Header Ads



பிக்குகளின் ஆலோசனைகளை செவிமடுக்காத அரசாங்கத்தால், நீண்ட காலத்திற்கு பயணிக்க முடியாது

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சகல பெளத்த பீடங்­களும் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளன. இவ்­வா­றான நிலையில் பலாத்­கா­ர­மான முறையில் அதனைத் திணிப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. எனினும் தேரர்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு செவி­சாய்க்­காத அர­சாங்­கத்தால் நீண்ட காலத்­திற்கு பய­ணிக்க முடி­யா­தென முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

மறைந்த பேரா­சி­ரியர் நாகொட அம­ர­வங்ச தேரரின் பூத­வு­ட­லுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மரு­தா­னை­யி­லுள்ள வித்­யா­லீய விகா­ரைக்கு நேற்று சென்­றி­ருந்தார். அதன்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தேர்தல் நடத்தும் திகதி பற்றி அமைச்­சர்கள் ஒவ்­வொ­ரு­வரும் வெவ்­வேறு திக­தி­களைக் குறிப்­பி­டு­கின்­றனர். எனினும் அர­சாங்கம் தேர்­தலை எப்­போது நடத்­தி­னாலும் அதனை எதிர்­கொள்­வ­தற்கு நாம் தயா­ராக உள்ளோம். அத்­துடன் நாம் தேர்­தலில் பாரிய வெற்­றி­ய­டைவோம். மேலும் தேர்­தலில் தோல்­வியைத் தழு­வ­வேண்டி வரும் என்­கின்ற அச்சம் அர­சாங்­கத்­திற்கு உள்­ளது. அத­னா­லேயே தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்தி வரு­கி­றது.  

மேலும் அர­சாங்கம் கொண்­டு­வ­ரு­வ­தற்கு எத்­த­ணித்­துள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு சகல பெளத்த பீடங்­களும் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளன. புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து அவ­தா­ன­மாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு கத்­தோ­லிக்க சங்­கமும் தெரி­வித்­துள்­ளது.

நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­து­வ­தனை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அதி­காரப்  பகிர்­விற்கு முயற்­சிப்­ப­தாக அர­சாங்­கங்கம் தெரி­விக்­கி­றது.

எனினும் அதி­காரப் பகிர்வு குறித்து சகல தரப்­பிலும் தற்­போது எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.எனவே அர­சாங்கம் பலாத்­கா­ர­மான முறையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்டு வருவதன் மூலம் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுமா? என்கின்ற சந்தேகம் உள்ளது. மேலும் தேரர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காத அரசாங்கத்தால் நீண்ட காலத்திற்கு பயணிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. உங்களுக்கும் அதுதான் நடந்ததோ..??

    ReplyDelete
  2. MR you are correct. You dint pay heed to Mahanayake Theros. Theros said dont have the car race in Handy. You dint heed. So you dint last long.

    ReplyDelete

Powered by Blogger.