Header Ads



பாராளுமன்றத்தை குண்டினால் தாக்குவேனா..? விமல் வீரவன்ச விளக்கம்

தமது உபாயங்களுக்குள் அனைவரும் சிக்கிக்கொண்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்த கருத்து தொடர்பில், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

விமல் வீரவங்ச கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.

எந்தவகையிலாவது பிரிவினை அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் நாடாளுமன்றத்தில் 3இல் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால் நாடு பாரிய இன்னல்களை சந்திக்கும்.

இதற்கு 76 பேர் வாக்களிப்பதை தடுக்கவேண்டும்.

இல்லையென்றால் மறுநாள் நாடாளுமன்றத்திற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என விமல் வீரவங்ச குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சிங்களம் தெரியாத சிறுபிள்ளை தனமானவர்களுக்கு ஒன்றும் விளங்காது என்று கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நாடாளுமன்றத்தின் அதிகாரம் இல்லாமல் போகும்.

இவ்வாறான நாடாளுமன்றம் இருந்தும் பலனில்லை.

அதனையே குண்டு தாக்குதல் கதை மூலம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த அவர், இதனைத்தவிர உண்மையில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அதன் பொருள் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்

இந்த நிலையில் குண்டு தாக்குதல் என்று பொருள்பட கருத்து வெளியிட்டால், அதுதொடர்பில் அனைவருக்கும் முக்கிய கவனம் செலுத்துவார்கள்.

அப்போது புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக மேலும் தீவிரமாக செயற்பட முடியும் என தான் கருத்தியதாகவும், தமது பொறிக்குள் அனைவரும் சிக்கியுள்ளதாகவும் விமல் வீரவங்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெளியிட்ட இந்த அறிவிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Interpretation is not taken as it will differ person to person.

    Parliament should consider the Direct Statement and Its Direct Meaning to Act accordingly.

    ReplyDelete

Powered by Blogger.