Header Ads



முஸ்லிம் கர்ப்பிணியை, காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகள்


முஸ்லிம் கர்ப்பிணி பெண் ஒருவரை இரு சிங்கள பொலிஸ் அதிகாரிகள் காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காந்தளாய் மணிக்கூட்டு கோபுர சந்தி வீதிக்கு நடுவில் திடீரென முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. சாரதியினால் முக்கச்சர வண்டியை இயக்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி நின்ற இடம் கொழும்பு திருகோணமலை பிரதான வீதி என்பதனால், பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் குழந்தை ஒன்றை பிரசவிக்கும் நிலையில் முஸ்லிம் தாய் ஒருவரை அவதானித்துள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் வீதியில் சென்ற மற்றொரு முச்சக்கர வண்டியை நிறுத்தி அந்த பெண்ணை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அரை மணித்தியாலங்களில் அந்த இடத்திற்கு வந்த பெண்ணின் கணவர் பொலிஸ் அதிகாரிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தனக்கு மகன் பிறந்துள்ளதாகவும், பொலிஸ் அதிகாரிகள் உதவி செய்திருக்கவில்லை என்றால் ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்திற்கு வழி ஏற்படுத்திய கந்தளாய் பொலிஸ் தலைமையக போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை பலர் பாராட்டியுள்ளனர்.


11 comments:

  1. இங்கு சொல்லப்பட்ட விடயத்தில் கடமை, மிகைப்படுத்தல் என்ற இரு அம்சங்கள் காணப்படுகின்றன. பொலிஸார் தமது கடமையை மிகச்சிறப்பாக மேற்கொண்டமை பாராட்டுக்குரியது. அவர்களுக்கு எமது நன்றிகளும் உரித்தாகுக.
    இரண்டாவது விடயம் முஸ்லிம், தமிழ், சிங்களம் என்று ஒவ்வொரு விடயத்தையும் அணுகுவது. பாதிக்கப்பட்டு உதவிபெற்றவரும் உதவியவரும் யாராக இருப்பினும் மனிதம் நிலைத்திருக்கும் காலமெல்லாம் இதனைக்காணலாம். ஆனால் நமது பார்வையில் தான் எங்கோ கோளாறு உள்ளது.

    ReplyDelete
  2. What they did is their duty and also humanity. I recommend jaffna muslim to avoid words pointing particular community or relegion. Officers ddnt do that because of the mother is muslim.they do same who ever it is.

    I think we muslims only being route cause for racism.

    ReplyDelete
  3. Here after don't use words like singla police.. muslime man.. tamil man.. ! We all srilankan,

    ReplyDelete
  4. Please don't use words singhale police, muslim man/woman, tamil man / wonen.. ect... ! News is good. But your headline is very bad.

    ReplyDelete
  5. யாராக இருந்தாலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் உதவுவார்கள். உதவத்தான் வேண்டும்... ஆனால் மனித நேயம் மரணித்து வருகின்ற இக்காலத்தில் இத்தகைய மனிதநேயப் பணிகளைப் பாராட்டியும், பதவியுயர்த்தியும் தான் வளர்த்தெடுக்க வேண்டியநிலை.

    ReplyDelete
  6. இது இப்படிப் பாராட்டப் பட வேண்டிய விடயமல்ல.அது அவரகளின் கடமை.அந்த இடத்த்தில் எவர் இருந்தாலும் இதையே செய்வார்கள்.இனம் பார்ப்பதில்லை.

    ReplyDelete
  7. மனித நேயத்துக்கு இனம் சாதி தெரியாது , பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. Dear Police Officers I salute you. May Allah Almighty bless both of your family and guide you.

    ReplyDelete

Powered by Blogger.