Header Ads



இலங்கையில் நாளை, திறக்கப்படும் 'சுப்பர் சிறைச்­சாலை ' - உயர் சொகுசு வச­திகளையும் வழங்கும்


சர்­வ­தேச தர நிய­மங்­க­ளுக்கு அமை­வாக இலங்­கையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள  முத­லா­வது சிறைச்­சாலை நாளை திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

ஹம்­பாந்­தோட்டை அங்­கு­னு­கொ­ல­ப­லெஸ்­ஸ­யி­லுள்ள  மேற்­படி புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சிறைச்­சா­லையே தற்­போது 'சுப்பர் சிறைச்­சாலை ' என்று அழைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது.  ஏனென்றால்  சிறைக்­கை­தி­க­ளுக்கும்  பார்­வை­யிட வரு­ப­வர்­க­ளுக்கும்  உயர் சொகுசு வச­திகள் வழங்கும் வகையில் இந்த சிறைச்­சாலை நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. 

சுமார் 9.5 பில்­லியன் ரூபா செலவில் 658 ஹெக்­டேயர் பரப்பில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள  இச்­சி­றைச்­சா­லை­யா­னது  இவ்­வ­ருடம் மார்ச்­மாதம் ஜனா­தி­ப­தியின் பங்­கு­பற்­று­த­லுடன்  திறக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில் இது பிற்­போ­டப்­பட்­டது.  இச்­சி­றைச்­சா­லை­யா­னது தங்­காலை சிறைச்­சா­லையின் போதிய வச­திகள் இன்­மையால் அங்கு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­து­வரும் சிறைக்­கை­தி­க­ளுக்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.    சுமார் 1500 சிறைக்­கை­தி­களை  இப்­பு­திய சிறைச்­சா­லையில் தங்­க­வைக்க முடியும்.

இத்­தி­றப்பு விழாவில் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் சிறைச்­சா­லைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ,   நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

5 comments:

  1. ஐயோ நானும் எப்படி சரி அங்கே போகவேனுமே Any idea?

    ReplyDelete
  2. இந்த ஆட்சி கூட கூட்டாளி அவுங்க.. அடுத்த ஆட்சியில கூட்டமாவே போலாம்...

    ReplyDelete
  3. இந்த ஆட்சி கூட கூட்டாளி அவுங்க.. அடுத்த ஆட்சியில கூட்டமாவே போலாம்...

    ReplyDelete
  4. சொகுசாக இருந்தால் அது சிறைச்சாலையா? Or இப்படி அமைந்தால் தான் குற்றவாளிகள் திருந்துவார்கள்..??

    ReplyDelete
  5. இதற்கு சிறைச்சாலை என்பதை விட உல்லாச விடுதி என்று பெயர் இடலாமே.
    சிறைச்சாலை என்பது குற்றம் இழைத்தவர்கள் தண்டனை பெரும் இடம் அதேநேரம் இனிமேல் குற்றம் புரியும் பொது பழைய சிறை சாலைஇல் பெற்ற தண்டனை அனுபவத்தில் வரும் பொது குற்றம் புரிய நினைக்க மாட்டார்கள். ஆனால் இப்போது ...............

    ReplyDelete

Powered by Blogger.