Header Ads



கிழக்கு மாகாண, அடுத்த முதலமைச்சர் யார் - பனிப்போர் ஆரம்­பம்

வட­மத்­திய, சப்­ர­க­முவ மற்றும் கிழக்கு  மாகா­ணங்­களில் எதிர்­வரும் தேர்­தலில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தற்கு ஸ்ரீலங்கா  சுதந்­தி­ர­க்கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளி­டையே பனிப்போர் ஆரம்­பித்­துள்­ள­தாக கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. 

மேற்­கு­றிப்­பிட்ட மூன்று மாகாண சபை­க­ளி­னதும்  முன்னாள் முத­ல­மைச்­சர்கள், அமைச்­சர்கள் மற்றும்  உறுப்­பி­னர்கள் அதே­போன்று தொகுதி மற்றும் மாவட்ட அமைப்­பா­ளர்கள், வர்த்­தக பிர­மு­கர்கள் என பலரும் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ரா­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளனர். 

இவ்­வா­றான பனிப்­போ­ருக்கு மத்­தியில் கலைக்­கப்­பட்­டுள்ள மூன்று மாகாண சபை­களில் இரண்டில் முத­ல­மைச்­சர்­க­ளாக இருந்த ஸ்ரீலங்கா  சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு இம்­முறை  முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் வாய்ப்பு கிடைக்­காது எனவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

இவ்­வா­றான நிலையில், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எதி­ராக எதிர்­வரும் தேர்­தல்­களில் கள­மி­றங்­க­வுள்ள   ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யினர் குறித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை தம்வசம் இழுக்கும்  முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. We need a geneuine pocket less CM from a national party for the East. We had two Muslim CM and a Tamil CM which is more than enough for our justification.

    ReplyDelete
  2. இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்று இருந்துவிட்டு போகலாம். ஆனால் அரசியல்வாதிகளின் விழுமியங்களின் அடிப்படையில் கூட்டுமொத்த சமுகத்தின் குறிப்பாக சிறுபான்மையினரின் கண்ணியம் மதிப்பீடு செய்யப்படுகிறது.
    எனவே எமது வாக்குகளின் பெறுமதியை நாமே மதிப்பிறக்கம் செய்யாது சமுக அந்தஸ்தை பாதுகாத்து பேணக்கூடிய நல்லொழுக்கம் உள்ளவர்களை தெரிவுசெய்ய வாக்குகளைப் பயன்படுத்த திடசங்கர்ப்பம் கொள்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.