October 28, 2017

நான், தபால் காரனாக உள்ளேன் - மனோ

மதம் மற்றும் மொழி ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு பாட­சா­லை­களை உரு­வாக்­கு­வதை நிறுத்த வேண்டும். காலா­வ­தி­யான அர­சி­யல்­வா­திகள் ஒதுங்­கிக்­கொண்டு இவ்­வா­றான புதிய சிந்­த­னைக­ளுக்­காக இளை­ஞர்­க­ளுக்கு வாய்ப்­புகள் அளிக்­கப்­பட வேண்டும் என தெரி­வித்த அமைச்சர் மனோ கணேசன், தமிழ் மற்றும் சிங்­கள சமூ­கத்தின் புரிந்­து­ணர்­விற்­காக தக­வல்­களை கொண்டு செல்ல கூடிய தபால் கார­ணமாக உள்ளேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

இலங்கை திரைப்­பட கூட்­டுத்­தா­ப­னத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கூறு­கையில், 

மொழி உரிமை இல்லை என்றால் எந்­த­ளவு பிரச்­சி­னைகள் ஏற்­படும் என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். அதனை பிர­தி­ப­லிக்கும் வகையில் இன்று வெளியி­டப்­பட்ட கைய­டக்க தொலை­பே­சியில் எடுக்­கப்­பட்ட குறுந் திரைப்­ப­டங்­களில் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இவற்றை தொடர அனு­ம­திக்க இய­லாது. மதம் மற்றும் மொழி ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு பாட­சா­லை­களை உரு­வாக்­கு­வதை நிறுத்த வேண்டும். அவ்­வாறு செய்ய விட்டால் ஒரு நாளும் இலங்­கையை  திருத்த முடி­யாது. 

தேசிய கீதம் விவ­கா­ரத்தில் கூட 1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் பெற்ற போது இரண்டு மொழி­க­ளிலும் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது. ஆனால் அதன்­பின்னர் தமிழில் இசைக்­கப்­ப­ட­வில்லை. மீண்டும் தமிழில் தேசிய கீதத்தை இசைப்­ப­தற்கு எமக்கு 70 ஆண்­டுகள் சென்­றுள்­ளன. இதுவே மாற்றம். தாய்­மொ­ழியில் தேசிய கீதத்தை இசைக்­கும்­போது உணர்வு பூர்­வ­மாக அனு­ப­வித்து இசைக்க முடி­கின்­றது. 

புரி­யாத மொழியில் பாடு­வதால் எவ்­வி­த­மான பலனும் இல்லை. வடக்­கிலும் தெற்­கிலும் அடிப்­படை வாதிகள் உள்­ளனர். அதி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்­காக பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றனர். அவற்­றுக்கு வாய்ப்­ப­ளிக்க முடி­யாது. நான் இந்­நாட்டில் ஜனா­தி­ப­தி­யாக போவ­தில்லை. பிர­த­மா­ரா­கு­வதும் இல்லை. அமைச்­ச­ராக தொடர்ந்து இருக்­கப்­போ­வதும் இல்லை. 

காலா­வ­தி­யான அர­சி­யல்­வா­திகள் ஒதுங்­கிக்­கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் தெற்கில் இந்த பிரச்­சினை உள்­ளது. இளை­ஞர்­க­ளுக்கு வாய்ப்­புகள் அளிக்­கப்­பட வேண்டும். அப்­போது தான் புதிய சிந்­த­னைகள் பிறக்கும். பழ­மை­யான மர­புகள் மற்றும் சம்­பி­ர­தா­யங்­களில் இருந்து வெளியில் வர­வேண்டும். தமிழ் மக்­க­ளுக்­குள்ள பிரச்­சி­னைகள் என்ன என்­பது எனக்கு நன்கு தெரியும். அதே­போன்று இந்த விடயத்தில் சிங்கள மக்களுக்குள்ள சந்தேகங்களும் எனக்கு தெரியும். எனவே இந்த இரண்டு சமூகங்களுக்கும் தகவல்களை கொண்டு செல்லக்கூடிய தபால் காரனாக நான் உள்ளேன். இரு தரப்பையும் இணைக்கும் பாலமாகவும் உள்ளேன் என தெரிவித்தார்.

8 கருத்துரைகள்:

கிட்ட தட்ட 20 வருடங்களாக அரசியலுலிருக்கும் மனோ கணேஷன் ஒதுங்கிக்கொண்டு இளையோருக்கு வாய்ப்பளித்து மற்றைய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழட்டுமே?

Manoganesan is respectable politecian.he must be continue.

Y your stomach is burning like this??

Are u drunk? he is putting a statement "Elder politicians needs to give place to youngers". In my view he also elder.until now he is upto 20 years in political. So he can start from him. What's wrong on my comment based on his statement? are u think still he is teenager or younger?

Manoghanesan is a outspoken politician. If we take 15 gently typed-politicians, Mano will come one of them. we expect him to be the common politician for all divisions.

Well done மனோகணேஷன்.

வடக்கு-கிழக்கு க்கு வெளியே வாழும் தமிழர்கள் அணைவருக்கும் உங்கள் சேவைகள் தொடரட்டும்.

Amanda Sangari is a clerk.

Mano is a postman.

Useless guys.

Mr GTX,
By out dated politicians he means that some politicians are still spreading racism between tamil and sinhala for their political purpose inorder to create fights among them & by using the causes of the war such as displacement and casulalities of minority, the expired politicians will take the advantage of that like making illegal settlement, spreading their religion & raping 7 women with the endorsement of their religion, taking over the others land and interfering in the victim's political rights.
Thats what Mr. Mano means by the expired politician & it can be Rishad badiudeen, adhavudulla, sibli farook or any other muslm leaders.
There is no age limit for the short term politicians & this is a readon mano asking to retire the muslim politicians

Post a Comment