October 27, 2017

கட்டாரில் பணிபுரிபவர்களுக்கு, அடித்த அதிர்ஷ்டம்

கட்டார் அர­சாங்­க­மா­னது தனது நாட்­டி­லுள்ள 2 மில்­லியன் வெளி நாட்டுத் தொழி­லா­ளர்­களைப் பாது­காப்­ப­தற்­கான புதிய சட்­ட ­மூ­ல­மொன்­றுக்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது.

கட்­டா­­ரி­லுள்ள வெளி­நாட்டுத் தொழி­லா­ளர்களுக்கு நிதி ஆத­ரவை வழங்கும் மேற்­படி சட்­ட­மூ­ல­மா­னது அங்கு பணி­யாற்றும் தொழி­லா­ளர்கள் உரிய வேத­னத்தைப் பெற்றுக் கொள்­வதை உறு­திப்­ப­டுத்தும் என அந்­நாட்டு தொழில் அமைச்சர் இஸ்ஸா அல் நுவா­ யிமி தெரி­வித்தார்.

'தொழி­லா­ளர்கள் ஆத­ரவு மற்றும் காப்­பு­றுதி நிதி' என அழைக்­கப்­படும் மேற்­படி நிதி­ய­மா­னது அமைச்­ச­ர­வையின் ஆத­ரவின் கீழ் சுயா­தீ­ன­மாக செயற்­ப­ட­வுள்­ள­தாக அவர் கூறினார்.

வெளிநாட்டுத் தொழி­லா­ளர்கள் தமது வாழ்க்கைச் செல­வி­னங்­க­ளுக்கு ஏற்ப ஊதி­யத்தைப் பெறு­வதை உறு­திப்­ப­டுத்தும் முக­மாக அவர்­க­ளுக்­கான ஆகக்குறைந்த ஊதிய அளவு உட்­பட புதிய நடை­மு­றைகள் கட்டார் அமைச்­ச­ர­வையால் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இடம்­பெற்ற கூட்­டத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. கட்­டாரில் வெளி­நாட்டுத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான ஆகக் குறைந்த ஊதிய அளவு நிர்­ண­யிக்­கப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும்.

கட்­டாரின் இந்த நகர்­வுக்கு சர்­வ­தேச வாணிப ஒன்­றிய கூட்­ட­மைப்பு வர­வேற்­ப­ளித்­துள்­ள­து.

இந்­நி­லையில் கட்டார் தனது ஊழியப் படையில் அதி­க­ள­வா­னோ­ருக்கு பங்­க­ளிப்புச் செய்த நாடு­க­ளுடன் 36 பர­ஸ்­பர உடன்­ப­டிக்­கை­களில் கைச்­சாத்­திட்­டுள்­ளது.

கட்டார் தொழில் அமைச்­ச­ருக்கும் அந்­நாட்­டி­லுள்ள தூத­ரகத் தலை­வர்­க­ளுக்­கு­மி­டையே இடம்­பெற்ற சந்­திப்­பை­ய­டுத்து மேற்­படி உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளன.

இந்த உடன்­ப­டிக்­கை­க­ளா­னது ஐக்­கிய நாடுகள் முகவர் நிலை­யங்­க­ளி­லொன்­றான சர்­வ­தேச தொழி­லா­ளர்கள் அமைப்பின் கூட்­ட­மொன்று இடம்­பெ­று­வ­தற்கு முதல்நாள் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. மேற்­படி தொழி­லாளர் அமைப்பு கட்­டாரில் குடி­யேற்றத் தொழி­லா­ளர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­பட்டு வரு­வதை முடி­வுக்கு கொண்டு வரு­மாறு அந்­நாட்டை எச்­ச­ரித்­தி­ருந்­தது.

எதிர்­வரும் நவம்பர் மாதக் காலக்­கெ­டு­வுக்குள் கட்டார் குடி­யேற்றத் தொழி­லா­ளர்கள் தொடர்பில் முன்­னேற்ற நிலையைக் காண்­பிக்க வேண்டும் எனவும் துஷ்­பி­ர­யோ­கங்கள் குறித்து உத்­தி­யோ­க­பூர்வ விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

கட்டார் நீண்­ட­கா­ல­மாக வெளி­நாட்டுத் தொழி­லா­ளர்கள் தமது தொழில்­களில் மாற்­றத்தைக் கொண்டு வரு­வ­தற்கும் நாட்டை விட்டு வெளியே­று­வ­தற்கும் அவர்­க­ளது தொழில்­த­ரு­நரின் அனு­ம­தியைப் பெற வலி­யு­றுத்தும் 'கபலா'என்ற கடு­மை­யான தொழில் ஏற்­பா­த­ரவு முறை­மையை செயற்­ப­டுத்தி வந்­தி­ருந்­தது. இந்­நி­லையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத­த்தில் கபலா முறைமை முடி­வுக்கு கொண்டு வரப்­ப­­டு­வதாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் அறி­வித்­தி­ருந்­தனர்.

இன அடிப்­ப­டையில் அல்­லாது அனைத்து தொழி­லா­ளர்­க­ளுக்கும் ஆகக் குறைந்த ஊதிய நிர்­ணயம், தொழி­லா­ளர்கள் கட்­டாரை விட்டு செல்­வதை தொழில்­த­ரு­நர்கள் இனி­மேலும் தடுக்க முடி­யாத நிலை, தொழி­லா­ளர்­க­ளுக்­கான ஆள­டை­யாள ஆவ­ணங்கள் அவர்­களை பணிக்கு அமர்த்தும் வர்த்­தக நிறு­வ­னங்­களால் அல்­லது அர­சாங்­கத்தால் வழங்­கப்­படல், மத்­திய அதி­கார சபை தொழில் ஒப்­பந்­தங்கள் குறித்து கவனம் செலுத்தி மோச­மான நிபந்­த­னை­களை தடுக்க நட­வ­டிக்கை எடுத்தல், பணி­யி­டங்­களில் ஊழிய சபை­களை ஸ்தாபித்து முறைப்­பா­டுகள் தொடர்பில் தீர்வு காணல் என்பனவற்றை உள்ளடக்கிய சீர்திருத்தங்கள் குறித்து கட்டார் அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டாரில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளையொட்டி அங்கு பணியாற்றும் குடியேற்றத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அந்நாட்டுக்கு சர்வதேச ரீதியில் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment