யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு கல்வி, இலக்கியம், வரலாற்று நூல் என பல்வேறு வகைகளிலும் சேவையாற்றிய ஓய்வுபெற்ற முன்னாள் கல்விப் பணிப்பாளர் MS. அப்துல் ரஹீம் பிரான்சில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
(JMC -I) யாழ்ப்பாணம் சர்வதேச அமைப்பினரால் 29.10.2017 அன்று பிரான்சில் நடைபெற்ற கருப்பு ஓக்டோபர் நிகழ்வில் இவ்விருது வழங்கப்பட்டது.
பிரான்ச் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் புத்திக்க கீர்த்தி அதாவுட, இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்.
உடல் நலக்குறைவு காரணமாக, குறித்த நிகழ்வில் ரஹீம் மாஸ்டர் பங்கேற்காத நிலையில் அவரது சார்பில் இந்த விருதை அவரது உறவினர் பெற்றுக்கொண்டார்.
3 கருத்துரைகள்:
வாழ்த்துகள்....
Congratulations
Massa Allah
Post a Comment