Header Ads



ஹெல்மட் அணிவிக்காது பிள்ளைகளை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச்சென்ற பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை

சிலாபம் – கொழும்பு பிர­தான வீதியில் வென்­னப்­புவ நகரில் அமைந்­துள்ள பாட­சா­லை­க­ளி­லி­ருந்து தமது பிள்­ளை­களை பாது­காப்­பற்ற முறையில் தலைக்­க­வ­ச­மின்றி மோட்டார் சைக்­கிள்­களில் வீடு­க­ளுக்கு அழைத்துச் சென்று கொண்­டி­ருந்த 15 பெற்­றோர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரி­வித்­தனர்.

இவ்­வாறு தமது பிள்­ளை­களை பாது­காப்­பற்ற முறையில் மோட்டார் சைக்­கிள்­களில் அழைத்துச் சென்­ற­வர்­களுள் அதி­க­மானோர் தாய்­மார்கள் என்றும் அவர்கள் தமது பாது­காப்­புக்­காக மாத்­திரம் தலைக்­க­வசம் அணிந்து தமது பிள்­ளை­களைப் பாது­காப்பைக் கருத்தில் கொள்­ளாது செயற்­பட்­டதால் அவ்­வா­றான பெற்­றோர்­க­ளுக்கு எதி­ராக தண்டப் பணம் அற­வி­டு­வ­தற்­கான படிவம் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தாக வென்­னப்­புவ பொலிஸ் நிலைய வாகனப் போக்­கு­வ­ரத்துப் பிரவின் பொறுப்­ப­தி­காரி உப பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்சன் ரண­துங்க தெரி­வித்தார்.

இரண்டு மாண­வர்­களைத் தலைக்­க­வ­ச­மின்றி மோட்டார் சைக்­கிளில் ஏற்றிச் சென்று கொண்­டி­ருந்த ஒரு தந்­தை­யிடம் சாரதி அனு­ம­திப்­பத்­திரம், மோட்டார் சைக்­கி­ளுக்­கான காப்­பு­றுதிச் சான்­றிதழ் மற்றும் அனு­ம­திப்­பத்­திரம் எதுவும் இல்­லாத கார­ணத்­தினால் அந்த மோட்டார் சைக்­கி­ளுடன் குறித்த நப­ரையும் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்த நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

தமது பிள்­ளை­க­ளுக்­காக எத்­த­னையோ அர்ப்­ப­ணிப்­புக்­களைச் செய்யும் பெற்றோர் பெருந்­தெ­ருக்­களில் தமது பிள்­ளை­களின் பாது­காப்பைக் கவ­னத்தில் எடுக்­கா­தது பிரச்­சி­னைக்­கு­ரி­யது என்றும் வென்­னப்­புவ பொலிஸ் பிரிவில் இவ்­வாறு பிள்­ளை­களின் பாது­காப்பை கவ­னத்தில் எடுக்­காது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்கு எதிரான நடவடிக்கையினை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் வாகனப் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.