Header Ads



ஒரு பிஞ்சு கெஞ்சுகிறது


Mohamed Nizous
========================

என் தாய்
'சித்தி' ஆகாமல் இருக்க
நான்
சித்தி ஆக வேண்டும்

என் பாடசாலை
பிர'சித்தி' அடைவதற்காய்
நான் சித்தியாக வேண்டும்

எதிர்கால ஆசைகளின்
'சித்தி'ரத்தை யாரும்
சிதைத்து விடாதிருக்க
நான் சித்தியாக வேண்டும்

என் மனதைக் கீறி
இரக்கமில்லா மனிதர்கள்
ந'சித்தி'டாமல் இருக்க
நான் சித்தி ஆக வேண்டும்

உம்மா அடிப்பதை
ஊரார் சேர்ந்து
ர'சித்தி'டாமல் இருக்க
நான் சித்தியாக வேண்டும்

சித்தி லெப்பையிடம் கூட
'சித்தி' யடைந்தாயா எனக் கேட்கும்
புத்தியற்ற சமூகத்தில் வாழ-நான்
சித்தி ஆக வேண்டும்

ப'சித்தி'ருந்து 
படித்தாலும்
பாஸ் பண்ண இல்லையென்றால்
வி'சித்தி'ரமாய்ப் பார்கின்ற
விவேகமற்ற உறவுகளே

காலைப் பிடித்துக் கேட்கிறோம்
எங்கள் மனங்களைக் 
காயப்படுத்தி விடாதீர்கள்...!

3 comments:

  1. அருமையான கவிதை.பள்ளி செல்லும் சிறார்களின் பெற்றோா்கள் அனைவரும் குறிப்பாக வாசிக்க வேண்டியது. எழுதிய சகோதருக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. Our obsession on 5th scholarship is clear indication of how we r Intellectually backward n flawed .
    Utterly rubbish .

    ReplyDelete

Powered by Blogger.