Header Ads



பங்­கீடு குறித்து ஹக்கீம் + றிசாத் ஐ.தே.க.வுடன் பேச்சு

-எம்.எம்.மின்ஹாஜ்-

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஊடாக யானை சின்­னத்தில் போட்­டி­யிட எத்­த­னித்­துள்ள தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஜாதிக ஹெல உறு­மய கட்­சி­களின் தலை­வர்கள் தொகுதி பங்­கீடு தொடர்­பாக விரைவில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­தாக சிறி­கொத்தா வட்­டார தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

வடக்கு கிழக்கு வெளியே ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்து முஸ்லிம் காங்­கிரஸ் போட்­டி­யிடத் தீர்­மா­னித்­துள்­ளது. எனினும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தமது இறுதித் தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்கு கட்­சியின் உயர்­பீடம் எதிர்­வரும் 20 ஆம் திகதி கூட­வுள்­ளது. மேலும் 5032 தொகு­தி­க­ளுக்­கான வேட்­பாளர் தெரிவில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தொகுதி அமைப்­பா­ளர்கள் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றனர். 

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு முன்­னணி, ஜாதிக ஹெல உறு­மய உள்­ளிட்ட கட்­சிகள் கூட்­டி­ணைந்து ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யாக யானை சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஏற்­க­னவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடந்த பேச்­சு­வார்த்­தையில் இணக்கம் எட்­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் தொகுதிப் பங்­கீடு தொடர்பில் கடந்த வாரம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் கபீர் ஹாஷிம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் விசேட பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இதன்­போது முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்­டுள்ளார். 

இதன்­போது தொகு­திகள் பகிர்ந்து கொள்­வது தொடர்பில் நீண்ட நேரம் பேசி­யுள்­ளனர். எனினும் தொகுதி பங்­கீடு தொடர்பில் பல மட்ட பேச்­சு­வார்த்­தை­களை முஸ்லிம் காங்­கிரஸ் தொடர்ந்து நடத்தி வரு­கின்­றது.இதன்­படி அமைச்சர் ரவூப் ஹக்கீம் விரைவில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­திக்­க­வுள்ளார்.

அத்­துடன் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் கட்­சிக்குள் இறுதி இணக்­கத்தை ஏற்­ப­டுத்தி கொள்ளும் நோக்கில் எதிர்­வரும் 20 ஆம் திகதி கூடி ஆரா­ய­வுள்­ளது. அக்­கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தலை­மையில் கட்­சியின் உயர்­பீடம் கூட­வுள்­ளது.

அத்­துடன் தமிழ் முற்­போக்கு முன்­ன­ணியும் இது தொடர்பில் கட்சி மட்­டத்தில் பேச்­சு­வா­ர்த்­தை­களை நடத்தி வரு­கின்­றது. அத்­துடன் ஜாதிக ஹெல உறு­ம­யவும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் பல மட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்­றது. 

இதன்­படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய கட்சிகளின் தலைவர்கள் விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தொகுதிப் பங்கீடுகள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிறிகொத்தா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. டேய் யாரா நீங்ககெல்லாம், எங்களை பங்கு போட?

    ReplyDelete

Powered by Blogger.