Header Ads



பாகிஸ்தானுக்கு ஆதரவாக, திலங்க சும­தி­பால ஆற்றிய உரை


சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களை வழ­மை­யான அடிப்­ப­டையில் நடத்­து­வ­தற்­காக பாகிஸ்தான் எடுத்­து­வரும் முயற்­சிக்கு ஒத்­து­ழைப்பு நல்­கு­வ­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால உறுதி வழங்­கினார்.

பாகிஸ்­தா­னு­ட­னான மூன்று போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்­காக இலங்கை அணி குறு­கிய விஜயம் செய்­த­போது லாகூரில் நடை­பெற்ற ஊடக சந்­திப்பில் திலங்க சும­தி­பால இந்த உறு­திப்­பாட்டை வழங்­கினார். இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்­டிகள் நடு­நி­லை­யான அபு­தா­பியில் நடை­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதி­கா­ரிகள் ஆகி­யோ­ருடன் லாகூர் போட்­டிக்கு முன்­ப­தாக இலங்கை, பாகிஸ்தான் அணி­யினர் எடுத்­துக்­கொண்ட படம்.

நாங்கள் 30 வரு­ட­கால யுத்­தத்தை அனு­ப­வித்­துள்­ளதால் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வதன் அர்த்­தத்தை நன்கு அறிவோம். இலங்­கையில் 30 வரு­டங்­க­ளுக்கு மேல் யுத்தம் நடந்­தது. ஆனால் இலங்­கையில் இரண்டு அணி­க­ளுக்கும் இடையில் விளை­யா­டு­வ­தற்கு ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட எந்த ஒரு போட்­டி­யையும் பாகிஸ்தான் இரத்துச் செய்­த­தில்லை என்றார் திலங்க சும­தி­பால.

மாறு­பட்ட மனி­தர்கள் இருக்­கின்­றார்கள். சிறு­வர்கள், பெண்கள் ஆகி­யோ­ரையும் சமய வழி­பாட்டுத் தளங்கள், விளை­யாட்­டுத்­துறை ஆகி­ய­வற்­றையும் விட்டு ஒதுங்­கி­யி­ருங்கள் என அவர்­க­ளிடம் நாங்கள் கோரு­கின்றோம். எங்­களை விட்­டு­வி­டுங்கள். அமை­தி­யா­கவும் ஒத்­தி­சை­வு­டனும் கிரிக்கெட் விளை­யாட அனு­ம­தி­யுங்கள்.

கிரிக்கெட் விளை­யாட்டை நாங்கள் ர­சிக்­க­வேண்டும் என்­ப­துடன் எல்­லோ­ருக்கும் சந்­தர்ப்­பங்­களை வழங்க விரும்­பு­கின்றோம். அத்­துடன் விளை­யாட்டில் உள்ள மகிழ்ச்­சியை பகிர்­வ­தற்­கான வாய்ப்­பையும் தாருங்கள் என அவர் குறிப்­பிட்டார்.

நல்­லதோ, கெட்­டதோ, பாகிஸ்தான் கிரிக்­கெட்டும் அரசும் இலங்­கைக்கு ஆத­ரவு வழங்­கி­யது. இது வெறும் அர­சுடன் தொடர்­பு­டைய விட­ய­மல்ல. இலங்­கைக்கு எதி­ராக கடை­சி­யாக இடம்­பெற்ற சம்­ப­வத்தை நீங்கள் புரிந்­து­கொண்­டி­ருப்­பீர்கள். அப்­போ­தி­ருந்த உணர்­வுகள் வேறு. எனவே இதற்­கான ஆரம்­பத்­தை­யிட்டு பாகிஸ்தான் கிரிக்­கெட்­டுக்கு உத­வ­வேண்டும் என நாங்கள் எண்­ணினோம் என திலங்க மேலும் தெரி­வித்தார்.

கிரிக்­கெட்டில் பாகிஸ்தான் பல­வீ­ன­ம­டைந்தால் ஆசிய கிரிக்­கெட்டும் பல­வீ­ன­ம­டையும். அது உலக கிரிக்­கெட்டை மென்­மேலும் பல­வீ­ன­ம­டையச் செய்யும். உங்கள் பலமே எங்கள் பலம். நாம் ஒரு­வரை ஒருவர் கவ­னித்­துக்­கொள்­வது எமது பொறுப்­பாகும். அதனை நாங்கள் உறு­தி­யாக நம்­பு­கின்றோம் என்றார் அவர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தைப் பொறுத்தமட்டில் பாகிஸ்தான் கிரிக்­கெட்­டுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது மகிழ்ச்சி தரு­வ­துடன் அது எமது கடப்­பா­டா­கவும் கரு­து­கின்றோம் என திலங்க சும­தி­பால மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.