Header Ads



ஸ்மார்ட் போன் பாவிப்பவர்களுக்கு, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை


ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் வைபர், வட்சாப், ஐ.எம்.ஓ போன்ற செயலிகளின் வெரிஃபிகேசன் கோட் எனப்படும் உறுதிப்படுத்தும் இலக்கத்தை மற்றவர்களுடன் பகிர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இவ்வாறு உறுதிப்படுத்தல் இலக்கத்தை மற்றவர்களுடன் பகிர்வதன் காரணமாக, ஒருவரின் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி போலியான வைபர், வட்சப் போன்ற செயலிகளின் கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுதொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தங்களுக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அந்த குழு அறிவித்துள்ளது.

ஒரே நபரின் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி, பல்வேறு போலியான தகவல்பரிமாற்றக் கணக்குகள் திறக்கப்பட்டு முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன்காரணமாக குறித்த நபருக்கு சம்மந்தமில்லாத நபர்களிடம் இருந்து அழைப்புகள் கிடைக்கப்பெறுவதுடன், சில பிரச்சினைக்குரிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான போலியான கணக்குகள், சட்டவிரோதமான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பயன்டுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.