Header Ads



பௌத்த தேரர் தற்கொலை

உளவியல் நோய்க்­குள்­ளா­கி­யி­ருந்த 59 வய­து­ பௌத்த தேரர் ஒருவர் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக புத்­தளம் மற்றும் கல்­பிட்டி பிரி­வுக்­குட்­பட்ட திடீர் மரண விசா­ரணை அதி­காரி பீ. எம். ஹிசாம் தெரி­வித்தார்.  

கரு­வ­ல­கஸ்­வெவ விகா­ரையைச் சேர்ந்த விஹி­னவே அங்­கி­ராஜ  (வயது 59)  எனும் தேரரே இவ்­வாறு தற்­கொலை செய்து கொண்­ட­வ­ராவார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு படுக்­கைக்குச் சென்­றுள்ள இவர் சற்று நேரத்தில் எழுந்து அங்கு உறங்கிக் கொண்­டி­ருந்த மற்­றொரு இளை­ஞ­னிடம் தான் நஞ்­ச­ருந்­தி­விட்­ட­தாகத் தெரி­வித்­துள்­ள­தா­கவும், அதன் பின்னர் அங்­கி­ருந்­த­வர்கள் அவரை  புத்­தளம் வைத்­தி­ய­சாலைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை பலனின்றி அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் மேற்­கொள்­ளப்பட்ட மரண விசா­ர­ணையின் போது தெரி­ய­வந்­த­தாக இம்­ம­ரணம் தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட திடீர் மரண விசா­ரணை அதி­காரி ஹிசாம் தெரி­வித்தார். 

புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்ற பிரேத பரி­சோ­தனை மற்றும் மரண விசா­ர­ணை­களின் பின்னர் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்து கொண்­டதால் ஏற்­பட்ட மரணம் எனத் தீர்ப்பை வழங்கி சட­லத்தை உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­த­தா­கவும் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் மேலும் தெரிவித்தார்.  

3 comments:

  1. Rest of mentally deranged ones runnig after Rohingiyas with Bbs.

    ReplyDelete
  2. திருமணம் குழந்தைகள் என்ற வாழ்க்கை இல்லை என்றால் மனநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளன வயதான காலத்தில் மனதை சந்தோஷப்படுத்தும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை நரகம் போன்ற நிலையில் ஏற்படும் அவ்வப்போது கவலையை தீர்க்க இந்தசந்ததிகள் உதவுகிறது இவ்வாறு இல்லாமல் கவலைப்படும் போது தற்கொலைக்கு மனம் ஆசைப்படும்,

    ReplyDelete
    Replies
    1. We shouldn't interfere with their believes and faith. Buddhist religion clearly say that the Buddhist monks should lead a bachelor life and therefore we should refrain from making any comment connected to their religion. That will create unwanted problems between the communities.

      Delete

Powered by Blogger.