Header Ads



கார் ஓட்டும் விவகாரம் . இறுதிநேரத்தில் நின்றுபோன திருமணம்

திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் மணமகளின் தந்தை வைத்த கோரிக்கையை ஏற்காத மணமகன் திருமணத்தை நிறுத்தி விட்டு வெளியேறிய சம்பவம் சவுதியில் அரங்கேறியுள்ளது.

சவுதி அரேபியாவில் பல வருடங்களாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியில்லாத நிலையில், அந்த தடை உத்தரவு வரும் 2018 யூன் மாதம் முதல் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு அந்நாட்டில் நடக்கவிருந்த ஒரு திருமணமே நின்றுள்ளது.

திருமணத்துக்கு பிறகு தனது வருங்கால மனைவி வேலைக்கு செல்லவும் மற்றும் 40,000 ரியால்கள் மஹர் கொடுக்கவும் மணமகன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

திருமணம் நடக்க சில நிமிடங்களே இருந்த நிலையில், மணமகளின் தந்தை மணமகனிடம் புதிய நிபந்தனையை போட்டுள்ளார்.

அதாவது, வாகன தடை உத்தரவு நாட்டில் நீக்கப்பட்ட பின்னர் தனது மகள் ஓட்டுனர் உரிமம் பெறவும், வாகனம் ஓட்டவும் மணமகன் அனுமதிக்க வேண்டும் என கோரினார்.

இதை ஏற்காத மணமகன் திருமணத்தை நிறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.

இச்சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

1 comment:

  1. DAWARY... Please mentioned it is MAHAR and this is Given by the Man to Woman.

    Not the Dawary that Man(?) our country take from Woman.

    ReplyDelete

Powered by Blogger.