் நில்லமை இன்னும் மாறும் இதுதான் உ்மையான நிலவரம் .

Abdullah says, Gtx
ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
முஸ்லீம்கள் கிழக்கை வடக்குடன் இணைக்க எதிர்பதன் ஒரே காரணம் காள்ப்புணர்ச்சி.அதனை தவிர வேறு எந்த வரலாற்று மரபு அரசியல் காரணிகளுமே இல்லை.
வரலாறு நெடூகிலும் தமிழர் தாம் பெரும்பான்மையாக மரபுரீதிய மூதாதாயர் வழங்கிய நிலப்பரப்பை இணைத்து கொள்ள உரிமை உண்டு.
முஸ்லீம்களுக்கு அவ்வாறான நிலபரப்போ மரபுரிமையோ கிடைக்காததனால் இவற்றை குழப்பக்கூடாது.
வடகிழக்கை எதிர்க்க சிலர் கூறூம் காரணங்கள் நகைப்பிற்குரியவை.
1.வடகிழக்கு வரலாற்றி இணைந்திருக்கவில்லை என்பது.
பதில்-இலங்கை எனும் நாடு வரலாறு நெடுகிலும் தனித்தனி ராட்ச்சியங்களாக வே இருந்தன சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கூட ஒப்புகொண்டவிடயம்.2500ஆண்டு வரலாற்றில் 2இருமுறைமட்டுமே அதுவும் 100ஆண்டுகளுக்கு குறைவாகவே இலங்கை ஒன்றாக இருந்தது.இலங்கையை ஒற்றுமை படுத்தியவ்வர்கள் ஆங்கிலேயர்கள்.இவ்வாறு அஇருந்த இலங்கையை இன்று ஒற்றை ஆட்சி ஆக்கி சிங்களவர் தமது கூட்டிருப்பை உறுதி செய்துள்ளனர்.எப்படி சிங்களர் கூட்டிருப்புக்கு ஒற்றை ஆட்சி வேண்டுமோ.அப்படியே தமிழருக்கும் வடகிழக்கு இணைப்பு அவசியம்.
யாழ் இராஜதானி நல்லூர் நகர்புறத்திலிருந்த சக்கரவர்தியால் வன்னிமைகள் எனும் பிரதானிகளால் ஆளப்பட்டது.
இது தற்பொதைய திருகோணமலை புத்தளம் என்ற்றை கொண்ட பிரதேசம்.மட்டு வன்னிமைகள் சுயதீன மற்றும் திறைமுறைகுட்பட்ட இராட்ச்சியங்கள்.
2.பிழையான புள்ளிவிபரம்.
தாம் தமிழர் அல்ல முஸ்லீம் என்றும் தம்மை தமிழராக வகைபடுத்த முடியாதென்றும் கூறும் முஸ்லீம்கள் கிழக்கில் 40%உள்ள தமிழரை லாவகமாக இந்து கிருத்துவர் எனவகைபடுத்தி தம்மை பெரும்பான்மை யாக காட்ட முற்படுகின்றனர்.
ஒரு பிராந்தியத்தின் உரிமையை சனத்தொகையை காரணம் காட்டி உரீரிமை கோரமுடியாது.கிழக்கில் 89%நிலம் முஸ்லீம் அல்லாதோர் வாழும் நிலம்.
வடகிழக்கு இணைப்பு நடந்தால் எம்மை தனித்து விடு என்னு கோரவும் தமது 15பெரும்பான்மை பிரதேசங்களை ஆழவும் முஸ்லீம்களுக்கு உரிமை உண்டு.ஆனால் ஏனைய இனங்களிள் நிலத்தை உரீமை கொரமுடியாது.தமக்கு சம்மந்தமே இல்லாத தமிழர் ஊர்கள் இணைய வேண்டுமா கூடாதா என முஸ்லீம்கள் நதீர்மானிக்க முடியாது.
3.அரசியல் என்றாலே அமைச்சு. தேசியப்பட்டியல். எம்பி. எம்பிசி. என்று பழக்கப்பட்ட சமூகத்துக்கு மரபுரிமை,தேசியம்,சுயநிர்ணயம், போன்ற வார்த்தைகள் விளங்கவாய்ப்பில்லை.

Post a Comment